Saturday, January 28, 2012

தாரதோஷம்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதுதான் நம்முடைய இந்திய கலாச்சாரமாகும். மேல நாடுகளே நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம்  நம்முடைய கட்டுப்பாடான தாம்பத்ய வாழ்க்கைதான். பெண்கள் அனைவரும் சீதையாகவும், ஆண்கள் அனைவரும் ராமனாகவும் வாழத்தான் ஆசைபடுவார்கள். ஆனால், அந்த ஆசையானது எல்லோருக்குமே பூர்த்தியாகி விடுவதில்லை.  சில சமய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை நிலை தடுமாறச் செய்து விடுகிறது.

மனரீதியான பிரச்சினைகளும். உடல் ரீதியான தேவைகளும் வாழ்க்கைத் துணையைவிட மற்றவர்களிடம் நிறைவேறும் போது, மனமும் அவரைநாடி செல்கிறது. வீட்டு சாப்பாடு சரியில்லாத போது நல்ல உணவு விடுதியை தேடிச் செல்வதைப் போல இது சரியா தவறா என்ற வாதத்தை முன் வைத்தால் நம்முடைய கலாச்சாரப்படி தவறுதான். ஆனால் இது மேலோட்டமான கருத்து ஆகும். வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவருக்குதான் தெரியும் அதிலுள்ள பிரச்சனைகளும்.

இப்படி தடம் மாறி வாழ்க்கை செல்வதற்கும் ஜோதிட ரீதியாக உள்ள கிரக அமைப்புகளே காரணமாக இருக்கின்றன. தடம் மாறி வாழுபவர்களை இந்த சமூகம் தூற்றத்தான் செய்யும் என்றாலும், ஒவ்வொருவரிடம் என் ஜாதக நிலை இவ்வாறு உள்ளது என விளக்கம் கூற முடியாது. எவ்வளவுதான் நல்லவராக வாழ மனம் நினைத்தாலும்  கிரக நிலையின் ஆதிக்கங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒருவகையில் தவறுதான் செய்வார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடான களத்திரஸ்தானமும், களத்திரகாரகன் சுக்கிரனும் மற்ற கிரகச் சேர்க்கைப் பெற்றிருக்கின்ற போதும், 7ம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்  போது களத்திரதோஷம் எனும் தாரதோஷம் ஏற்படுகிறது. பொதுவாக 7ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றதோ, அது போல சுக்கிரனுடன் எத்தனை கிரகங்கள் சேர்க்கைப்பெற்றுள்ளதோ, 7ம் அதிபதி எத்தனை கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளரோ அத்தனை நபர்கள் அவர்களின் வாழ்கையில் குறிக்கிடுவாகள்.  அதனால் தான் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு 7ம் வீடு சுத்தமாகவும், 7ம் அதிபதி கிரக சேர்க்கைகளின்றியும் அமைய வேண்டும் என்று கூறுவார்கள்.

நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு,கேது போன்ற  பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் 7ல் அமைந்தாலோ, 7ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலோ, சுக்கிரனுடன் இணைந்திருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தாரம் அமையும். இதில் சூரியன், செவ்வாய் ஒரு ராசியில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு.குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டிலும் 2க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமைகின்ற போதும்  ஜென்ம  ராசி என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரனுக்கு 7ம் வீட்டில்  இரண்டிற்கும், மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7ம்  வீட்டில்   இரண்டிற்கும், மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7ம் அதிபதி 2க்கும் மேற்பட்ட பாவக்கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், களத்திரகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரனுக்கு 7ம் வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் களத்திரதோஷம் உண்டாகி மண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் 7ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெறுகிறதோ, 7ம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அத்தனை  தாரங்கள் கண்டிப்பாக அமையும். அதிலும்  தாரதோஷம் உண்டான நபர்களுக்கு இளம் வயதில் திருமணம் நடைபெற்றால் மற்றொரு தாரமோ அல்லது வேறு ஒரு நபருடன் தொடர்போ உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்ற போது எவ்வளவு தான் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சிகர மானதாகவும், நிம்மதியாகவும் இருந்தாலும் வேறு ஏதாவது ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டு குடும்ப வாழ்வில் நிம்மதி குறையும்.

Murugu Balamurugan

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி ஐயா..

Unknown said...

Good explanation

Ramya said...

En kanavarkunthara dhosham ulathu. Nangal entha pariharamum seiyavilai. Ipodhu oru peninthodarpu ulathu Kalyanam seiyum nokam ulathu. Ithanai thavirka patharam ulatha. Thirumanam agi 8 yrs agugirathu