Saturday, May 5, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி


நல்ல நிர்வாகத் திறனைக் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் 17.05.2012 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதுடன், சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்ககூடிய யோகமும் உண்டா கும். குரு 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்வதால் தொழில் வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றிலும் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி 7ல் சஞ் சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பதும் உத்தமம். கூட்டு தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரள மாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும்.
முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

 

 

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளை அன்றாடம் சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். அவ்வப் போது கைகால்களில் வலி, உடல்சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். பெரிய கெடுதியில்லை.

குடும்பம் பொருளாதார நிலை

உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ல் தனக்காரகன் குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகி குடும்பத்தில் மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். புத்திரர்களாலும் மகிழ்ச்சி நிலவும். 7ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அற்புதமான நற்பலனை பெறமுடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பதவி உயர்வுகள் கிடைக்க சற்று தாமதமாகலாம். சில ருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வருவதால் லாபங்கள் பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும், வாக்குவாதங்களும் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் காரியங்களில் தடையில்லாமல் லாபம் கிட்டும்.

கமிஷன் ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் துறையிலிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். பெரிய தொகைகளை எளிதில் ஈடு படுத்தி பல மனிதர்களின் தொடர்பையும், நட்பையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். உங்களுக் குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

அரசியல் வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு ஏற்றத்தை அளிக்கும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் தேடி வரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பல பெரிய மனிதர்களின் தொடர்பையும் மக்களின் ஆதரவையும் அமோகமாகப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமை வதால் லாபமும் தாராளமாகவே இருக்கும். புதிய முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கால்நடைகளாலும் லாபத்தை பெற முடியும். கூலியாட்களாலும் சிறு சிறு பிரச்சனை களை சந்தித்தாலும் மக்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். 

பெண்களுக்கு

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்ச னைகளையும் சந்திப்பீர்கள். சிலருக்கு பூமிமனை யோகமும், ஆடை ஆபரண சேர்க்கைகளும் தாராளமாகவே இருக்கும்.

படிப்பு

கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த படி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி வாழ்க்கை தரமும் உயரும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு கேது சேர்க்கைப் பெற்று இருப்பது கோடீஸ் வரயோகத்தை உண் டாக்கும் அமைப்பாகும். இதனால் குடும்பத்தின் பொருளாதாரநிலையானது சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் காரியங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருப்ப தால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். போட்டி பொறாமைகள் இருக்காது. பயணங்களாலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும்.

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை

உங்கள் ஜென்ம ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களிலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் பல வழிகளில் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 2ல் கேது, 8ல் ராகு சஞ்சரிப்ப தால் உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதால் நற்பலனை பெறமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பு டையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமை களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் கௌரவமான பதவிகளும் கிடைக்கும். சேமிப்புகள் பெருகும். 

குருபகவான் வக்ர கதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இக்காலங்களில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிவகாரங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்ற வற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். சனி 7ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடு களும், உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்களும் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர் களும், குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர் களும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரும் 2.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7லும் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று கவன முடனிருப்பதும் மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தி யோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு கூடும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருதனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இக் காலங்களில் பல மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 7ல் சஞ்சரிக்கும் சனியும் வக்ரகதியிலிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும் வளமும் கூடும். ஜென்ம ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்து வது நல்லது. உற்றார், உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளும் தடையின்p அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறி பொருளாதாரமும் உயரும். கல்வி பயிலுபவர் களுக்கு அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 7ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். சுபகாரியங் கள் தடபுடலாக காணப்பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் படிப்படி யாக குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ராகுகேது சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர்களிடம் விட்டுகொடுத்து நடப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசி யல் வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதை யும் உயரும். மாண்புமிகு பதவிகளும் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலா கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அஸ்வினி

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பொதுவாக எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகம் இருக்கும். இந்த குருபெயர்ச்சியின் மூலம் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

பரணி

பரணியில் பிறந்து தரணியை ஆளக்கூடிய ஆற் றல் கொண்ட உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி யானது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச் சிக்கும், சுபிட்சத்திற்கும் பஞ்சம் இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுமளவிற்கு பலமும் வலிமையும் கூடும். உத்தியோகஸ் தர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சேமிப்புகள் பெருகும் கொடுத்த கடன்களும் வசூலாகும்.

கார்த்திகை

சிறந்த உழைப்பாற்றலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இந்த குருபெயர்ச்சியானது பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங் களிலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியா பாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ் தர்களும் உயர்வடைவார்கள். பதவி உயர்வு களும் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 9,18,27  திசை: தெற்கு
கிழமை: செவ்வாய் கல்: பவளம்
நிறம்: ஆழ்சிவப்பு தெய்வம்: முருகன்

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். என்றாலும் சனி 7ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது, ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

No comments: