Monday, May 7, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசிதயாள சிந்தனையும், நற்பண்புகளும் நிறைந்த கன்னிராசி நேயர்களே!

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரி யங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவு கள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவை கள் பூர்த்தியாவதும் பொன்பொருள் சேரும். ஆசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் அமையும். உத்தியோ கஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகுகேது 2,8 ல் சஞ்சரிக்க இருப்பது உங்க ளுக்கு ஏழரைச்சனி தொடருவதும் சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத் தில் சற்று கவனம் செலுத்துவதும் முன் கோபத்தை குறைத்து உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் மிகவும் உத்தமம்.முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். அவ்வப்போது சிறுசிறு மருத்துவ செலவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளும், மனசஞ்சலங்களும் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய மன தைரியமும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார

தனக்காரகன் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்ச மான நிலை உண்டாகும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். 2ல் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உற்றார் உறவினர்க ளிடம் வீண் வாக்குவாதங்களும் ஏற்படும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணிபுரிவோருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுக ளால் வேலை பளுவும் குறையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் விடாமுயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். பேச்சில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் மேலும் பல முன் னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் சாதகப்பலன் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போருக்கு சிறப்பான லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருப்பதால் கொடுத்த கடன்கள் யாவும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைக ளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். இதுவரை இருந்துவந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரும். மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் அனைத்து கட்சிகளிடமும் சுமூகமாக இருக்க முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர் வெளி நாடுகளுக்குச் செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த லாபமும் கிட்டும். நீர்வளமும், நிலவளமும் மிக சரியாக இருப்பதால் குறிப்பிட்ட பயிர்களை விவசாயம் செய்து லாபத்தை காணமுடியும். பணவரவுகள் தாராளமாக இருப்ப தால் பூமி மனை போன்றவற்றையும் வாங்கும் நோக்கம் நிறைவேறும்

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவிற்கு பின் உடனடியாக குணமாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொன்பொருள் சேருவதுடன் நவீன பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். பணிபுரிபவர்க ளுக்கு தடைப்பட்டிருந்த உயர்வுகள் கிடைத்து வேலைபளு குறையும்

படிப்பு

கல்வியிலிருந்த மந்த நிலை விலகி ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப் பெண்களும் கிடைக்கப்பெறும். உடன் பழகு பவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக் கும். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் மேலும் உற்சாகத்தை அளிக்கும்

ஸ்பெகுலேஷன்

ஷேர், லாட்டரி ரேஸ் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். வாழ்வில் திடீர் உயர்வுகள் உண்டாகும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் பல வழிகளில் தேடிவரும். பூர்வீக சொத்துக்களாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி தரும். திருமணம் போன்ற சுப காரியங் களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பதால் பல நற்பலன்களை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் கிடைக் கப்பெறும் அபிவிருத்தியை பெருக்குவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்.
குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சுப காரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களின் வருகை யால் பல நற்பலன்கள் அமையும். கணவன் மனைவி சற்று விட்டுகொடுத்து நடப்பது நல்லது. முன்கோபத்தை குறைப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் பல நற்பலன்களை அடைய வழிவகுக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். உயரதிகாரிகளிடமும் நல்ல பெயரை எடுக்க முடியும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி திறனும் உயரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் பண விஷயங்களில் கவனமுட னிருப்பது நல்லது. நம்பியவர்களே ஏமாற்றுவார் கள். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தாலும் வீண்சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள். ஏழரை சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2லும் கேது 8லும் சஞ்சரிக்கவிருப்பதும் சாதகமான அமைப்பு என கூற முடியாது. கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும், உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை குறைவும் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் தேக்கம் ஏற்படாது. எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களும் குறையும். 

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலத்தில் கடந்த காலத்திலிருந்த பிரச்சனைகள் சற்று குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் துணை அமையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தநிலைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வந்து லாபங்களை கொடுக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவர்களால் பயணங் களை மேற்கொள்வீர்கள். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய மனிதர்களின்  ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக் கும். அரசு வழியிலும் ஆதரவுகள் கிடைக்கும். அரசியல் வாதிகள் பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் மக்களின் ஆதரவை பெற முடியும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகளுக்கு பங்கம் இருக்காது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும். கணவன் மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன் றினாலும் ஒற்றுமைக்குறையாது. நெருங்கியவர் களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். கடன்களும் குறையும்.

உத்திரம் 2,3,4 பாதங்கள்

பிறர் மனதை புண்படுத்தாமல் பேசகூடிய ஆற்றல் கொண்ட உத்திர நட்சத்திர நேயர்களே! குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்த வர்களுக்கு வரன்கள் தேடிவரும். பொன்பொருள் சேரும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கப்பெறும்.

அத்தம்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக அக்கறைக்கொண்ட அத்த நட்சத்திர நேயர்களே! குருபகவான் பாக்கியஸ்தானமான 9ல் சஞ்சரிப் பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவா தங்கள் தோன்றினாலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை 1,2 பாதங்கள்

மனம் திறந்து பேசக்கூடிய பண்புகொண்ட சித்திரை நட்சத்திர நேயர்களே! குருபாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் முன்கோபத்தை குறைப்பதும் நல்லது. உத்தி யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங் களும் கிடைக்கப்பெறும். பொன்பொருள் சேரும். சேமிக்கவும் முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 5,14,23  கிழமை:புதன்
நிறம்:பச்சை  கல்:மரகதம்
திசை:வடக்கு  தெய்வம்:விஷ்ணு

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரித்தாலும் ஏழரை சனி நடைபெறுவதால் சனிபகவானுக்கு சனிக்கிழமை தோறும் எள் எண்ணெயில் தீபமேற்றி கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி நீல நிற சங்குபூக்களால் அர்ச்சனை செய்யவும். வரும்1.12.2012 முதல் ராகுகேது 2,8ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

No comments: