Wednesday, May 16, 2012

வாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்

     வீடு என்றால் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையும் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகமும், படுத்தால் நிம்மதியான உறக்கமும் வருவதாக வீடு அமைய வேண்டும். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் என்று கேட்டார் பாரதி. அவர் கேட்டது போலவே எல்லாரும் கேட்டிருந்தால் அனைவருமே காணி நிலத்திற்காவது சொந்தகாரர்களாகி இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் படைத்த மனித தெய்வங்கள் வாழ்கின்ற பூமியா இது? பணம் படைத்தவர்கள் ஏராளமான இடங்களை வளைத்துப் போட்டு கோடீஸ்வரர்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வசதியே இல்லாதவர்கள் கூவம் ஆற்றில் குடிசை கட்டி வாழ்வதற்கோ, ரோட்டோரங்களில் தங்குவதற்கோ தயங்குவதில்லை. ஆனால் இந்த நடுத்தர வர்கம் என்ற ஒன்று இருக்கிறதே அவர்கள் படும் பாடு அப்பப்பா சொல்லிமாளாது. கையளவு நிலம் கூட வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள். எந்த பராசக்தியிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை. நிறைய ரியல் எஸ்டேட்டுகள் முளைத்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆள் அறவமற்ற இடத்திற்கு இங்கு கார் வரும், பஸ் வரும், ரயில் வரும் முடிந்தால் வான ஊர்தியே வந்திறங்கும் என்று புளுகு மூட்டையை  அவிழ்த்து விடுவதுடன் எங்களிடம் வாருங்கள் ஒரு மனை வாங்கினால் ஒன்றை இலவசமாக பெறுங்கள் என்ற அழைப்பு வேறு. சரி எப்படியோ கஷ்டபட்டு ஒரு மனையை வாங்கி விடுகிறோம் என்று வைத்து கொள்வோம். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். நமக்கென ஒரு வீடு நம் குடும்பம் நம் வாழ்க்கை என நாமே காணும் கனவுகள் எக்கச்சக்கம் என்றாலும் வயல் வெளிகள், வாய்க்கால், ஆறு, ஏரி குளங்கள் அனைத்தும் பிளாட் போட்டு விற்கப்பட்டு கொண்டிருப்பது தான் கொடுமை. இனி அரிசிக்கும், தண்ணிருக்கும் கூட அடுத்த நாட்டை எதிர்பார்க்க கூடிய அவல நிலையும் உண்டாகலாம்.
    மக்கள் தொகை பெருக பெருக இடப்பற்றா குறையும் ஏற்படுவது நியாயம் தானே இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயரும் என ஆராய்ச்சியாளர்களும் கருத்து கணிப்பை கூறியுள்ளனர்.
     எது  எப்படியோ நமக்கென ஒரு இடத்தை வாங்கி விட்போம் என வைத்துக் கொள்வோம் அதில் வாஸ்துப்படி எப்படி வீடு கட்ட வேண்டும். நாம் வாங்கும் மனையின் நீள, அகல எத்தனை அடிகள் இருக்க வேண்டும். எந்ததெந்த அளவுகளில் வீட்டின் நீள அகலம் இருந்தால் நற்பலன் கிட்டும். எத்தனை அடிகளில் வீட்டின் மனை இருக்க கூடாது என்பதற்கெல்லாம் வாஸ்து ரீதியாக சரியான விதிகள் உண்டு. ஒரு  மனையின் மொத்த அளவில் கட்டப்படும் வீட்டின் அமைப்பு, அறைகள் மற்றும் சகல விஷயமும் எப்படி அமைந்தால் நன்மை தீமையான பலன்கள் உண்டாகும் என்பதனை பார்ப்போம்.
ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

No comments: