Monday, May 7, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி

குரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி

கவர்ச்சியான முகமும், கனிவான பேச்சும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

வரும் 17.05.2012ல ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். கடன்கள் யாவும் குறையும். 02.12.2012 வரை சர்ப கிரகங்கள் 1,7ல் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் கேது 6ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகளும் விலகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உங்களுக்கு ஏழரைசனி தொடரு வதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ் தர்களும் உயர்வடைவார்கள். குருபார்வை 1,3,11 ஆகிய வீடுகளுக்கு இருப்பதால் எதிலும் முன்னேற்றமான பலன்களையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெற முடியும்.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுடனே சரியாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்களாலும் சற்று மருத்துவ செலவினை சந்திக்க நேரிடும். தூக்கமின்மை, கனவுதொல்லை, இல்வாழ்வில் ஈடுபாடு குறையும் போன்றவை உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரம்

தனக்காரகன் குருபகவான் ஜென்மராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் அமைந்து ஜென்ம ராசியையெ பார்வை செய்வது நல்ல அமைப்பாகும். கடந்த காலத்திலிருந்த பொருளா தார தடைகள் விலகி குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். ஜென்ம ராசியில் ராகுவும், 7ல் கேதுவும் 12ல் சனியும் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கி வர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் சில தடைகளுக்கு பின் அமையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு அலைச்சல் கள் ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டி ருந்த ஊதிய உயர்வும் கிடைக்கும். திறமை களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைவதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்பு களும், போட்டி பொறாமைகளும் இருந்த இடந்தெரியாமல் மறைவதால் புதிய வாய்ப்புகள் யாவும் உங்களையே தேடிவரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் உங்களின் பலமும் வலிமையும் கூடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்கள் ஏற்படு வதை தவிர்த்துகொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று நவீன கருவிகளையும் வாங்குவீர்கள்.

கமிஷன், ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறையிலிருப் பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் யாவும் லாபங்களாக மாறும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். இதுவரை இருந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண் டிய சூழ்நிலைகளும் அதனால் வீண் விரயங்க ளும் ஏற்பட்டாலும் குரு சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் லாபமும் சிறப்பாகவே இருக்கும். தொழிலாளர் களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். பூ.காய்கனி போன்றவற்றாலும், கால்நடைக ளாலும் லாபம் உண்டு. புதிய பூமிமனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே அன் யோன்யம் அதிகரிக்கும். சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருளும், சேமிப்பும் பெருகும், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

படிப்பு

கல்வியிலிருந்த மந்தநிலை சற்றே விலகும். பள்ளிப் படிப்பில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டா லும், கல்லூரிகளில் பயிலுபவர்கள் சிறப்பான சாதனையை செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர் களின் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைப்பீர்கள். நல்ல நட்புகளும் கிட்டும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் தாராளமாக பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தைப் பெறமுடியும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சமசப்தமஸ்தானமான 7ல் சஞ்சாரம் செய்வதால் கடந்த காலங்களிலிருந்த பொருளா தார நெருக்கடிகள் யாவும் குறைந்து பணவரவு கள் தாராளமாக இருக்கும்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடை பெறும். 1,7 ல் ராகுகேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகுவதால் கொடுத்த கடன்கள் யாவும் திருப்தி கரமாக வசூலாகும். தொழில் வியாபரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் குறைவதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பெரிய  தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளிலிலும் வெற்றி கிட்டும். கடன்கள் குறையும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களும் ஏற்றம் மிகுந்ததாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக கைகூடும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். ஆடை ஆபரணம் சேரும். கடன் தொல்லைகள் குறையும். நெருங்கியவர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் விட்டுகொடுத்து நடந்துகொண்டால் உடனே சரியாகும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். குறிப்பாக கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விருத்தியடையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. மாணவர்கள் முன்னேற்றமடைவார்கள்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பிறரை நம்பி பணத்தை கொடுத்தால் திரும்பப் பெற தாமதம் உண்டாகும். நம்பியவர்களே சில நேரங்களில் துரோகம் செய்ய துணிவார்கள். குடும்பத்தி லுள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்க ளுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளி வைக்கவும். 02.12.2012ல் ஏற்பட வுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிட்டும்.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 7ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டா கும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக் கேற்ற பணிகளை பெறமுடியும். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். தொழில் வியாபாரத்த pலும் புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத் தியை பெருக்குவீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலி லும் சரளமான நிலை ஏற்படும். அரசியல் வாதி களின் பெயர் புகழ் உயர கூடிய காலமாக இருக்கும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற் றங்கள் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு டையவைகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகள் மிகவும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குடும் பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் பூரிப்பு ஏற்படும். பணம் கொடுக் கல் வாங்கலில் திருப்திகரமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உத்தியோகத்தர்களின் தடைப்பட்ட உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் எதிர் பார்த்த இடமாற்றமும் கிடைத்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக அமையும். பெயர் புகழ் உயரும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டு டன் செயல்பட்டு முன்னேற்றமடைவார்கள்.

விசாகம் 4

வசீகரமான உடலமைப்பும் அமைதியான முகமும் கொண்ட விசாக நட்சத்திர நேயர்களே! குருபகவான் 7ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் யாவும் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

அனுஷம்

நடைமுறைக்கு ஏற்றவாறு வாழக்கூடிய அனுஷ நட்சத்திர நேயர்களே! குரு 7ம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்;ச்சியடைவார்கள். அரசியலில் இருப்ப வர்களுக்கும் பெயர் புகழ் உயரும் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

கேட்டை

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட கோட்டை நட்சத்திர நேயர்களே! குரு 7ல் சஞ்சரிக்கும் இக்காலங் களில் குடும்பத்தில் நினைத்தது நிறைவேறும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் அமையும். புத்திர பாக்கியமும் உண்டா கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 9,18,27  கிழமை:செவ்வாய்
நிறம்:சிவப்பு  கல்:பவளம்
திசை:தெற்கு  தெய்வம்:முருகன்

பரிகாரம்

குருபகவான் சாதகமாக சஞ்சரித்தாலும் விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் தொடர்ந்து சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 02.12.2012 வரை ராகுகேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது நல்லது. துர்க்கை வழிபாடு, விநாயகர்வழிபாடு செய்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவதும் உத்தமம்.
Post a Comment

Intha Naal