Sunday, May 6, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி

அழகான உடலமைப்பும், வசீகரமான கண்களும் கொண்ட கடக ராசி நேயர்களே!

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபக வான் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் வரும் 17.05.2012 முதல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். 4ல் சனி சஞ்சரிப்பதால் அர்த்ததாஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். கடன்கள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. பொன்பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். பயணங்களாலும் அனுகூலங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல ;படுவது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும்.

குருப்பெயர்ச்சி

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

please contact my postal adress  


Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072


தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக் கும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆரோக் கிய பாதிப்புகளும் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்களும் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். புத்திரர்களால் அவ்வப்போது சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் குறைவதால் மனநிலையும் நிம்மதியளிப்பதாக அமையும்.

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும், லஷ்மிகடாட்சம் உண்டாகும். பணவரவுகளிலி ருந்து நெருக்கடிகள் குறைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் குறையும். தடைப்பட்டு வந்த திருமண சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நிறைவேறும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெற முடியும். சிலருக்கு வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன்பொருள் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். புத்திர பாக்கியம் சற்று தாமதத்துடன் அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் இதுவரை இருந்து வந்த சோதனை களும் வேதனைகளும் விலகி உற்சாகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வேண்டிய இடமாற்றமும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தோடு சேர்ந்து மகிழ்வார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான பணி அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்திலிருந்து வந்த பொருளா தார நெருக்கடிகள் குறைவதால் லாபம் அதிகரிக்கும். அரசு வழியிலும் எதிர்பாராத அனு கூலங்கள் உண்டாகும். புதிய புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். கொடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்வதால் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நவீன கருவிகளை வாங்கி போடுவீர் கள். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும்.

கமிஷன், ஏஜென்ஸி

குருபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப் பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறையிலிருப்போருக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும். 

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரகூடிய காலமாகும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்ப தாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி களைப் பெற்று அனைவரின் அபிமானத்தையும் பெறுவீர்கள். கட்சி பணிக்காக வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லகூடிய வாய்ப்பும் உண்டா கும். பொருளாதார நிலையும் உயர்வடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் எதிர்பார்த்த வசூல் கிடைப்பதால் லாபமும் அதிகப்படியாகவே இருக்கும். காய்கனி பூ போன்றவற்றாலும் லாபங்கள் கிட்டும். கால்நடைகள் வளர்ப்பதாலும் அனுகூலங்கள் உண்டு. குடும்பத்தில் பொருளாதாரநிலை உயர் வடைவதால் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். கடன்களும் குறையும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்த பெண்க ளுக்கு வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியம் வேண்டுவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப் பலனைப் பெறமுடியும். பணவரவுகள் பஞ்சமின்றியிருப்ப தால் கடன்கள் குறைவதுடன் பொன் பொருளும் சேரும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு தகுந்த உயர்வுகள் கிட்டும்.

படிப்பு

கல்வியிலிருந்த மந்த நிலைகள் விலகி உற்சாகத்துடன் படிக்க முடியும். உடல் சோர்வு மனம் அலைபாயக் கூடிய நிலை போன்ற யாவும் மறையும். நல்ல மதிப்பெண்களை பெறுவதால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பெறுமையை தேடி தருவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் பாராட்டுதல்களும் மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் தைரியமாக பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11ல் கேது சேர்க்கையுடனிருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பணம் பல வழிகளில் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திரர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் தடை யின்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்க லில் திருப்திகரமான நிலை இருப்பதுடன் கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழும் உயரும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசு வழியிலும் அனுகூலங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர் களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதுடன் நிலுவையிலிருந்த பண தொகை களும் கிடைக்கப்பெற்று பொருளாதார நிலையும் உயரும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களும் உங்களுக்கு மேன்மையளிப்பதாகவே அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபம் அமையும். அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தியை பெருக்குவீர்கள். குடும்பத்திலும் மகி;ழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் தடையின்றி பூர்த்தி யாகும். வாங்கிய கடன்களை கொடுக்க முடியும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். உற்றார் உறவினர்களையும் பிள்ளைகளையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. பயணங் களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு பணியில் வேலை பளு குறைவதுடன் உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சி யளிப்பதாக அமையும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் இக்காலத்தில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடனி ருப்பதும், முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பதும் உத்தமம். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங் கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியா பாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமத மடையும். சில போட்டி பொறாமைகளையும் சமாளிக்க முடியும். வெளியூர் தொடர்புடை யவைகளால் சுமாரான லாபம் கிட்டும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சரிக்க இருப்பது சுமாரான அமைப்பாகும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகப்பலனை அடையமுடியும். 

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களில் கடந்த காலங்களி;ல் இருந்த பிரச்சனைகள் மறையும் பொருளாதார தடைகள் விலகி தாராள தனவரவுகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்களும் கைகூடும். சிலநேரங்களில் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். என்றாலும் சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது. சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு பூமி மனை வீடு வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டா கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். அரசியல்வாதிகளின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் பெருகும் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்திகரமான நிலையிருக்கும். உடனிருப்பவர் களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.


குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் சிறப்பான மேன்மைகளே உண்டாகும். உத்தியோகஸ்தர் களின் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்ப வர்களின் ஆதரவுகளும் எதையும் சாதிக்கும் ஆற்றலைக் கொடுக்கும். பணவரவுகள் தடையின்றியிருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்க ளும் தடையின்றி வசூலாகும். எடுக்கும் முயற்சி கள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்க ளைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்துவிலகி நல்ல மதிப்பெண்களைப்பெற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும்.

புனர்பூசம் 4ம் பாதம்

மற்றவர்களை வழிநடத்தி செல்லும் ஆற்றல் கொண்ட புனர்பூச நட்சத்திர நேயர்களே! குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு லாபஸ் தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் யாவும் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்த வர்களுக்கு வரன்கள் தேடிவரும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் எடுக்கும்  முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். கடன்கள் யாவும் குறையும்.

திருவாதிரை

சற்று மந்த நிலையில் செயல்பட்டாலும் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறும் பூசநட்சத்திர நேயர்களே! இந்த குருபெயர்ச்சியின் மூலம் குருபகவான் லாபஸ் தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் உத்தியோகத்திலிருப்பவர்களும் பணியில் தடைப்பட்ட பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பொன் பொருள் ஆடை ஆபரணம் போன்ற யாவும் சேரும்.

ஆயில்யம்

நல்ல அறிவாற்றலும் எதிலும் சிந்தித்து செயல்படும் நுண்ணறிவும் கொண்ட ஆயில்ய நட்சத்திர நேயர்களே! குருபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறப்பாகவெ நடைபெறும். உத்தியோகத்திலி ருப்பவர்களுக்கு பணியில் உயர்வுகள் தேடி வரும். பொன்பொருள் சேரும். மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

தேதி: 2,11,20,29 கிழமை:திங்கள்
நிறம்: வெள்ளை கல்:முத்து
திசை:வடகிழக்கு தெய்வம்:வெங்கடசலாபதி

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரித்தாலும் சனிக்குரிய பரிகாரங் களை செய்வது நல்லது. ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
Post a Comment

Intha Naal