Friday, July 13, 2012

நவரத்தினங்களில் முத்துவெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை.  இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில்  அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று  கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர். 

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். 

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக  வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். 

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து  விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. 

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக  இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும். 

முத்தின் நன்மைகள்


முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும். 

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது. 

யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக  ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும். 

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும். 

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது. 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

No comments: