Sunday, September 30, 2012

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


     இருபத்தேழு  நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும். நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

குடும்பம்;

     காதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், பேரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல்  தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது  என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

தொழில்;

     பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும்.  இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.

நோய்கள்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்க புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை விக்கல், இருமல் போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.

திசை பலன்கள்;

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து  வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.

இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.

முன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

நான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

சூரிய திசையும், சந்திர திசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

பூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
   
மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருச்சேறை;
      கும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்

ஒழுந்தியாப்பட்டு;

     திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

கோனேரி ராஜபுரம்;
      கும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்

திருச்சி;
     விருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

      மேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைபூசத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு

கூற வேண்டிய மந்திரம்
   
ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001
Friday, September 28, 2012

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


புனர்பூசம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்     இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது. இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில் காது தொண்டை, தோள் மார்பு போன்றவற்றையும், 4&ம் பாதம் நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் போன்றவற்றையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கே, கோ, ஹ, ஹி ஆகியவை தொடர் எழுத்துக்கள் கெ,கை ஆகியவையாகும்.

குணஅமைப்பு;

     புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும். அழகான அங்க லட்சனங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து கொள்வார்கள். ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.

குடும்பம்;

     புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். சிக்கனமானவர் என்றாலும் மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும், உணர்வுகளை புரிந்து கொண்டும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள். குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதிலிருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.

தொழில்;

     புனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். தெரியாது என்று எதையும் ஒதுக்கீடு வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தகதுறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால் இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

நோய்கள்;

      சிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உண்டாகும். நுரையிரலில் பாதிப்பு உண்டாகும். அதிக இனிப்பு வகைகளை விரும்பி உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.

திசை பலன்கள்;

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசை வரும். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம். குரு பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.
   
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம், செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மையடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.
   
மூன்றாவது திசையாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.
   
நான்காவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும். என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.
   
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.
   
மேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். இல்லை எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.
   
புனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார் பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
   
விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரக பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருந்து தேவன் குடி;
     கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார். அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவேட்களம்;
     கடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்

திருவெண்ணெய் நல்லூர்
     விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ தொலைவிலுள்ள இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம்.

திருப்பாச்சூர்;
     சென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும். இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.

கூற வேண்டிய மந்திரம்;
   
ஓம் தசரத குமாராய வித்மஹே
    ஸ்தா வல்லபாய தீமஹி
      தன்னோ ராம ப்ரசோத யாத்


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Wednesday, September 26, 2012

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


திருவாதிரை  நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தொண்டை, தோள், கைகள் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,க,ங,ச ஆகியவை தொடர் எழுத்துக்கள் கூ, கா ஆகியவை. இவர் மிதுன ராசிக்குரியவராவார்.

குண அமைப்பு;

     திரு என்ற அடைமொழியை கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால் முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்குள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும். தங்களைப் பற்றியே எந்த நேரமும் புகழ் பாடி கொண்டிருக்கும் தற்பெருமை கொண்டவர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் நண்பர்களை இழக்க கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க நேரிடும். பிறரை பற்றி இழிவாக பேசுவதில் வல்லவர்கள். காம வேட்கை அதிகமுள்ளவர்களாக இருப்பதால் பெண்களின் சாபத்திற்கு ஆளாவார்கள்.

குடும்பம்;
   
கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்களாதலால் காதலும் இவர்களுக்கு கைவந்த கலையே. மனைவி பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்று கொள்ள முடியும். வீடு மனை வண்டி வாகனங்களுடன் சுக போக வாழ்க்கை அமையும். உறவினர்களை விட நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரம் அதிகமுள்ள உணவுகளை விரும்பி உண்பார்கள்.

தொழில்;

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும் ஆதலால் புகழ் பெற்ற நிறுவனங்களில் பொருட்களை விற்று சம்பாதிப்பதில் வல்லவர்கள். அரசு பணியோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். வீடு நிலம் வாங்க விற்க உதவும் தரகர்களாகவும், மக்கள் தொடர்பு, காவல் சுற்றுலா, தொலைபேசி,கனரக வாகனங்களில் பணிபுரியும் வாய்ப்பு, வண்டி வாகனங்களை வாங்கி விற்பது, ஹார்வேர் பொருட்களை விற்பனை செய்வது போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள். நட்சத்திர ஒட்டல் நடத்துவது, பலர் மடாதிபதிகளாகவும், பள்ளி கல்லூரி மேலாளர்களாகவும் விளங்குவார்கள் 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.

நோய்கள்;

     தொண்டையில் பிரச்சனை, அம்மை ஆஸ்மா, இருமல், ரத்த அழுத்த சம்மந்த பட்ட பிரச்சனைகள், மர்ம உறுப்புகளில் பிரச்சனை போன்றவை உண்டாகும்.

திசை பலன்கள்;

     திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதம் வரும் திசா காலங்களைப் பற்றி அறியலாம். ராகு திசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையிடம் கருத்து வேறுபாடு, பெரியோர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை போன்றவை ஏற்பட்டாலும் ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும்.

     இரண்டாவதாக வரும் குருதிசை காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகளால் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.

     மூன்றாவதாக வரும் சனி திசையிலும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் முன்னேற்றமும், வேலையாட்களின் ஒத்துழைப்பும் கிட்டும். சனி பலமிழந்திருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

     நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும் வாய்ப்பு உண்டாகும்.

     ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும் ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதம் இரவு பத்து மணிக்கு மேல் வானத்தில் பிரகாசமாக ஜொலிப்பதை காணலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
   
திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளை திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டியிலிருந்து காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்;
   
திருவாதிரை நட்சத்திர காரர்கள் ஆடலரசன் அருள்பாலிக்கு எந்த திருத்தலங்களையும் வழிபடலாம். திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரரையும் வழிபாடு செய்யலாம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக பைரவரையும் வழிபடலாம் சென்னை திருவற்றியூரிலுள்ள ஸ்ரீ வடிவுடையம்மை, உடனுறை ஸ்ரீபடம் பக்க நாதர் மற்றும் மாணிக்க தியாகேஸ்வரரையும் வழிபடலாம். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலக்ஷமி கோயிலுள்ள 27 நட்சத்திர விருட்சங்களில் செங்காலி மரத்தையும் வழிபடலாம்.


கூற வேண்டிய மந்திரம்;

     ஓம் தத் புருஷாய வித்மஹே
     மஹா தேவாய தீமஹி
     தந்நோ ருத்ர, பிரசோதயாத்

திருவாதிரை நட்சத்திர காரர்களுக்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்;

     ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

Monday, September 24, 2012

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


    
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை பெறுவது மிருகசீரிஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இதில் 1,2&ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3,4&ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதனால் முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4&ம் பாதங்களில்  பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெமுத்துக்கள் வே, வோ, கா,கி ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வை, வொ ஆகியவையாகும்.

குண அமைப்பு ; 
     
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார்  சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம்  தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம்  இருக்கும்.

குடும்பம்;

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். பெண்களுக்கு தாய் வழியில் நிறைய வசதிகள் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை எல்லாம் வாங்கி போட்டு சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். அன்புக்கு கட்டுபட்டவராக இருந்தாலும் இவர்களுடைய குண அமைப்பால் கடைசி காலத்தில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழம் ஆற்றல் கொண்டவர்கள். பிள்ளைகளிடம் கராராக நடந்து கொள்வார்கள்.

தொழில்;

செய்யும் உத்தியோகத்தில் நெறி முறை தவறாமல் நடந்து கொள்வார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் இருக்-கும். நாட்டியம், நாடகம், சங்கீதம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். கடின உழைப்பாளிகள், பேச்சாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார்கள். கற்பூர புக்தி உண்டு என்று கூறலாம். அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் புகழ் பெறுவார்கள். பணம் படிப்பு போன்றவை குறைவாக இருந்தாலும் தான் நிறைவாக வாழ்வதாகவே காட்டி கொள்வார்கள். தங்களுடைய சொந்த கருத்துக்களை யாரிடமும் வெளியிடாமல் சாதித்துக் காட்டும் திறமைசாலிகள் என்றால் மிகையாகாது. வண்டி வாகனங்களை வேகமாக ஒட்டிச் செல்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.

நோய்கள்;

     மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைப்பதால் கை, கழத்து எலும்பு போன்றவற்றில் வலியும், வயிற்று வலி குடல் இறக்கம், நீரிழவு, வாதம் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். பயணங்களில் அடிபட கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

திசைபலன்கள்;

    மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக செவ்வாய் திசை வரும் செவ்வாய் திசை காலங்கள் மொத்தம் ஏழு வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு,ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு உண்டாகும் 

இரண்டாவது திசையாக ராகு திசையாக வரும். இத்திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு திசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவப் பெயர் பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

மூன்றாவதாக வரும் குருதிசை காலங்களில் சற்று உயர்வுகளை பெற முடியும். பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.

நான்காவதாக வரும் சனி திசை மாரக திசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வினையும், வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருவார். இரும்பு சம்மந்தப்பட்டவைகளால் அனுகூலமும் உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.
     
மிருக சீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் இரவில் பத்து மணிக்-கு தலைக்கு மேல் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;

திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்றவற்றை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

ஓசூர்;

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சந்திர சூடேஸ்வரர் மரக தாம்பிகை திருக்கோவில் 

கிருஷ்ண கிரி;

     தர்மபுரிக்கு வடக்கு 48 கி.மீ தொலைவிலுள்ள சந்திர மௌலிஸ்வரர், பார்வதியம்மை திருக்கோயில்

முசிறி;
கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள கற்பூர வல்லி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்

சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில்

எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி, உடனுறை ஏரி காத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்ட ராமன் திருக்கோயில் ஆகியவையாகும்.

கூற வேண்டிய மந்திரம்
     
விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.

மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்
     
சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Saturday, September 22, 2012

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


ரோகிணி நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்     இருப்தேழு நட்சத்திரங்களில் நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார்.இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முகம், வாய், நாக்கு, மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.

குண அமைப்பு;

    ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படத்தும் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் வருவதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான கலையாக இருந்தாலும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் தண்ணை நம்பியவர்களுக்கு உதவி  செய்பவர்களாகவும் பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள்.

குடும்பம்;

     இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும். எப்பொழுதும் கூட்டத்திலேயே இருக்க விரும்புவதால் சமுதாயத்திலும் நல்ல மதிப்பிருக்கும். இவர்களுடைய பேரும் புகழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். நினைத்ததை நினைத்தப்படி அடையும் ஆற்றல் உண்டு. காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.

தொழில்;

     ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இல்லாதவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். கவிதை கட்டுரை, கதை,நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரை துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள். உணவு விடுதி, ரெஸ்டாரண்ட், லாட்ஜ் ஒனர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு  சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. சமையல் கலை நிபுனர்களாகவும் இருப்பார்கள். இரும்பு வியாபாரமும் செய்வார்கள்.

நோய்கள்;

     ரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷபராசி என்பதால் அடிக்கடி ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.

திசைப்பலன்கள்;

     ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசை சந்திர திசையாகவரும். சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த  நேரத்தை கொண்டு மீதமுள்ள வருடங்களை கணக்கிட்டு கொள்ளலாம். சந்திர திசை  காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.

     இரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசையில் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாலும் இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.
     
மூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும்.
     
நான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
    
ஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும்.

ஆறாவதாக வரும் புதன் திசை மாரகதிசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.
     
இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் வானத்தில் காணலாம். ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்;

     பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலிடல், பெயர் சூட்டுதல், வாசல் கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்

கழுகு மலை;

     து£த்துகுடி மாவட்டம் கோவில் பட்டிக்கு மேற்கில் 19 கி. மீ தொலைவிலுள்ள ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரமரம்.

நெல்லிக்கேடு;

     தஞ்சாவூருக்கு வடக்கே கும்பகோணம் சாலையில் 11.கி.மீ தொலை உள்ள ஜம்புநாதர் திருக்கோயில்.

செம்பாக்கம்;

     செங்கல்பட்டுக்கு கிழக்கே திருப்போரூர் சாலையில் 18.கி.மீ தொலைவிலுள்ள ஜம்பு கேஸ்வரர் ஆலயம்.

கொரட்டூர்;

     சென்னைக்கு மேற்கில் 10.கி.மீ தொலைவுள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்

பிரஜாபதி சதுர்பாஹீ ; 
கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ; 
ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

     திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் ரோகிணிக்கு ரச்சு பொருத்தம் வராது என்பது இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்யாதிருப்பது  நல்லது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Thursday, September 20, 2012

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்கிருத்திகை நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்     இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1&ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1&ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4&ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

குண அமைப்பு;

     கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய்  மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

குடும்பம்;

     கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

தொழில்;

     கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்-கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.

நோய்கள்;

     கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

திசைப் பலன்கள்;

     கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

     இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

ராகு திசை 18 வருடங்கள் 4&வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை  கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சம்  போட வேண்டிவரும்.

இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்

கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.

வழிபாட்டு ஸ்தலங்கள்
   
திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.

   
கூற வேண்டிய மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்றோ ஷண்முக ப்ரசோதயாத்

கிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தால் நட்சத்திரங்கள்

    புனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Tuesday, September 18, 2012

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


 இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்  லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.

குண அமைப்பு

      பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.

குடும்பம்;

     பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.

தொழில்;

     எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும். வணிகவியல்,பல்,கண்,காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

நோய்கள்;

     பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;

     பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

     இரண்டாவது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். சந்திரன் திசை 3வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம்  மனைவி வழியில் அனுகூலம் உண்டு. ராகு திசை 5வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.

     ஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

     மேற்கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
    இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதம் இரவு 10.00 மணி சுமாருக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நற் காரியங்கள்;

     இசை, ஒவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, நடன அரங்கேற்றம் செய்ய, தீர்த்த யாத்திரை செய்ய, மூலிகை செடிகளை பயிரிட மற்றும் ரோஜா உள்ளிட்ட முற்செடிகளை நட பரணி நட்சத்திரம் நல்லது. 

வழிபாட்டு ஸ்தலங்கள்;

திருவாரூர்;

     திருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது. கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம். 

     திரு ஆவினன் குடியில்  உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.

     சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில்  வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

கூற வேண்டிய மந்திரம்

     ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
      சன்ய குமாரி தீமஹி
      தள்நோ துர்கி பிரசோதயாத்

பரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

     பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Sunday, September 16, 2012

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


  இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் முதலிடத்தை பெறுவது அஸ்வினி நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,சே, சோ, ல ஆகியவை. தொடர் எழுத்துக்கள் செ சை முதலியவை ஆகும்.


குண அமைப்பு;

      அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும்  ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை  விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணமிருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுபடாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை பேச்சுக்களில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.

குடும்பம்;

     கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து  செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும்  மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.

தொழில்;

     எந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும். இதனால் உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள் 24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் கிட்டும். பத்திர பதிவு, வானியல், வங்கி, மருத்துவம், ரசாயனம் மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டடம் கட்டுதல் போன்ற துறைகளில் ஈடுபட கூடிய வாய்ப்பு கிட்டும் ஜோதிடம் விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு ஏற்படும்.

நோய்கள்;

     அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைல்ஸ், முதுகு தண்டு பிரச்சனை, கணுக்கால் வலி, ஒற்றை தலை வலி, மூளை காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கபடுவார்கள்.

திசை பலன்கள்;

     அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது திசை நடைபெறும் என்பதை அறியலாம். கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.

     இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும். சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் இத்திசை காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும். வாழ்க்கை தரமும் உயர்வடையும்.

     மூன்றாவது திசையாக சூரிய திசை வரும். பொதுவாகவே மூன்றாவது திசை முன்னேற்றத்தை சுமாராகத் தான் தரும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.

     சந்திர திசை நான்காவது திசையாக வரும் சந்திர திசை காலங்கள் 10 வருடங்களாகும். சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து திசை நடைபெறும் இக்காலங்களிலும் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.

     ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மாரக திசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும். ராகு திசை 6வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

     மேற்கூறிய திசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

 அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய  நல்ல காரியங்கள்;

     அஸ்வினி நட்சத்திர நாளில் மனை முகூர்த்தம் செய்தல் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்க்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டையடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது.

வழி பாட்டு ஸ்தலங்கள்

ஸ்ரீரங்கம்
     ரங்க நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள தன்வந்திரியை ஜன்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம். கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ் வரரும். அஸ்வினி நட்சத்திர காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி கோயிலிலும் வழி பாடு செய்யலாம். சென்னை திருவற்றியூம் மற்றும் திருவிடை மருதூர் கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.

கூற வேண்டிய மந்திரம்;
     
சரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்

ஓம் வாக் தேவியை ச வித்மஹே
விரிஞ்சி பந்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்!

அஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்

 அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Tuesday, September 11, 2012

பெண்களும் உத்தியோக யோகமும்
பெண்களும் உத்தியோக யோகமும்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். தற்போது உத்தியோகம் பெண்களுக்கும் லட்சணம் என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்ளலாம். கணவன் சம்பாதித்து வர மனைவி அடுக்களையில் சமைத்துப் போட்ட காலங்கள் மாறி பெண்களும் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக மாறி வருகிறார்கள். அரசியலில் கூட பெண்கள் 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று முதன்மை வகிக்கிறார்கள். சாதாரண சமையல் வேலை என்ற கேலி பேசியவர்கள் கேட்டரிங் என்ற ஆங்கில சொல்லுடன் சமையல் கலைகளில் வலம் வருகிறார்கள். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பெண்களும் வேலைக்கு செல்வதுதான் நல்லது என பல ஆண்களும் நினைப்பதால், வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஒவ்வொரு துறைகளை தேர்ந்தெடுத்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தலை கவிழ்தார் என்ற பாரதியின் பாடல் வரிகளும் நிஜமாகி வருகின்றன. பெண்கள் எல்லோரும் படித்து முன்னேறி வருவதால் பல துறைகளில் அதிகாரமிக்க பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய யோகம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடம் பலம் பெற்று இருப்பது சிறப்பு. 10 வீட்டில் சூரியன், செவ்வாய் அமையப் பெற்று சுப பார்வை பெற்றாலும் கண்டிப்பாக அதிகாரமிக்க உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். 

அது போல 10ம் அதிபதி பலம் பெற்று சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று 10ம் வீட்டையோ, 10ம் அதிபதியையோ குரு பார்வை செய்தால் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் நிர்வாக காரகனாவார். அவர் 10 ல் அமைந்து சுபபார்வையுடன் இருந்தால் பலர் பாராட்டக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகியாக விளங்குவார். 10 ம் வீட்டில் அமையும் கிரகங்களை வைத்தே அவர்கள் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதை அறியலாம். பெண்களின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் பலம் பெற்று குருபார்வை பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

நவகிரகங்களில் சந்திரன் ஜல காரகனாவார். பயணங்களுக்கும் அவர்தான் காரகனாவார். சந்திரன் 10 வீட்டில் பலம் பெற்று சூரியன் தொடர்புடன் குரு பார்வை பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளிலே குறிப்பாக உணவு தானியங்கள், தண்ணீர் சம்பந்தப் பட்ட துறைகள், சுற்றுலா மற்றும் பயணங்கள் தொடர்புடைய துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், சுக்கிரனின் தொடர்புடன் இருந்தால் கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியவும் ஆடை, ஆபரணத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் புதனானவர் கல்வி, கணக்கு, கம்பியூட்டர் போன்றவற்றிற்கு காரகன் ஆவார். புதன் 10ல் பலமாக இருந்தால்  கம்பியூட்டர், ஆடிட்டிங் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். புதன் சூரியனின் சேர்க்கை பெற்று குரு பார்வை பெற்றிருந்தால் அரசாங்கத் துறையில் தணிக்கை சம்பந்தப்பட்ட துறைகளிலோ, வங்கிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்போ உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்று 10ல் பலமாக இருந்து, 2ம் பாவமும் சிறப்பாக இருந்தால் பேச்சால், வாக்கால் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியராக பணியாற்றும் அமைப்பு ஏற்படும். அது மட்டுமின்றி மற்றவர்களை வழிநடத்தக்கூடிய யோகம் வழக்கறிஞர் ஆகக்கூடிய யோகம் உண்டாகும். புதன் குருவுடன் சனி பலமாக இருந்தால் நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய யோகம் ஏற்படும். 10 ல் புதனுடன், சனியும் பலமாக இருந்தால் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் 10 வீட்டில் பலமாக இருந்தால் பண நடமாட்டமுள்ள இடங்களில் பொது நலப் பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும்  வாய்ப்பு உண்டாகும். குருவுடன் புதன், செவ்வாய் பலமாக இருந்தால் எழுத்து பத்திரிக்கை துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். 10ல் சந்திரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் இணைந்திருந்தால் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, மருந்து கெமிக்கலில் தொடர்புடைய துறைகளில் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

10ம் வீட்டில் சனி பகவான் பலமாக இருந்து சுக்கிரனின் சேர்க்கை பெற்றால் போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் தொடர்புடைய துறைகள் போன்றவற்றிலும், சனி மட்டும் பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் கூடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

பொதுவாக, பெண்களின் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சூரியன் சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் பலமாக அமையப் பெற்று, அக்கிரகங்களின் திசை நடைபெற்றால் கௌரவமிக்க பணிகளால் முன்னேற்றமும், வருவாய் ஈட்டக்கூடிய யோகமும் உண்டாகும். புதன் சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் 10ம் வீட்டில் பலமாக அமையப்பெற்று ஜாதகத்தின் யோக பாவங்கள் பலம் பெற்று அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். 7,10 க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் கூட்டுத் தொழில் மூலம் ஏற்றம் உண்டாகும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Sunday, September 9, 2012

பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம் செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் அதை யோக ஜாதகம் என்கிறோம். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி இருந்தால் அதை தோஷ ஜாதகம் என்கிறோம்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டகரமானதாகிவிடும். பெண்ணின் ஜாதக ரீதியாக எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருந்தால் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டாகின்றன என பார்ப்போம். 

செவ்வாய் தோஷம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயானவர் குடும்ப ஸ்தானமான 2லும், சுக ஸ்தானமான 4 லிலும், களத்திர ஸ்தானமான 7லும், மாங்கல்ய ஸ்தானமான 8லும், கட்டில் சுக ஸ்தானமான 12லும் அமைவது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இப்படி தோஷம் அமைந்துள்ள பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்த்து திருமணம் செய்வது நல்லது.  2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போதுமானதாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.

ராகுகேது தோஷம்

செவ்வாய் தோஷம் பலருக்கு தெரிந்திருக்கிறது என்றாலும் அதைவிட கடுமையான தோஷமானது ராகு கேது தோஷமாகும். சர்ப கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஒரு  பெண்ணின் ஜாதகத்தில் 1,7  மற்றும் 2,8 ல் இருந்தாலும், 7,8 ம் அதிபதிகள் ராகு, கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும், ராகு கேதுவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ராகு கேது தோஷம் உண்டாகிறது. திருமண வயதில் ராகு கேதுவின் தசா புக்திகள் நடைபெற்றாலும், ராகு கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், சர்ப தோஷம் உண்டாகி திருமண சுபகாரியங்களில் தடை ஏற்படும். இந்த தோஷம் அமையப் பெற்ற பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்ப்பது நல்லது.

ராகுகேது தோஷம் அமையப் பெற்றவர்கள் திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலங்களில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயங்களுக்குச் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

புத்திர தோஷம்

புத்திர பாக்கியம் என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான வரப்பிரசாதம் ஆகும். குழந்தை இல்லாதவர்களை மலடி பட்டம் கொடுத்து எந்தவொரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5ம் பாவமும், 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானம் என்பதால் அதில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதுவே 5.9ம் வீட்டில் ராகு, கேது, சனி, புதன் போன்ற  கிரகங்கள் அமையப் பெற்று பகைப் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படுகிறது. 

பெண்களின் மணவாழ்க்கையும், கேது பகவானும்


திருமண வயதை அடைந்தவர்களுக்கு ராகு, கேதுவின் தசா புத்திகள் நடைபெற்றால் மணவாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அதிலும் கேது ஞான காரகன் என்பதால் கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண மானவர்களுக்கு கூட இந்த கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெறுமேயானால் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட தடைகள் ஏற்படும். குறிப்பாக கட்டில் சுக வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிப்படையும். இதற்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

மாங்கல்ய தோஷம்

பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8 ம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் 8ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இடையூறு உண்டாகும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Saturday, September 8, 2012

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


   இருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும்,  2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும்,  2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     உத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்;

     உத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.

தொழில்;

     உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்;
     
இவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை  நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.

திசை பலன்கள்;
   
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.
     
இரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.
     
மூன்றாவதாக வரக் கூடிய  செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.
நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும்  உண்டாக்கும். 

குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.
     
உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;

     உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல்,  புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம். 

வழி பாட்டு ஸ்தலங்கள்;

கரவீரம்;
வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.

காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.
ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.
சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்
    ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
     விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
     தன்னோ லஷ்மி பிரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்

     கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Friday, September 7, 2012

ஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்

ஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்

ஒரு நல்ல குணவதியான பெண் என்பவள் அன்பு, பண்பு, பாசம் போன்ற நற்குணங்களைப் பெற்றவளாக இருந்து, தன் குடும்பத்தை நல்ல வழியில்  நடத்திச் செல்கிறாள். இதனால் பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கிறாள். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து, அனைவரிடமும் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளும் நற்பண்புகள்  நிறைந்தவர்களாகவும், பெரியோர்களை மதித்து நடக்கும் பண்புள்ளவர்களாகவும் வளர்கிறார்கள். 

ஒரு பெண்ணின் நற்குணம் ஒரு குடும்பத்தையே உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பொருமை, ஈகை குணம், சகிப்புத் தன்மை போன்ற யாவும் நிறைந்த பெண் சமுதாயத்தில் உன்னதமான உயர்வை அடைவாள். இப்படி உன்னதமான நற்பண்புகளைக் கொண்ட பெண்ணால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நற்பலன்கள் உண்டாகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கும்  ஒவ்வொரு குணநலன்கள் உண்டு.

மேஷ லக்னத்தில் பிறந்த பெண், எல்லாவகையிலும் முதன்மையானவளாகவும், அழகான உடலமைப்பைக் கொண்டவளாகவும், செல்வம் செல்வாக்குடன் வாழக்கூடிய யோகம் பெற்றவளாகவும், மற்றவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பவளாகவும் உற்றார் உறவினர்களிடையே  பாசம் அதிகம் உடையவளாகவும் இருப்பாள். புத்திர வழியில் சில மன சங்சலங்களை அடைவாள். 

ரிஷப லக்னத்தில் பிறந்த பெண் நல்ல புத்திசாலியாகவும், நல்ல குணவதியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவளாகவும், கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருப்பாள். சிறந்த புத்திர பாக்கியம், ஆடை, ஆபரண சேர்க்கையும், கவர்ச்சியான உடலமைப்பையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள். 

மிதுன லக்னத்தில் பிறந்த பெண் சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உடையவளாக இருப்பாள். முன்கோபியாகவும், கடினமாக வார்த்தைகளைப் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துபவளாகவும் இருப்பாள். பெண் புத்திர பாக்கிய யோகம் உண்டாகும். மத்திம வயதில் கணவருக்கு கண்டத்தை உண்டாக்கும். வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். 

கடக லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல பேச்சாற்றலும் உற்றார் உறவினர்களிடம் அன்பாக  பழகக்கூடிய குணமும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கை யோடு சீறும் சிறப்பாக வாழ்வாள். 

சிம்ம லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தினரிடம்  ஒத்துப்போவதில் சில சங்கடங்கள் உண்டாகும். நல்ல புத்திசாலியாகவும், மற்றவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பாள். எதிலும் தனித்து நின்ற போராடி வெற்றி பெறுவாள். கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். 

கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் சுபாவம் இருக்கும்.மகிழ்ச்சியான வாழ்க்கையும், செல்வம், செல்வாக்கும், ஆடை, ஆபரண சேர்க்கையும் இருக்கும். சிறந்த செல்வந்தரை மணக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  கல்வி, கேள்விகளில்  சிறந்து விளங்குவாள். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் உண்டாகும். 

துலா லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு கலை, இசை போன்றவற்றில் ஆர்வம்  அதிகம் இருக்கும். பல கலைகளை கற்றுத் தேர்வாள். பேச்சில் கடுமை இருக்கும் கணவருக்கு அடங்காத குணம், சோம்பேறித்தனம் போன்ற யாவும் இருக்கும். புத்திரர்களால் மனச்சஞ்சலம் அடைவாள். 

விருச்சிகலக்னத்தில் பிறந்த பெண்கள் பிறரை குற்றம் குறை கூறுபவர்களாக ருப்பார்கள் தடித்த உருவமும் யாருக்கும் அடங்காத குணமும் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. 

தனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் அழகான உடலமைப்பும், கவர்ச்சியான தோற்றமும், கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், நல்ல புத்திசாலியாகவும் திகழ்வாள். குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்லும் பண்பும் இருக்கும். 

மகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல புத்திர பாக்கியம் பெற்று எதிரிகள் இல்லாத சுகமான வாழ்வை வாழ்வார்கள். பல புனித ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வாழ்வின் கடைசி காலத்தில் சுமங்கலியாக மரிப்பாள். 

கும்ப லக்னத்தில் பிறந்த பெண்கள் செல்வசெழிப்புடன் பிறந்தாலும் வறுமை நிலையிலேயே வாழ்வாள். உடல் ஆரோக்கியத்திலும் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தியாக அமையாது. 

மீன லக்னத்தில் பிறந்த பெண்கள் உற்றார், உறவினர்களை மதிக்கும் சுபாவமும், பெரியவர்களிடம் மரியாதை கொண்டவளாகவும் இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கையும், செல்வம், செல்வாக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்புடன இருக்கும்.ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, September 5, 2012

தோஷநட்சத்திரமா?


தோஷநட்சத்திரமா?

திருமணம் என்பது ஒரு பெண்ணிற்கு அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. பெண்ணின் நட்சத்திரங்கள் ஆணிற்கு பொருந்துகிறதா என அலசி ஆராய்ந்த பிறகே திருமணம் செய்கிறார்கள். பொதுவாக பரணியில் பிறந்தவள் தரணி ஆள்வாள். மகத்தில் பிறந்தவள் ஜெகத்தை ஆள்வாள் என்று கூறுவது  உண்டு. திருமணப் பொருத்தம் என பார்க்கின்ற போது மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்றும், ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்றும், கேட்டை கோட்டையைக் கொடுக்கும் என்றும், மூத்த ¬த்துனருக்கு தோஷத்தைக் கொடுக்கும் என்றும், விசாக நட்சத்திரமாக இருந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது என்றும் பலர் கூறி வருகின்றனர். இது நூறு சதவிகிதம் பொருந்துமா என பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியே நட்சத்திரத்தில் தோஷம் இருப்பதாக எடுத்துக் கொண்டாலும் அவரவர் ஜாதகங்கள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற போவதில்லை. நம்முடைய முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததினால் வேண்டுமானால் இந்த நட்சத்திரங்களை கண்டு பயந்திருக்கலாமே தவிர தற்போதுள்ள சூழ்நிலைக்கு இது ஏற்றதல்ல. திருமணம் ஆனவுடன் அவரவர் தனிக்குடித்தனம் நடத்த பிரிந்து விடுவதால் இந்த நட்சத்திரங்கள் எதுவும்  யாரையும் பாதிக்காது. 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, September 3, 2012

உடல் ஊனம்
உடல் ஊனம்

ஒரு பெண் எவ்வளவு அழகானவளாக இருந்தாலும் உடலில் ஒரு குறைபாடு இருந்துவிட்டால் அவளை ஊனமுற்றவளாக கருதுகிறோம். சிறிய ஊனங்களாக இருந்து விட்டால் அந்தப் பெண்ணிற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. அதுவே கை, கால்களில் பாதிப்போ, முக லட்சண குறைவாகவோ பிறந்து விட்டால் அவளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. சிறு வயதில் வளர்ப்பதில் இருந்து அவளை பெரியவளாக்கும் வரை பெற்றோரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம்  ஆயிரத்தில் ஒரு ஆணுக்குத்தான் இருக்கும். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் தன்னால் தான் அவளுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். கண்ணுக்குத் தெரியும் ஊனம் ஒருவகை என்றால், பார்க்க அழகாக தெரியும் பெண் வாய்பேச முடியாதவளாக, காது கேளாதவளாக இருப்பது இன்னும் கொடுமை. இதற்கு காரணம் தான் என்ன? தாய் தந்தையர் செய்த பாவமா? முன்வினை பயனா? என பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கிறது. ஐயோ நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏனிந்த நிலை என மனம் புலம்புகிறது. இந்த பெண்ணிற்கு வரும் வாழ்க்கைத் துணையையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி நீசம் பெற்றோ அஸ்தங்கம் பெற்றோ பலஹீனமாக இருந்து, ஜென்ம லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுப பார்வை இல்லாமல் சனியின் பார்வை இருந்தால், உடல்நிலையில் அங்கஹீனம், தோற்றத்தில் ஒரு குறைபாடு உண்டாகும். நவகிரகங்களில் ரத்த காரகன் செல்வாயாவார். செவ்வாய் பலஹீனமாக  இருந்து சனி, ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நலிவடையும். 

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வாக்கு ஸ்தானம் ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதி பலமிழந்து சனி ராகு போன்ற பாவிகள் 2ல் பகை பெற்று அமையப் பெற்றால்  பேச்சில் கோளாறு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 3,11 ம் பாவமானது காதுகளைப் பற்றி குறிப்பிடக்கூடியதாகும். நவகிரகங்களில் புதன் பகவான் காதுகளுக்கு காரகனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் புதன் வலுவிழந்து சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்று சுப பார்வையின்றி இருந்தாலும் 3,11ல் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் இருந்தாலும் காதுகளில் பாதிப்பு ஏற்படும். 

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வலது கண்ணைப் பற்றியும், 12ம் வீடு இடது கண்ணைப்பற்றியும் குறிப்பிடுவதாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கண் பார்வைக்குரிய  கிரகங்களாகும். சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்றவர்களில் ஒருவர் பலஹீனமாக இருந்து, லக்னத்திற்கு 2,12 ல் சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். அதுபோல 2,12 க்கு 7ம் வீடான 6,8 ல் பாவகிரகங்கள் வலுவாக இருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001