Friday, December 21, 2012

New Year Predictions 2013 - மேஷ ராசி2013 ஆண்டு பலன்கள் மேஷம்அன்புள்ள மேஷ ராசி நேயர்களே,

தன்னை நம்பியவர்களை எவ்வித துன்பத்தி லிருந்தும் காப்பாற்ற கூடிய வல்லமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் 28-05-2013 வரை ஆண்டு கோளான குருபகவான் தனஸ்தனமான 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. திருமண சுப காரியங்கள் கூட தடையின்றி நடைபெறும். சிலருக்குப் புத்திர பாக்கியமும் உண்டாகும். கணவன் மனை வியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். என்றாலும் ஜென்மராசியில் கேதுவும், 7ல் ராகுவும் சந்திப்பதாலும், 7ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வதாலும் வரும் ஜூன் முதல் குரு 3ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் மன நிம்மதி குறையும். உறவினர்களாலும் வீண் பிரச்ச னைகள் ஏற்படும். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதுதே நல்லது. பணவிஷயங்களில் கவனம் தேவை.

தேக ஆரோக்கியம்

உங்களுக்கு ஜென்ம ராசியில் கேதுவும், 7ம் வீட்டில் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை கைகால் வலி, எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். மனையியாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தம் பிரச்சனைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.

 குடும்பம் பொருளாதாரநிலை

வரும் மே மாதம் வரை ஆண்டு கோளான தனஸ்தானமான 2ம் வீட்டில் சந்திப்பதால் குடும்பத்தின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதுடன் சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். சொந்த வீடு மனை வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். மே மாதத்திற்கு பின் குடும்பத்திலுள்ளவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

கொடுக்கல் வாங்கல்

2013 மே மாதம் வரை தனக்காரனமான குருபகவான் தனஸ்தனமான 2ம் வீட்டிலேயே சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கல் சரமான முறையிலேயே நடைப்பெறும். பலபெரிய மனிதர்களின் நட்புகளும் தேடிவரும். கொடுத்த கடன்களும் வசூலாவதில் தடை ஏற்படாது. மே மாதத்திற்கு பின்பு பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது மிகவும் நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மே
மாதம்; வரை எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. என்றாலும் 7ம் வீPட்டில் சனியும் ராகுவும் சந்திப்பதால் கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்களிடையே வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழிலாளர்க ளின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாது. எதிலும் கவனமுடன் நடந்து கொள்ளவும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

ஜென்ம ராசிக்கு 10ம் அதிபதி சனி 7ம் வீட்டில் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறி விடமுடியாது. என்றாலும் மே மாதம் வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது.

அரசியல்வாதிகளுக்கு

பெயர், புகழ் மங்காது. மே மாதம் வரை உங்களின் செல்வாக்கு ஓங்கியே இருக்கும். உங்களின் வார்த்தைகளுக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். பண வரவுகளும் சிறப்பா கவே இருக்கம். மே மாதத்திற்கு பின் கட்சி பணிக ளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்துக் கொண்டால் வீண் வத ந்திகளை பரப்புவார்கள். அலைச்சலும் அதிகரிக்கும்.

 விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் எதிர்பார்த்ததாயிருக்கும். வீண் பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைக்கும். புதிய பூமி, நிலம் போன்றவற்றையும் வாங்கிப்போடுவீர்கள். அரச வழியிலும் அனுகூல ங்கள் கிடைக்கும். பங்காளரால் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளும், வம்பு வழக்குகளும் உண்டாகும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. கணவன், மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். மே மாதம் வரை பணவரவுகள் இருக்கும். பொன் பொருள் ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய இனிய சுபகாரியங்கள் நடை பெறும்.

படிப்பு

உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விருப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பாடத்தில் சிறப்பான கவ னத்தை செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவீர்கள். உடன் பழகும் நண்பர்களிடம் கவன முடன் நடந்து கொள்வதும், தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ்,ஷேர்போன்றவற்றில் ஆண் டில் முன்பாதியில் நல்லதோர் பலன் கிடைக்கும்.

ஜனவரி

முன்கோபமும், முரட்டு சுபாவமும் கொண்ட உங்களுக்கு உங்கள் ஜென்ம ராசியில் 9ல் சூரியனும், 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவர வுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்று மை குறையாது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-01-2013 அதிகாலை 01-16 மணி முதல்
     10-01-2013 அதிகாலை 2.45 மணிவரை

பெப்ரவரி

நல்ல அழகும் மற்றவரை கவரும் வசீகரமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் 2ல் குருவக்ரகதியில் 10ல் சூரியன் 11ல் செவ்வாயும் சந்திப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கை கூடும். உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக்கல் வாங்கல் நல்லலாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 04-02-2013 காலை 9-13 மணி முதல்  
     06-02-2013 பகல்  10.53 மணி வரை.

மார்ச்

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் உங்களுக்கு 2ம் வீட்டில் குருவும் லாபஸ்தானத்தில் செவ்வாயும் மாதமுற்பகுதியில் சூரியனும் சந்திக்க விருப்பது சாதகமான அமைப்பாகும். பணவரவு களுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல், வாங்கல் சரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏறு;பட்டாலும் பெரிய கெடுதியில்லை. பொன்னும், பொருளும் சேரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரம் மேன்மை யடையம். 
சந்திராஷ்டமம் 03-03-2013 மாலை 05.06 மணி முதல் 
     05-03-2013 இரவு 07.08 மணி வரை. 
     30-03-2013 இரவு 12.49 மணி முதல் 
     02-04-2013 அதிகாலை 03.24 மணி வரை.

ஏப்ரல்

தனக்கு பிடித்ததையே செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்ட உங்களுக்க 2ல் குரு சந்திப்பதால் பொருளாதார ரீதியாக முன்னே ற்றமும், கணவன் மனைவியிடையே ஒற்று மையும் உண்டாகும் என்றாலும் மாதமுற்பகுதியில் 12ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படு த்தும். உத்தியோகத்தர்களுக்கு தேவையற்ற அலை ச்சல் டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப்ப டையும். கடன்கள் சற்று குறையும் சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 27-04-2013 காலை 09.07 மணி முதல் 
     29-04-2013 காலை 11.36 மணி வரை

மே

பொது விஷயங்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யும் உங்களுக்கு ஜென்ம ராசியி லேயே சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினையும், நெருங்கியவ ர்களிடையே கருத்து வேறுபாட்டினையும் உண்டா க்கும் என்றாலும் 2ம் வீட்டில் குருசஞ்சாரம் செய்வ தால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய வல்லமையைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 24-05-2013 மாலை 05.13 மணி முதல் 
26-05-203 மாலை 07.49 மணி வரை.

ஜூன்

வெகுளியாகவும் கபடமற்றும் விளங்கும் உங்களுக்கு இம்மாதம் முதல் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண விஷய ங்களில் கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்ப வர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21-06-2013 அதிகாலை 01.30 மணி முதல் 
     23-06-2013 காலை 04.09 மணிவரை

ஜூலை

எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளாத வெள்ளை உள்ளம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். முடிந்தவரை முன் கோபத்தை குறைப்பது நல்லது. 3ம் வீட்டில் மாத முற்பாதி வரை சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கம் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார நிலையில் முன்னேற்றமும் உண்டா கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடாதிருப்பது நல்லது. முருகனை வழிப டவும்.
சந்திராஷ்டமம் 18-07-2013 காலை 09.46 மணி முதல் 
     20-07-2013 மதியம் 12.29 மணி வரை

ஆகஸ்ட்

பரந்த மனப்பான்மையும்யை கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதிவரை 3ல் செவ்வாயும் 5ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று கவனமானநிலையிருக்கும். எதிர்பாராத உத விகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவ ர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை. சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 14-08-2013 மாலை 05.53 மணி முதல் 
     16-08-2013 இரவு 08.41 மணி வரை

செப்டம்பர்

தன்நலம்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் செவ்வாயும் 3ல் குருவும் 5ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது வீண் பிரச்சனைகளை உண்டா க்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களால் மனச ஞ்சலங்கள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் போட் டிகள் அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 11-09-2013 அதிகாலை 01.55 மணிமுதல் 13-     09-2013 காலை 04.48 மணி வரை

அக்டோபர்

தங்களது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு மாத முற்பகுதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் ஜென்மராசிக்கு 7ல் சனிராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலும் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிலிக்காது. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்களை ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய் இயலாது. தட்;சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-10-2013 காலை 09.49 மணிமுதல் 
      10-10-2013 மதியம் 12.49 மணி வரை

நவம்பர்

எதிலும் துணிச்சலுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சனி ராகு சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. பணவரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். உத்தி யோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து செல்லவும். துர்க்கை அம்ம னை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 04-11-2013 மாலை 05.48 மணிமுதல் 
     06-11-2013 இரவு 08.56 மணி வரை.

டிசம்பர்

நல்ல வாக்கு சாதுர்யம் பெற்ற உங்களுக்கு 3ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் 6ம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் பொரு ளாதார கதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பகைவர்க ளும் நண்பர்களாக மாறுவார்கள். 8ல் சூரியன் சஞ்ச ரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்க ளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 02-12-2013 அதிகாலை 1.52 மணிமுதல் 
     04-12-2013 அதிகாலை 5.09 மணி வரை 
     29-12-2013 காலை 10.00 மணி முதல் 
      31-12-2013 மதியம் 01.22 மணி வரை

அஸ்வினி

தீர்க்கமான சிந்தனையும், நல்ல அறிவா ற்றலும் கொண்ட அஸ்வினி நட்சத்திர அன்பர்களே இந்த 2013ல் ஆண்டில் மே மாதம் வரை குருதனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்களும் கிடைக்கப் பெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் சிறப்பான புத்திர பாக்கியம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களின் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் அமையும்.

பரணி

மற்றவர்களை கவரக்கூடிய உடல் அமைப்பும் சிந்திக்க கூடிய பேச்சாற்றலும் கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சனி ராகு சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை உண்டாக்க கூடிய அமைப்பு என் றாலும் மே மாதம் வரை குருதன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். எடுக் கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

கார்த்திகை-1ம் பாதம்

உழைப்பையே பிரதானமாக கொண்ட கார்த்திகை நட்சத்திர அன்பர்களே! ஜென்ம ராசியில் கேதுவும் 7ம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. மே வரை குரு 2ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கம். உத்தி யோகத்தவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடை யின்றி பெறமுடியும். ஆடம்பரமான செலவுகள் செய்வ தை குறைத்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12 கல் - பவளம் 
நிறம் - ஆழ் சிவப்பு திசை - தெற்கு
கிழமை - செவ்வாய் தெய்வம் - முருகன்

பரிகாரம்

இந்த வருடம் ஜென்ம ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்ப சாந்தி செய்வது, துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 7ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஜூன் மாதம் முதல் குரு 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் தட்;சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
No comments: