Friday, December 21, 2012

2013 ஆண்டு பலன்கள் ரிஷப ராசி2013 ஆண்டு பலன்கள் ரிஷபம்


கம்பீரமான தோற்றமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டில் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனிபகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் ராகு சேர்க்கை பெற்று உச்ச கதியில் சஞ்சரிப்பது உங்களுக்கு வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். இதுவரை உங்க ளுக்கு தொல்லை கொடுத்து கொண்டிருந்த மறைமுக எதிர்ப்புகளும், வம்பு வழக்குகளும் இருந்த இடம் தெரியாமல் மறையும். பகை பாராட்டியவர்கள் கூட உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் போன்றவற்றிலிருந்த போட்டி பொறாமைகளும் குறையும். வரும் 28-05-2013 முதல் ஆண்டுக் கோளான குரு பகவான் தனஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார கதியாக உங்களுக்கு இருந்த பிரச்சனைகளை குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும் சிலர் தம் இனத்த வரையே கைபிடிப்பார். பொன் பொருள் சேருவதுடன் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும்.

தேக ஆராக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்ச னைகளும், உடல் உபாதைகளும் படிப்படியாக விலகி மருத்துவ செலவுகளும் குறையும். மனைவிப் பிள்ளைகளும், தாய், தந்தையும் நலமாகவே இருப்பார்கள் ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் ஏற்ப ட்டாலும் உடனடியாக சரியாகி விடுவதால் மகிழ்ச்சி நிலவும்.

 குடும்பம் பொருளாதாரநிலை

ஜென்ம ராசிக்கு 6ம் வீட்டில் சனிபகவான் உச்சம் பெற்று ராகு சேர்க்கையுடன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி குவிப்பீர்கள் பிரிந்து சென்ற உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்

குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்மராசியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற பலனை தரும் என்றாலும் சனி ராகு 6ல் சஞ்சரிப்பதால் மறை முக எதிர்ப்புகள் விலகி கொடுக்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஆண்டின் பிற்பகு தியில் எளிதாக ஈடுபடுத்தமுடியும். பல பெரிய மனித ர்களின் தொடர்புகளும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வம்பு வழக்குகள் ஒரு தீர்வுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

தர்ம கர்மாதியான சனி பகவான் உச்சம் பெற்று 6ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணியில் கௌரவமும் பெயர் புகழும் கூடும். இதுவரை தடைபட்ட ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்திலும் சுபீட்சம் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்பு வோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்களின் பேச்சிற்கும், போராட்டத்திற்கும் மக்களின் மத்தியில் நல்ல மதிப்பியிருக்கம். மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்க ளின் ஏகோபித்த வரவேற்பினை பெறுவீர்கள். வர வேண்டிய உயர் பதவிகளும் வந்து சேரும். இது வரை எதிரிகளாக செயல்பட்டவர்களும் கட்சிமாறி உங்களிடம் வந்து சேருவார்கள். பத்திரிகை நண்பர் கள் எப்பொழுதும் துணை இருப்பார்கள்.

 விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபங்கள் பெருகும். தானியங்கள் மட்டுமின்றி காய், கனி, கீரை வகைகள் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். புதிய ப+மி நிலம் வாங்கும் நோக்கமும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சியும் வெற்றி பெறும். அரசு வழியில் சிறப்பான நற்பலன்களும் கிடைக்கும்.

 பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்படையும். திரு மண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் நல்ல வரன்கள் தேடி வரும். பொருளா தார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். பொன், பொருள் ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனை வியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அழகான புத்திரபாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும்.

 படிப்பு

கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்லமதிப் பெண்களைப் பெறமுடியும். பெற்றோர் ஆசிரிய ர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அரசவழியிலும் ஆதரவுகள் உண் டாகும். உடன்பழகும் நண்பர்களையும் உதவிகரமாக செயல்படுவார்கள். விளையாட்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு பரிசுகளை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் நல்ல அனு கூலங்களை பெற்று சாதனைகளைச் செய்வீர்கள் லாபம் பெருகும்

ஜனவரி

பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொ ண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு குண ரோக ஸ்தானமான 6ம் வீட்டில் தர்ம கர்மாதிபதியான சனிபகவான் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கிருந்த மறை முக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் விலகி செல்லும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். தொழில் வியாபார ரீதீயாக எடுக்கம் முயற்சிகள் அணைத்திலும் வெற்றிக் கிட்டும். உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தட்சீணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-01-2013 அதிகாலை 03.31 மணிமுதல் 
     12-01-2013 காலை 06.02 மணிவரை

பெப்ரவரி

சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6ல் சனி ராகுவும் 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகத்தி லிருப்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். எதிர்பா ர்த்து காத்திருந்த இடமாற்றங்களும் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறா மைகள் விலகும். பணவரவுகளும் தேவைக் கேற்றபடி அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந் திருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செல வுகள் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 06-02-2013 பகல் 10.53 மணி முதல் 
     08-02-2013 மதியம் 02.41 மணி வரை

மார்ச்

நேர்மையே குறிக்கோளாக கொண்டு வாழும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ராகு 6ல் இருப்பதாலும் லாபஸ்தா னத்தில் செவ்வாயும் 10 சூரியனும் சஞ்சாரம் செய்வ தால் உங்களது பிரச்சனைகள் யாவும் குறைந்து ஜீவன ரீதியாக பல முன்னேற்றங்களை அடை வீர்கள். பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியா கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். சிறுசிறு போட்டிகளும் நிலவும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 05-03-2013 இரவு 07.08 மணி முதல் 07-03-2013 இரவு 10.19 மணி வரை

ஏப்ரல்

பிடிவாத குணமும், பிறருக்கு அடிபணியாத பண்பும். கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனி ராகுவும் லாபஸ்தானமான 11ல் மாத முற் பகுதியில் சூரியன் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் சற்று ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சுமாரான நிலையிருக்கும். எதிர்பாராத விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தேவையற்ற பணயங்களால் அலைச்சல், டென்ஷன் போன்றவையும் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 05-03-2013 இரவு 07.08 மணி முதல் 
      07-03-2013 இரவு 10.19 மணி வரை 
     02-04-2013 அதிகாலை 03.24 மணி முதல்    
             04-04-2013 காலை 06.01 மணிவரை

மே

கற்பனைதிறனும், தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயண ங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்சிலை யும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறை த்துக்கொண்டால் கடன் ஏற்படுவதை தவிர்க்கலாம் முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-05-2013 மாலை 07.49 மணி முதல் 
     28-05-2013 இரவு 10.14 மணி வரை

ஜூன்

எந்த கஷ்டத்தையும் எருது போல் தாங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 2ம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்யோ ன்யம் அதிகரிக்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் கை கூடி மகிழ்ச்சி யளிக்கும். புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். விரோதிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கடன்கள் குறையும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 23-06-2013 அதிகாலை 04.09 மணி முதல்       25-06-2013 காலை 06.30 மணிவரை

ஜூலை

விட்டுக்கொடுத்து பிறரை முன்னேற்றி விடும் நற்பண்பு கொண்ட உங்களுக்கு 2ல் குருவும், மாத பிற்பகுதியில் 3ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கம் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை செய்து முடிக்க முடியாத காரியங்களையும் திறம்பட செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும்  அன்றாட பணிகளில் திறம்படவே செயல்படுவீர்க்ள. பொன் பொருள் சேரும் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 20-07-2013 மதியம் 12.29 மணி முதல் 
     22-07-2013 மதியம் 02.50 மணிவரை

ஆகஸ்ட்

அறிவாற்றலும், நிகரற்ற ஞாபகசக்தியும் கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 3ல் சூரியனும் 6ல் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். வெற்றிமேல் வெற்றிகள் குவியும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடை பெறும். புதிய முதலீடுகளை ஈடுபடுத்தி பெரிய காரியங்களை சாதீப்பீர்கள். பொன்னும், பொருளும் சேரும். புதிய வீடு மனை போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள் தொழில் வியாபாரரீதியாக இருந்த போட்டி பொறா மைகள் யாவும் விலகி லாபங்கள் பெருகும். விநாயகப் பெருமானை வழிபடவும்
சந்திராஷ்டமம் 16-08-2013 இரவு 08.41 மணி முதல் 
     18-08-2013 இரவு 11.01 மணி வரை

செப்டம்பர்

தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசை ப்படாத உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் 3ல் செவ்வாயும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்பு தமான அமைப்பாகும். திருமணம் போன்ற சுபகா ரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கொடுத்த கட ன்கள் தடையின்றி வசூலாகும். உறவினர்களிடை யே இருந்த வேற்றுமைகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள் சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் 13-09-2013 காலை 04.48 மணி 
     15-09-2013 காலை 07.08 மணி வரை

அக்டோபர்

மற்றவரை சமமாக நினைத்து பழககூடிய பண்பு கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க செய்ய கூடிய அமைப்பாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமையும் உற்றார் உறவி னர்களால் அனுகூலமும் உண்டாகும். வம்பு வழக்கு களிலிருந்து இழுபறி நிலைகள் மறைந்து தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த வாக்குறு திகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்புகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத் திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிரு த்தியை பெருக்க முடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-10-2013 மதியம் 12.49 மணிமுதல் 
     12-10-2013 மதியம் 03.10 மணி வரை

நவம்பர்

யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்ட க்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சூரியன் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் எதிhபாராத கௌரவமான பதவி களை பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமா ற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவா ர்கள். தொழில் வியாபாரமும் போட்டி பொறாமை களின்றி சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கடன்கள் யாவும் குறையும். சேமிப்புகள் பெருகும் விஷ்ணு பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 06-11-2013 மாலை 08.56 மணி முதல் 
     08-11-2013 இரவு 11.20 மணி வரை

டிசம்பர்

தமக்காக வாதாடுவதை விட பிறருக்காக வாதாடும் பண்பு கொண்ட உங்களுக்கு 2ல் சஞ்சரிக்கும் குரு வக்கிரகதியிலிருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் 6ல் சனி ராகு சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் விட்டுக் கொடுத்து நடப்பதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 04-12-2013 அதிகாலை 05.02 மணிமுதல் 
06-12-2013 காலை 07.35 மணி வரை 
31-12-2013 மதியம் 01.22 மணி முதல் 
02-01-2014 மதியம் 03.50 மணி வரை.

கார்த்திகை 1,2,3ம் பாதம்

எதிலும் ஆர்வத்தோடு வாதாடும் பண்பு கொண்ட கார்த்திகை நட்சத்திர அன்பர்களே! ஜென்ம ராசிக்கு 6ம் வீட்டில் சனி ராகு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அணைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் பூரிப்பு உண் டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற ங்களையும் பெறமுடியும். கூட்டாளிகளின் ஆதரவை யும் முழுமையாகப் பெறுவீர்கள். சேமிப்புகளும் பெரு கும்.

ரோகிணி

நல்ல பண்புகளையும், அமைதியான குணத்தினையும் கொண்ட ரோகிணி நட்சத்திர அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும், தர்ம கர்மாதிபதியான சனி பகவான் குணரோக ஸ்தாணமான 6ம் வீட்டில் ராகு சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வதால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்க ல்களிலும் சரளமான நிலையிருக்கம். உத்தியோக ஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள் கட ன்கள் குறையும்.

மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்

பொறுமையுடன் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட மிருகசீரிஷம் நட்சத்திர அன்பர்களே! இந்த வருடம் மிகவும் சுபீட்சமானதாக இருக்கும்.பொருளாதார நிலையும் உயர்வாக இருப்ப தால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். ஆண்டின் பிற்பாதியில் திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளால் அனுகூலப் பலனைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 5,6,8,14,15,17 கல் - வைரம் 
நிறம் - வெண்மை, நீலம் திசை - தென்கிழக்கு
கிழமை - வெள்ளி, சனி தெய்வம் - விஷ்ணு, லசஷ்மி

 பரிகாரம்
வரும் 28-05-2013 வரை ஜென்ம ராசிய லேயே குருபகவான் சஞ்சரிப்பதால் குருவு க்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. குருப்ரீதி தட்சியா மூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டை கடலை மாலையும் சாத்தி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது  நல்லது.

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: