Thursday, December 27, 2012

2013 PALANGAL - கும்பராசி2013 ஆண்டு பலன்கள்,கும்பராசி


     புரட்சிகரமான கொள்கைகளையும் தீர்மானங்க ளையும் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்க ளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டு உங்கள் ராசியாதிபதி சனிபகவான் பாக்கியஸ்தான 9ல் ராகு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு மேன்மையானப் பலனை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டா கும். ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்ச ல்களையும் சுகவாழ்வில் பாதிப்புகளையும் சந்திக்க நேர்ந்தாலும் வரும் 28-05-2013 முதல் குருப கவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை யும், தாராள தனவரவுகளும் உண்டாகும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கும் யோகம் கிட்டும் சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கலும் லாபங்க ளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் பணியில் கௌரவமான பதவிகளை பெறுவார்கள்.

தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவுPர்கள் மனைவி பிள்ளைகளால் சற்று மருத்துவ செலவு களை எதிர்கொண்டாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபீட்சமும் உண்டாகும். தேவையற்ற பயணங்க ளைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆண்டின் முற்பாதியில் குரு 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சற்று குழப்பங்கள் நிலவினாலும், ஜூன் முதல் 5ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர பாக்கியமும் அமையும். அசையும் அசையா சொத்து க்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

 கொடுக்கல் வாங்கல்

குருபகவான் மேமாதம்வரை 4ல் சஞ்ச ரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்ச னைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரும் ஜூன் மாதம் முதல் குருபகவான் 5ம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகள் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினைப் பெற்றுவிட முடியும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனு கூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலா ளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலமானப் பலனை பெறமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் எடுக்கும். பணிகளை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் கிட்டும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்கள் தகுதிக்கு எந்தகுறைவும் இருக்காது இருக்கும். பதவிகளை இழக்காமல் காப்பாற்றி கொள்ளமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யநேர்ந்தாலும் வருமானமும் குறை வின்றி இருக்கும். நிறைய பயணங்களை மேற் கொள்ளகூடிய வாய்ப்பும் அமையும். மக்களின் ஆதர வும் செல்வாக்கும் குறையாமலேயே இருக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டபாட்டிற்கான பலனை அடைந்துவிடமுடியும். போட்ட முதலீட்டைவிட பன்மடங்கு லாபத்தினைப் பெறுவுPர்கள் பூமி நிலம் போன்றவற்றிலிருந்து வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நல்ல வரன்கள் தேடிவரும். ஆடை ஆபரணமும் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பகைமையும் மறந்து ஒற்றுமையுடன் செயல்படமுடியும்.

படிப்பு

கல்வியில் சிறப்பான நிலையே இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களை பெறமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு சிறப்பான நிலை யினை அடைவீர்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கபெறும். நல்ல நண்பர்களின் நட்புகளால் மேலும் உயர்வுகளைப் பெறமுடியும். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண் டின் பிற்பாதியில் அனுகூலங்கள் உண்டாகும்.

ஜனவரி

புன்சிரிப்பம் முக்த்தோற்றமும் கொண்ட உங்களுக்கு ஜென்மராசிக்குப் 10ல் சுக்ரனும் 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப் பாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகளையும் கிடைக்கப் பெறுவீர்கள் குடும்பத்திலும் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் கௌரவமான பதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03-01-2013 மாலை 05.35 மணிமுதல் 
05-01-2013 இரவு 10.13 மணிவரை

பெப்ரவரி

நல்ல பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். முருகப்பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 31-01-2013 அதிகாலை 01.27 மணிமுதல் 
02-02-2013 காலை 06.08 மணிவரை 
27-02-2013 காலை 09.10 மணி முதல் 
01-03-2013 மதியம் 01.59 மணிவரை

மார்ச்

இயற்கையான விருப்பு, வெறுப்பு கொண்ட உங்களுக்கு ஜென்மராசியில் சூரியனும், 2ல் செவ்வாயும் 4ல் குருவும் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு பாதிப்படையும் உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்தவ செலவுகளும் உண் டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவ ர்களுக்கும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். சேமி ப்புகள் குறையும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 26-03-2013 மாலை 04.44 மணிமுதல் 
28-03-2013 இரவு 09.48 மணிவரை

ஏப்ரல்

முரட்டு பிடிவாத குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதிவரை சூரியன் செவ்வாய் 2ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவும், கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரசெலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாதபிற்பாதியில் சூரியனும் செவ்வாயும் 3ம்வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். அனை வரையும் அனுசரித்து செல்வது நல்லது. குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-04-2013 இரவு 12.22 மணிமுதல் 
25-04-2013 காலை 05.41 மணிவரை

மே

தங்களுக்கு சமமானவர்களிடம் மட்டுமே பழகும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் மாதமுற்பாதிவரை சூரியன் செவ்வாய் சஞ்ச ரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பொரு ளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்திலும் ஓரள வுக்கு நிம்மதி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவ ர்களுக்கு நிம்மதி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு குறையும் துர்க்கை அம்மனை வழிபடவும்.    
சந்திராஷ்டமம் 20-05-2013 காலை 08.07 மணி மதல் 
22-05-2013 மதியம் 01.35 மணிவரை

ஜூன்

புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்ட உங்களுக்கு 4ம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் என்றாலும் 5ம்வீட்டில் குரு சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட திருமண சுபகாரியங்களிலும் வெற்றிகிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களிலிருந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்குவரும். கடன்கள் படிப்படியாக குறையும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16-06-2013 மாலை 03.36 மணிமுதல் 
18-06-2013 இரவு 09.43 மணிவரை

ஜூலை

தன்னை மட்டம் தட்டி பேசபவர்களை தூக்கியெறியம் குணம் கொண்ட உங்களுக்கு 5ம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனு கூலமான அமைப்பாகும். இதனால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்ப டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வளமும் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 13-07-2013 இரவு 11.50 மணிமுதல் 
16-07-2013 காலை 05.53 மணிவரை

ஆகஸ்ட்

பலரை தன் வசமாக்கி கொள்ளகூடிய அளவிற்கு பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு, 5ல் குருவும் 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்ப த்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளும் தாராளமாக இருக்கும். வீடு,மனை, வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும் பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்க ளுக்கு பணியில் கௌரவமான பதவிகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். விஷ்ணு பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-08-2013 காலை 07.36 மணிமுதல் 
12-08-2013 மதியம் 04.47 மணிவரை

செப்டம்பர்

பிறர் வாழ்வில் குறுக்கிடாத உயர்ந்த பண்பு கொண்ட உங்களுக்கு 5ல் குருவும், 6ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறை வேற்று வீர்கள் அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கமுடியும். 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் எடுத்துக் கொள்வ தும், குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல் வதும் நல்லது. தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை திறமையாக சமாளிக்க முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றும்.
சந்திராஷ்டமம் 06-09-2013 மதியம் 03.05 மணி முதல் 
08-09-2013 இரவு 09.36 மணிவரை

அக்டோபர்

பிடிக்காதவற்றை துச்சமாக நினைத்து தூறஎறியும் குணம் கொண்ட உங்களுக்கு 5ல் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகா ரியங்கள் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் பாக்கியமும் அமையும். பணவரவுகளு க்கும். பஞ்சம் ஏற்படாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிச்சியை அளிக்கும். 8ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கிய வர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03-10-2013 இருவு 10.37 மணிமுதல் 
06-10-2013 அதிகாலை 05.22 மணிவரை

நவம்பர்

எளிதில் பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, 5ம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உறவினர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். மாதபிற்பாதியில் சூரியன் 10ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினை அடைய முடியும்.
சந்திராஷ்டமம் 31-10-2013 காலை 06.12 மணிமுதல் 
     02-11-2013 பகல் 01.06 மணிவரை 
     27-11-2013 மதியம் 01.44 மணி முதல் 
     29-11-2013 இரவு 08.56 மணிவரை

டிசம்பர்

மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தும் வைராக்கிய சாலியான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 5ல் சஞ்சரிக்கம் குரு வக்ரகதியிலிருந்தாலும் 10ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஜீவனரீதியாக சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்க லில் சிந்தித்து செயல்படுவது நல்லது. 8ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 24-12-2013 இரவ 09.18 மணிமுதல் 
     27-12-2013 காலை 04.51 மணிவரை

அவிட்டம் 3, 4ம் பாதங்கள்

ஒழுக்கம் நிறைந்த பண்பாளராக விளங்கும் அவிட்ட அன்பர்களே! உங்களின் உடல் நிலை சிறப்பாக இருக்கம். ஆண்டின் தொடக்கத்தில் 4ல் சஞ்சரிக்கும் குருபகவான் ஜூன் முதல் 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகளில் சிறப்பா னநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களும் தடையின்றி கைகூடும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். தொழில் வியா பாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களையும் பெறமுடியும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும்.

சதயம்

திடமான உடலமைப்பும், ஆத்மபலமும் கொண்ட சதய அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி சனி 9ம் வீட்டில் ராகுசேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக அனுகூலங்கள் உண்டா கும். பயணங்களால் எதிர்பார்த்த சாதகமானப் பலன்களை அடையமுடியும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் அவையாவும் சரியாகிவிடும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும் குடும்பத்தில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும்

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகம் கொண்ட பூரட்டாதி அன்பர்களே! நினைத்த காரிய ங்களை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவு களிலும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளை ஆண்டின் பிற்பாதியில் பெறமுடியும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைபளுவும் குறையும். தொழில் வியாபாரம் மேம்படும்.
அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 5,6,8,14,15,17 நிறம் - வெள்ளை, நீலம்  
கிழமை - வெள்ளி, சனி கல் - நீலக்கல்
திசை - மேற்கு தெய்வம்  - ஐயப்பன் 

பரிகாரம்

28-05-2013 வரை குருபகவான் 4ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகார ங்களை செய்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறவஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.


please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.1 comment:

Tamil Latest Movie News said...

உங்கள் ஜோதிட பலன் மிகவும் நன்றாக உள்ளது.