Friday, December 21, 2012

2013 ஆண்டு பலன்கள் கடகராசி2013 ஆண்டு பலன்கள் கடகராசி

தங்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி தைரியமாக எடுத்துரைக்கும் கடகராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2013ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு லாபஸ்தனமான 11ம் வீட்டில் பொன்ன வனான குருபகவான் வரும் 28-05-2013 வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும். ஜென்ம ராசிக்கு 4ம் வீட்டில் சனி சந்திப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வீண்விரயங்கள் உண்டாகும். வரும் 28-05-2013 முதல் குருபகவானும் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணி களில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடிமுடியும். ஆரம்பர செலவுகளை குறைப்பதும் நல்லது.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சுமாராகத் தானிருக்கம். ஜென்ம ராசிக்கு 4ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி பாதிப்புகளும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வும் பாதிப்படையும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதநிலை ஏற்படும்.

 குடும்பம் பொருளாதாரநிலை

ஜென்ம ராசிக்கு 4ல் சனி ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டா கும், என்றாலும் மேமாதம் வரை குருபகவான் லாபஸ்தனமான 11ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளா தார நிலையானது சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் கைகூடி மகிழ்சியளிக்கும். கண வன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக் கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கொடுக்கல் வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கம். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மைகள் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு களால் மேலும் லாபங்கள் பெருகும். ஆண்டின் பிற்பாதியில் குரு விரயஸ்தானத்திற்கு மாறுதலாவதால் பிறரை நம்பி பணம் வாங்கல் போன்றவற்றில் கவன முடனிருப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் தேக்கம் அடையாது புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும் மே மாதத்திற்குள் முடித்து கொள்வது நல்லது அதன் பிறகு எதிலும் சிந்தித்து செயல்படுவதும், கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் மே மாதத்திற்குள் கிடைக்கும். இடமாற்றங்களையும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரமுடியும். ஜூன் மாதம் முதல் உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து செல்வது, மேலதிகா ரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படுவதால் அலைச்சல்களும், நிம்மதி குறைவும் உண்டாகும்.

 அரசியல்வாதிகளுக்கு

உங்களின் பெயர் புகழுக்கு பங்கம் வராது என்றாலும் உடனிருப்பவர்களால் வீண் பிரச்ச னைகளை சந்திக்க வேண்டியிருக்கம். ஆண்டின் முற்பகுதியில் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் பிற்பகுதியில் வரவுக்கு மீறிய செலவுகளும் உண் டாகும். பலபெரிய மனிதர்களின் தொடர்பை இழக்க வேண்டிவரும். கொடுத்த கடன்களையும் வசூலிப்ப தில் இடையூறுகள் உண்டாகும்.

 விவசாயிகளுக்கு

விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட கஷ்டத்திற்கு பலனை அடைந்து விடமுடியும். காய்கறி, பூ, பழம் போன்றவற்றாலும் ஓரளவுக்கு லாபம் இருக்கும். கால்நடைகளால் சிறுசிறு செலவு கள் ஏற்பட்டாலும், புதிய நவீன கருவிகளை வாங் கிப்போடுவீர்கள். அசையாசொத்துக்களும் சேரும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்;கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறு ப்புடன் செயல்படமுடியும். ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். பணவரவுகளும் சிறப்பாக அமை வதால் பொன் பொருள் சேரும், ஜூன் மாதத்திற்கு பின்பு எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

படிப்பு

கல்வியில் கவனக்குறைவும் மந்த நிலையும் உண்டாக கூடிய காலமாகும் நன்றாக படித்த பாடங்களும் 4ல் சனி ராகு சஞ்சரிப்பதால் தக்க சமயத்தில் மறந்து போக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்த்து காத்திருக்கும். உதவிகளும் சற்று தாமதப்படும். உடன் பழகுபவர்க ளிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரோஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு நல்ல லாபங்கள் கிட்டும்.

ஜனவரி

நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு, உங்கள் ஜென்ம ராசிக்கு 5ம் வீட்டில் சுக்கிரனும் மாதமுற்பாதிவரை 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சற்றே தடைகள் ஏற்பட்டாலும், தொழில் வியாபார ரீதியாக பலவ கையிலும் லாபங்களை பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்தணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 14-01-2013 காலை 09.52 மணி முதல் 
     16-01-2013 மதியம் 03.38 மணிவரை

பெப்ரவரி

சாந்தமும், சகிப்பு தன்மையும், அமை தியான சுபாவமும் கொண்ட உங்களுக்கு லாபஸ்தனமான 11ம் வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடன்களும் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியனும் 8ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டு நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றமை நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறை யும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனு சரித்து செல்லவும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-02-2013 மாலை 06.06 முதல் 
     12-02-2013 இரவு 11.27 மணி வரை.

மார்ச்

தன் முயற்சியால் பல சாதனைகளை செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் 4ல் சஞ்ச ரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதாலும் அலைச்சல்கள் குறை ந்து நிம்மதி நிலவும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தி யாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்;கள்தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பா ர்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். உடல் ஆரோக் கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடமுடியும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-03-2013 அதிகாலை 01.39 முதல் 
      12-03-2013 காலை 06.47 மணி வரை

ஏப்ரல்

எதையும் எளிதில் சாதிக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன், செவ்வாயும் லாபஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கு வீர்கள் பொருளாதர மேம்பாடுகளில் குடும்பத்தில் சுபகாரியங்களும் நடைபெறும். கொடுக்கல் வாங்க லிலும் நல்ல லாபங்கள் உண்டாகும். பலபெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோ கஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரமும் மேம்படும். துர்க்கை அம்ம னை வழிபடவும்
சந்திராஷ்டமம் 06-04-2013 காலை 09.21 மணிமுதல் 
     08-04-2013 மதியம் 02.36 மணிவரை

மே

எதிலும் தீர ஆலோசித்த பின்னரே செயல்பட கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் செவ்வாயும் 11ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவிகள் தேடிவரும். பயணங்களால் லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 03-05-2013 மாலை 5.15 மணி முதல் 
     05-05-2013 இரவு 10.08 மணி வரை.

ஜூன்

  இரக்க குணமும் வெகுளித்தனமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 11ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக் கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டா கும். என்றாலும் இம்மாதம் முதல் குருபகவான் விரயஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரிய ங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம 31-05-2013 அதிகாலை 01.20 மணி முதல்     
         02-06-2013 காலை 05.59 மணி வரை 
    27-06-2013 காலை 09.32 மணி முதல் 
    29-06-2013 மதியம் 02.02 மணி வரை.

ஜூலை

தேவையானாலும், தேவையில்லாவிட் டாலும் எதையும் சேர்த்து வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன், செவ்வாய் குருவும் 4ல் சனியும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும், அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார், உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சனிபகவானுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 24-07-2013 மாலை 05.44 மணி முதல் 
     26-07-2013 இரவு 10.02 மணி வரை

ஆகஸ்ட்

சிறுசிறு விஷயங்களுக்காக கூட அதிகம் கவலைப்படும் உங்களுக்கு ஜென்மராசியில் சூரியனும் 12ம் வீட்டில் செவ்வாய் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் நெருக்கடிகளும், குடும்ப த்தில் எதிhபாராத வீண் விரயங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் 21-08-2013 அதிகாலை 1.48 மணிமுதல் 
     23-08-2013 காலை 05.55 மணி வரை.

செப்டம்பர்

நண்பர்களுக்காக எதையும் விட்டு கொடு க்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும், 2ல் சூரியனும், 4ல் சனியம் 12ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்ப விஷ யங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 17-09-2013 காலை 09.45 மணி முதல் 
     19-09-2013 மதியம் 01.45 மணி வரை

அக்டோபர்
எதுவந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில், 2ல் செவ்வாயும், 4ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய போட்டிக ளையும் சமாளிக்க முடியும் பணவரவுகளில் நெருக்க டிகள் ஏற்படுவதால் சில நேரங்களில் கடன்களும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 14-10-2013 மாலை 05.47 மணி முதல் 
     16-10-2013 இரவு 09.32 மணி வரை.

நவம்பர்
தாராளமாக செலவுகள் செய்வதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு 2ல் செவ்வாயும் 4ம் வீட்டில் சனி சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோ க்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரய ங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். முடிந்த வரை உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முருகப் பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 11-112013 அதிகாலை 01.53 மணிமுதல் 
     13-11-2013 காலை 05.29 மணி வரை

டிசம்பர்

வாழ்க்கையில் வசதிகளை பெருக்கி கொள்வதில் அலாதி பிரியம் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாயும் மாதமுற்பகுதியில் 6ல் சூரியனும் சஞ்சரிப்பதும் 12ல் சஞ்சரிக்கம் குரு வக்கிர கதியிலிருப்பதும் ஓரளவுக்கு அனு கூலங்களை உண்டாக்கும் அமைப்பாகும். பணவரவுகள் சுமா ராக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். எடுக்கம் முயற்சிகளில் சற்றே லாபம் அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்ப டையும். தொழில் வியாபாரத்திலும் ஓரளவுக்கு மேண்மையினை அடையமுடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. 
சந்திராஷ்டமம் 08-12-2013 காலை 10.04 மணி முதல் 
      10-12-2013 மதியம் 01.31 மணி வரை

புனர்பூசம் 4ம் பாதம்

மற்றவர்களுக்கு கீழ்படிந்து நடக்கம் குணம் கொண்ட புனர்பூச அன்பர்களே! மே மாதம் வரை ஆண்டுகோளான குருபகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். எடுக்கம் முயற்சிக ளில் வெற்றிகள் கிடைப்பதோடு திருமண சுபகாரிய ங்களும் கைகூடும். ஜூன் மாதம் குருவிரய ஸ்தா னத்திற்கு மாறுதலாகவிருப்பதால் பணவிஷயங்க ளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ஸ்தர்களுக்கு சற்றுவேலை பளுகூடும்

பூசம்

தன்னடக்கமும், மற்றவர்களுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட பூச அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சனி ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிக ரிக்கும் என்றாலும் ஆண்டின் முற்பகுதியில் குருபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவ ரவுகள் தாராளமாக அமைந்து குடும்பதேவை கள்யாவும் பூர்த்தியாகும். பொன்னும் பொருளும் சேரும் கொடுக்கல் வாங்கலிலும் லாபமளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம்

உடல் பலத்தை காட்டிலும் அதிக மூளை பலம் கொண்ட ஆயில்ய அன்பர்களே உங்களுக்கு அர்த்தாஷ்டம் சனி நடைபெறுவதால் உறவின ர்களிடையே கருத்து வேறுபாடும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களும் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமாக சஞ்ச ரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது விடுவது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அமைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 1,2,3,9,10,11,12,18                   கல் - முத்து
நிறம் - வெள்ளை, சிவப்பு திசை - வடகிழக்கு
கிழமை - திங்கள், வியாழன் தெய்வம் - வெங்கடாசலபதி 

பரிகாரம்

உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. இதனால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம். ஜூன் மாதம் முதல் குரு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது வியாழ க்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

1 comment:

Unknown said...

மிக்க நன்றி
பயனுள்ல்ளதாக இருந்தது.
ஜிடி.ரமேஷ்குமார்