Friday, December 21, 2012

2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி

எந்த காரணத்திற்காகவும் நீதி நேர்மையிலிருந்து தவறாமல் வாழக்கூடிய பண்பு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். குரு 10ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் 
28-05-203 முதல் குரு லாபஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் எதிர்கொண்டு லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சி தரும். புத்திர வழியிலும் பூரிப்பு உண்டா கும். கடன்கள் குறைவதோடு கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். வீடு மணை, வண்டி வாகன ங்கள் பொன் பொருள் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பா ர்த்த கௌரவ பதவிகளையும், இடமாற்றங்களையும் பெற்று மகிழ்வார்கள். சேமிப்புகள் பெருகும்.

 குடும்பம் பொருளாதாரநிலை

சனி ராகு 3ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் ஜூன் மாதம் முதல் குரு லாபஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் இந்த ஆண்டு உங்களுக்கு பொற்காலமாக அமையும். தடைபட்டு கொண்டிருக் கும் திருமண சுபகாரியங்களும் ஆண்டின் பிற்பா தியில் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். குழந்தை பாக் கியமும் தடையின்றி அமையும். அசையும் அசையா சொத்துக்களையும் தடையின்றி வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலை உயர்வடையும்.

 தேக ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் மிக சிற ப்பாக அமையும். நீண்ட நாட்களாக எடுத்து கொண்டி ருக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கம் ஒரு தீர்வு உண் டாகும். மனைவி பிள்ளைகளாலும், பெற்றோராலும் இருந்து வரும் மருந்து, மருத்துவ செலவுகளும் குறையும். அனைவரின் அன்பும் ஆதரவும் மன நிறைவாகவும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.


கொடுக்கல் வாங்கல்

கிரக நிலைகளின் சாதகமான சஞ்சா ரத்தால் பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் கொடுக்கல் வாங்கலும் சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பையும் நட்பையும் பெறு வீர்கள். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு களும், வம்பு வழக்குகளும் மறையும்.

 தொழில் வியாபாரிகளுக்கு

நினைத்ததெல்லாம் நிறைவேறும். கூட்டா ளிகளாலும், வேலையாட்களாலும் சிறப்பான லாப ங்களையும் அனுகூலத்தையும் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய நிறுவனங்களையும் நிறுவமுடியும். சிறிய முதலீடுகளிலும் பெரிய லாப த்தையும் பெறுவீர்கள். வெளிய+ர், வெளிநாட்டு தொட ர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

எதிர்பாராத பதவி உயர்வுகளும். ஊதிய உயர்வுகளும் தடையின்றியிருக்கும். சிலருக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்பியவரின் விருப்பமும் நிறைவேறும். அரசு வழியில் அனுகூலங்கள் தேடி வரும். புதிய வேலை வாய்ப்பும் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு

பெயரும், புகழும் உயர்வடையுக் கூடிய காலமாகும். மக்களின் செல்வாக்கினால் புகழின் உச்சிக்கே செல்வீர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றி விடக் கூடிய ஆற்றலும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி வெளியூர் வெளிநாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். மாண்புமிகு பதவிகளும் தேடிவந்து மகிழ்ச்சியளிக்கும்.

 விவாசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். மற்றவர்களின் ஆதரவும் மேலும் உற்சாகத்தை கொடுப்பதால் நவீன முறைகளை கையாண்டு மேலும் உற்பத்தியை பெருக்குவீர்கள். அதற்காக அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். புதிய நிலம், பூமி போன்றவற்றையும் வாங்கி போடுவீர்கள்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணம் பிற்பகுதியில் நல்ல வரன்கள் தேடிவரும். புத்திரபாக்கியமும் சிறப்பாக அமையும். பொன், பொ ருள் சேரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உயர்பதவிகளும் தேடி வரும்.

படிப்பு

கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேன்மையான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் நல்ல உதவிகள் கிடைக்கப்பெறும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள்

 ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றால் சிறப் பான லாபங்கள் பெற்று வாழ்வில் உயர்வடைவீர்கள்.

ஜனவரி

விடாமுயற்சியால் பல சாதனைகள் செய்யும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சனிராகுவும், 6ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனை த்திலும் வெற்றிகிட்டும். செய்யும் தொழில் வியாபா ரத்திலும் நல்ல லாபத்தினைப் பெறமுடியும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோக ஸ்தர்கள் நிலையும் உயர்வடையும். பயணங்களாலும் அனு கூலம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16-01-2013 மதியம் 03.38 முதல் 
     18-01-2013 இரவு 11.48 மணிவரை

பெப்ரவரி

யார் எதை சொன்னாலும் அதை கருத்தில் கொள்ளாது முன்னேறும் உங்களுக்கு 3ல் சனி ராகுவும், 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது அற்பு தமான அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எந்தவித எதிர்ப்புக்களையும் சமாளித்து வெற்றிபெறுவீர்கள் குடும்பத்தில் ஒற்றமையும், சுபீட்ச மும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தி த்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான உயர் பதவிக ளைப் பெறுவார்கள் தட்சிணா மூர்த்தியை வழிப டவும்.
சந்திராஷ்டமம் 12-02-2013 இரவு 11.27 மணி முதல் 
     15-02-2013 காலை 07.09 மணி வரை.

மார்ச்

வீரம் நிறைந்திருந்தாலும், அமைதியுடன் தோற்றமளிக்கம் உங்களுக்கு 3ல் சனிராகு சஞ்சரி த்தாலும், 7ல் சூரியனும், 8ல் செவ்வாயும் சஞ்சரி ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்க ளிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கொடுக்கும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் சரளமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 12-03-2013 காலை 06.47 முதல் 
     14-03-2013 மதியம் 02.40 மணி வரை

ஏப்ரல்

வீண் வம்புக்கு போகாமலும், வந்த சண்டையை விடாமலும் வாழும் உங்களுக்கு 3ல் சஞ்சரிக்கும் குரு வக்கிரகதியிலிருப்பதாலும் மாத முற்பகுதியில் சூரியன் செவ்வாய் 8ம் வீட்டில் இருப்ப தாலும் பணவிஷயங்களில் கவனமுடன் செயல்ப டுவதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் மாத முற்ப குதியில் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும். 
சந்திராஷ்டமம்  08-04-2013 மதியம் 02.36 மணிமுதல் 
      10-04-2013 இரவு 09.53 மணிவரை

மே

மற்றவர்ளை எளிதில் எடைப்போடக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் வக்ரகதியிலிருந்தாலும் 9ல் சூரியனும், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அணு கூல ங்களைப் பெறுவீர்கள். ஆசையும் அசையா சொத்து க்களால் ஓரளவுக்கு லாபங்கள் உண்டாகும். பணவர வுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். திருமண சுபகா ரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறை வேறும். குடும்பத்திலும் சுபாட்சமான நிலையிருக்கம் உற்றார்,உறவி னர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சிய ளிக்கும். தொழில் வியாபாரத்திலும் லாபங்கள் அமை யும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 05-05-2013 இரவு 10.08 மணி முதல் 
     08-05-2013 காலை 05-16 மணி வரை

ஜூன்

நீதி நேர்மைக்கு அடிபணிந்து நடக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு 10ம் வீட்டில் சூரியன் செவ்வாயும் லாப ஸ்தானமான 11ல் குருபகவானும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகளிலிருந்து தடைகள் அனைத்தும் விலகி தாராள தனவரவினைக் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைபட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நிறைவேறும். பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினையும் பெறமுடியும். சேமிப்புகள் பெருகும். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 02-06-2013 காலை 05.59 முதல் 
04-06-2013 மதியம் 12.58 மணி வரை 
29-06-2013 மதியம் 02.02 மணி மதல் 
01-07-2013 இரவு 08.44 மணி வரை.

ஜூலை

உயர்ந்த எண்ணங்களையும், லட்சிய ங்களையும் கொண்ட உங்களுக்கு 11ல் சூரியன் செவ்வாய், குருவும் சஞ்சரிப்பதும், 3ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பாகும். எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் ப+ர்த்தியாகும் குடும்பத்தில் சுபீட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோ கஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவர். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  26-07-2013 இரவு 10.02 மணி முதல் 
      29-07-2013 அதிகாலை 04.26 மணி வரை.

ஆகஸ்ட்

முன்கோபமிருந்தாலும் பெருந்தன்மை யான குணம் கொண்ட உங்களுக்கு 3ம் வீட்டில் சனிராகுவும், லாபஸ்தானத்தில் குரு செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பேயாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும் பொருளாதார மேம்பா டுகளால் சொந்தவீடுமனை, மற்றும் வண்டி வாகனங்களை வாங்குவீர்கள் தொழில் வியாபாரத்தில் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் லாபம் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிரு த்தியையும் பெருக்குவீர்கள். சிவனை வழி படவும். 
சந்திராஷ்டமம் 23-08-2013 அதிகாலை 02.28 மணிமுதல்        25-08-2013 மதியம் 12.06 மணிவரை

செப்டம்பர்
தனக்கு இடையூறு செய்பவர்களை வே ரோடு களையும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 12ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 3ல் சனிராகுவும் 11ல் குருவும் இருப்பதால் எதையும் சமாளிப்பார்கள் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுக ளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சேமிப்புகளும் பெருகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 19-09-2013 மதியம் 01.45 மணி முதல் 
     21-09-2013 மாலை 07.41 மணிவரை

அக்டோபர்

வாழ்க்கையில் எவ்வித இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் தாங்கும் உங்க ளுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும், 3ல் சனி ராகுவும், 11ல் குருவும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். முன் கோபத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகா ரியங்களும் கைகூடும். பொன் பொருள் சேரும் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டா கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் வெளிவட்டாரத் தொடர்பும் மகிழ்;ச்சியளிக்கும். முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்   16-10-2013 இரவு 09.32 மணிமுதல் 
       19-10-2013 அதிகாலை 03.14 மணிவரை

நவம்பர்

வாக்கு சாதுர்யமும், ராஜதந்திரமும் கொ ண்ட உங்களுக்கு 3ல் சனிராகுவும், சூரியனும், 11ல் குருவும் சஞ்சாரம் செய்வதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தினையும் வெற்றியையும் பெறமுடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதர கூடிய சம்பவங்கள் நடை பெறும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திதரமாக வசூலாகும். பயணங்களால் அனு கூலம் ஏற்படும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம்     13-11-2013 காலை 05.29 மணிமுதல் 
15-11-2013 காலை 10.58 மணிவரை

டிசம்பர்

மற்றவர்களுக்கு ஒருபோதும் அடிபணிய விரும்பாத உங்களுக்கு ஜென்மராசிக்கு 2ல் செவ்வாயும் 4ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும் உற்றார், உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 10-12-2013 மதியம் 01.31 மணிமுதல் 
12-12-2013 மதியம் 06.46 மணிவரை.

மகம்

யாருக்கும் அடிமை தொழில் செய்ய விரும்பாத மக நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி ராகு 3ம் வீட்டில்  சஞ்சாரம் செய்வதால் எடுக்கம் முயற்சிகள் அனைத் திலும் வெற்றி கிட்டும். திருமணவயதை அடைந்த வர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் நல்ல வரன்கள் தேடிவரும். கொடுக்கல் வாங்கலும் மேன்மை யளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகள்  கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.

பூரம்

சுகவாழ்வையும், சொகுசுவாழ்வையும் அதிகம் விரும்பும் பூர நேயர்களே உங்களுக்கு பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்கி சேர்ப்பீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி சுபீட்சம் யாவும் உண்டாகும். பகையாளியாக இருந்த வர்களும், உறவாட தேடி வருவார்கள். உத்தியோக த்திலிப்பவர்களுக்கும் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்து ழைப்புகளால் வேலைபளுவும் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் சிறப்பான அனுகூலத்தை பெறமுடியும். சேமிப்பும் பெருகும்.

உத்திரம்-1-ம் பாதம்

எல்லா கலைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட க்கூடிய சித்திரை ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 3ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இது மட்டு மின்றி வரும் ஜூன் மாதம் முதல் குரு பகவானும் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிடக் கூடிய ஆற்ற லைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்க முடியும். பொன்னும், பொருளும் சேரும். கொடுக்கல், வாங்கலிலும் சிறப்பான லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 1,2,3,9,10,11,12,18 கல் - மாணிக்கம்
நிறம் - வெள்ளை, சிவப்பும் திசை - கிழக்கு 
கிழமை - ஞாயிறு, திங்கள் தெய்வம் - சிவன்

 பரிகாரம்
ஜென்ம ராசிக்கு 10ல் வரும் 28-05-2013 வரை குருபகவான் சஞ்சாரம் செய்வதால் குரு வுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரத்தையும், கொண்டை கடலை மாவையும் சாத்தி வழிபடுவது உத்தமம்.
please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.No comments: