Friday, December 21, 2012

2013 ஆண்டு பலன்கள் மிதுன ராசி


2013 ஆண்டு பலன்கள் மிதுனம்

சிரிக்க சிரிக்க பேசியே தனது காரியங்களை சாதித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த 2013ம் ஆண்டில் ஆண்டுக்கோளான குரு பகவான் 28-05-2013 வரை விரய ஸ்தனமான 12ம் வீட்டிலும் பின்பு குரு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங்களில் சிந்தித்து செய்படுவது நல்லது. சனியும் ராகுவும் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளால் விரயமும், புத்திர வழியில் மனக்கவலைகளும் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு நன்மதிப்பு குறையும். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளும் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு உண்டாக கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி குறையக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கேது லாப ஸ்தானத்திலிருப்பதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

தேக ஆரோக்கியம்

உங்களுக்கு குருபகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்துல் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்ப டுத்தும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும், தாய் தந்தையாலும் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது.

குடும்பம் பொருளாதாரநிலை

ஆண்டின் தொடக்கத்தில் குரு விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வதும் சனிபகவான் ராகு சேர்க்கை பெற்று 5ல் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை. எனவே கணவன் மனைவி எதிலும் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது உற்றார், உறவினர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதும் குடும்ப விஷய ங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளா திருப்பதும் நல்லது.

கொடுக்கல் வாங்கல்

குருபகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணவரவுகளில் சுமாரான நிலையேயிருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கொடுத்த கடன்களை திரும்பப் பெற முடியாமல் போகும். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதமடையும். அசையாசொத்து க்களால் தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள்.

தொழில் வியாபாரிகளுக்கு

உங்கள் ஜீவனஸ்தானபதி குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு மந்தமான சூழ்நிலையே உண்டாகும். பொருட் தேக்கமும் ஏற்படும். போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாக செயல்படமாட்டார்கள். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செய்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயர் பதவிகளை உங்கள் கண் எதிரிலேயே பிறர் தட்டிச் செல்வார்கள். குருவின் சாதகமற்ற சஞ்சரிப்பால் வரவேண்டிய சம்பளபாக்கிகளும் இழுபறி நிலை யிருக்கும். முடிந்த வரை உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும், உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது.

 அரசியல்வாதிகளுக்கு

உங்கள் பெயருக்கும், புகழுக்கும் பங்கம் விளைவிக்க எதிராளிகள் தயாராக இருப்பார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த்தைகளை கூட தீய பிரச்சனைகளுக்கு சாதகமாக்கி கொள்வா ர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பா ற்றினால் மட்டுமே மக்களின் முழு ஆதரவினை பெறமுடியும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும்.

விவசாயிகளுக்கு

புழு, பூச்சிகளின் தொல்லைகள் அதிக ரிப்பதால் பயிர்களை காப்பாற்ற அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். பட்டபடிப்புக்கு பலனிற்றி போகுமோ என்ற பயஉணர்வு உண்டாகும். என்றா லும் அரச வழியில் சிறுசிறு அனுகூலங்களைப் பெறுவீர்கள் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளும் ஈடேறும்.

 பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். குடும்ப விஷயங்களை தேவையின்றி பிறர்பகிர்ந்து கொள்ளாதிருப்;பது நல்லது. கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் விரயங்க ளை ஏற்படுத்தும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

 படிப்பு

கல்வியில் ஆர்வகுறைவு உண்டாக கூடிய காலம் என்பதால் முடிந்தவரை தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து விடுவது நல்லது. மேற்கல்வி கற்பவர்களுக்கு மனது அலைபாயும் காதல் வளையில் மாட்டிக் கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டு போட்டிகளின் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறமுடியும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எந்த தொகைகளையும் ஈடுபடாதிருப்பது நல்லது. வீண் விரயங்களும் குறையும்.

ஜனவரி

எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தமஸ்தானமான 7ம் வீட்டில் சூரியனும் 8ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் கணவன் மனைவியி டையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களால் நிம்மதி குறைவை சாதிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவ ர்களுக்கும் கூட்டாளிகளிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். சூரியபகவானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12-01-2013 காலை 06.02 மணி 
    14-01-2013 காலை 09.52 மணிவரை

பெப்ரவரி

பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் சூரியனும் 12ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்கவேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பதை கொண்டு லாபம் காண்பது நல்லது. தேவையற்ற பயண ங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-02-2013 மதியம் 02.41 மணி முதல்
;      10-02-2013 மாலை 06.06 மணி வரை


மார்ச்

சமயத்திற்கேற்றவர் போல தன்னை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் செவ்வாயும் மாத முற்பகுதியில் சூரியன் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரரீதியாக நல்ல முன்னேற்றங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும் குரு 12ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தாமதப்படும். பணவரவுகளும் சுமாராகத்தாணிருக்கும், துர்க்கையம்மனை வழி படவும்.
சந்திராஷ்டமம் 07-03-2013 இரவு 10.19 மணிமுதல் 
     10-03-2013 அதிகாலை 01.39 மணி வரை

ஏப்ரல்

சமூகவாழ்வில் அதிக அக்கரைக் கொண்ட உங்களுக்கு சூரியன் செவ்வாய் பலமாக சஞ்சாரம் செய்வதால் எடுக்கம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும் ஜீவனரீதியாக நன்றாக சம்பாதிக்கும் யோகத்தையும் கொடுக்கும் தொழில் வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளால் மனச்சஞ்சலங்கள் ஏற்படும். திருமணசுபகாரியங்கள் தடைகளுக்கும் பின் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் 04-04-2013 காலை 06.01 மணி முதல் 
      06-04-2013 காலை 09.21 மணி வரை

மே

எவ்வளவு கோபமிருந்தாலும் அதை வெளிகாட்டாமல் செயல்படும் உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள் அசையா சொத்துக்களால் வீண்விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளுகூடும் ஆஞ்ச நேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம 01-05-2013 மதியம் 02.02 மணி முதல் 
03-05.2013 மாலை 5.15 மணி வரை 
28-05-2013 இரவு 10.14 மணி முதல் 
  31-05-2013 அதிகாலை 01.20 மணி வரை

ஜூன்

நிதானமான அறிவாற்றலுடன் சிந்தித்து செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசியில் குருபகவானும் விரயஸ்தானமான 12ல் செவ்வாய் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவசெலவுகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை தாமதங்களை சிந்திக்கநேரிடுவதால் மனநிம்மதி குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும். சிவபெரு மானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-06-2013 காலை 06.30 மணி முதல்
     27-06-2013 காலை 09.32 மணி வரை

ஜூலை

சமயத்திற்கேற்றறார் போல தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்க ளுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதால் வீன் அலைச்ச ல்களும் விரயங்களும் உண்டாகும். குடும்பத்திலு ள்ளவர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும் பத் தேவைகளை பூர்த்தி செய்யவே கடன் வாங்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பா ராத இடமாற்றம் ஏற்படும். சிவனை வழிபட வும்.
சந்திராஷ்டமம் 22-07-2013 மதியம் 02.50 மணி முதல்
     24-07-2013 மாலை 05.44 மணி வரை.

ஆகஸ்ட்

எதையும் வெகு சீக்கிரத்தில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்மராசியில் குருவும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் முன்கோபத்தை குறைப்பதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டி யிருக்கும். மாத முற்பகுதியில் சூரீயன் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவு அனுகூலங்களைப் பெறுவீர்கள் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-08-2013 இரவு 11.01 மணி முதல் 
     21-08-2013 அதிகாலை 1.48 மணி வரை

செப்டம்பர்

பிடிக்காதவர்களை ஒரு நொடியில் தூக்கி எறிந்து விடக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு சுமாரான நற்பலனை பெற முடியும். பண வரவுகள் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் என்று கூறமுடியாது. கொடுக்கல் வாங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடாதிருப்பத நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் வீண்வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள்; கடன்கள் உண்டாகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 15-09-2013 காலை 07.08 முதல் 
      17-09-2013 காலை 09.45 மணி வரை.

அக்டோபர்

சிரித்து பேசியே காரியங்களை சாதித்துக் கொள்ளும் உங்களுக்கு ஜென்மராசியில் குருவும் 4ம் வீட்டில் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடை படும் தேவையற்ற பயணங்களால் அலைச் சல்கள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் விரயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம் 12-10-2013 மதியம் 03.10 மணி முதல் 
      14-10-2013 மாலை 05.47 மணி வரை.

நவம்பர்

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாயும் மாதமுற்பகுதியில் 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனை களிலிருந்து ஓரளவுக்கு விடுதலை பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். கொடுக்கல், வாங்கலில் பிறருக்கு முன் ஜாமின் கொடுப்பதை தவிர்க்கவும். லட்சுமியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-11-2013 காலை 07.35 மணி முதல் 
     11-11-2013 அதிகாலை 01.53 மணி வரை.

டிசம்பர்

பிறர் ரசிக்கும்படி பேசக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு கிரக திசைகள் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் மாதமுற்பகுதியில் சூரியன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளிப்பீர்கள். முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கு வீண் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அரசவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தியை பெருக்க முடியாமல் போகும். கடன்களும் குறையும். சிவபெ ருமானை வழிபடவும்.
ந்திராஷ்டமம் 06-12-2013 அதிகாலை 2.47 மணிமுதல் 
     08-12-2013 காலை 10.04 மணி வரை.

மிருகசீரிஷம்

தன்னுடைய அறிவுத்திறமையால் வாழ்வில் பல முன்னேற்றங்களைப் பெறக்கூடிய மிருகசீரிஷ அன்பர்களே! இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கும். எடுக்கம் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைக்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான நிலையே இருக்கம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேறபார்ப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

திருவாதிரை

எடுக்கும் காரியங்களில் கண்னாக செயல் பட்டு வெற்றி பெறும் திருவாதிரை அன்பர்களே! உங்களுக்கு குருபகவான் இந்த வருடம் முழுவதும் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். திருமண காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது சிலருக்கு வேலைபளு அதிகரிப்பதால் அடிக்கடி விடுமுறை எடுக்க நேரிடும்

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்

தான தர்மங்கள் செய்யகூடிய உயர்ந்த பண்பு கொண்ட புனர்பூசநட்சத்திர அன்பர்களே! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதி ப்புகள் உண்டாகும். திருமண சுபகாரியங்க ளுக்கா ன முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட க்கூடும் என்பதால் சிக்கனமான செயல்படுவது நல் லது. வீடுமனை, வண்டி வாகனம் போன்ற வற்றால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வெளியூர் வெளிநா டுகளுக்கு சென்று பணிபுரியவிரும்புவோரின் விருப்ப ங்கள் தாமதமடையும். சேமிப்பும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பபை
எண் - 5,6,8,14,15,17 கல் - மரகதம்
நிறம் - பச்சை, வெள்ளை திசை - வடக்கு 
கிழமை - புதன், வெள்ளி தெய்வம் - விஷ்ணு

 பரிகாரம்

உங்கள் ஜென்ம ராசிக்கு 12, 1ல் குரு சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபமேற்றி கொண்டை கடலை மாலையும் மஞ்சள் நிறவஸ்திரமும் சாத்தி மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. 5ல் சனி ராகு சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, துர்க்கை அம்மணை வழிபாடு செய்வது நல்லது.


please contact my postal adress  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.

No comments: