சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும். சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு.
சுக்கிரன் தனித்து அமையாமல் பாவ கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அது போல சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை ரீதியாக பிரச்சனைகளை உண்டாகும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். கண்களில் நோய் தவறான பெண்களின் சேர்க்கையால் பாலியல் நோய்களுக்கு ஆளாக கூடிய நிலை, மர்ம உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை வியாதி, போன்றவை ஏற்படும். சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய் க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது. அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்களங ஏற்படும்.
பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.
அதுவே சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூவமற்ற நிலை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
சுக்கிர திசை சுக்கிரபுக்தி
சுக்கிர திசையில் சுக்கிர புக்தியானது 3&வருடங்கள் 4&மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம், ஆடை ஆபரண மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, புத்திர பாக்கியம், பகைவரை வெல்லும் வலிமை, கலை, இசைத்துறைகளில் நாட்டம், உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன் பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கஷ்டம் துக்கம், பிரிவு, சண்டை சச்சரவு, மர்மஸ்தானங்களில் நோய், பெண்களால் பிரச்சனை, வீடு மனை, வண்டி வாகனங்களை இழந்து நாடோடியாக திரியும் அவலம் உண்டாகும்.
சுக்கிர திசை சூரிய புக்தி
சுக்கிர திசையில் சூரிய புக்தியானது 1வருடம் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள் வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் அமையும் யோகம். அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் அரசு வழியில் தொல்லை, வேலையாட்களால் பிரச்சனை, இடம் விட்டு இடம் போகும் நிலை, தந்தைக்கு தோஷம் பூர்வீக வழியில் அனுகூலமற்ற நிலை, பங்காளிகளுடன் வம்பு வழக்கு, சமுதாயத்தில் கௌரவ குறைவு கண்களில் பாதிப்பு போன்ற சாதகமற்ற பலன் ஏற்படும்.
சுக்கிரதிசை சந்திர புக்தி
சுக்கிர திசையில் சந்திர புக்தி 1வருடம் 8மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம். ஜலத் தொடர்புடையவைகளால் அனுகூலம் வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபம் தாய் வழியில் மேன்மை, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம் கணவன் மனைவியிடையே ஒற்றும¬ ஏற்படும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் நிலை, ஜலத்தொடர்புடைய உடல் நிலை பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகை, ஜீரணமின்மை, வயிறு கோளாறு, கர்ப கோளாறு, கண்களில் பாதிப்பு, வண்டி வாகனங்களால் வீண் விரயம், தேவையற்ற மனக்குழப்பங்கள், எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தோல்வி போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தி
சுக்கிர திசையில் செவ்வாய் புக்தியானது 1வருடம் 2 மாதங்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் இழந்த வீடு மனை சொத்துக்கள் திரும்ப கைக்கு கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம் விவேகம் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலமும் நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பூமி மனை இழப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட உடல் நிலை பாதிப்பு நெருப்பால் கண்டம், ஆயுதத்தால் காயம் படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை பணநஷ்டம், சகோதரர் மற்றும் பங்காளிகளால் மனகஷ்டம், தேவையற்ற வம்பு வழக்குகள், கலகம் அரசு வழியில் தொல்லை உண்டாகும்.
சுக்கிர திசையில் ராகுபுக்தி
சுக்கிர திசையில் ராகுபுக்தி 3வருடங்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள் வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், உணவே விஷமாக கூடிய நிலை, வயிறு உபாதைகள், புத்திர பாக்கியம் உண்டாக தடை, எதிர்பாராத விபத்துகளால் கண்டம், வம்பு வழக்கில் தோல்வி, எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை ஏற்படும். தேவையற்ற பெண் சேர்க்கை, விதவையுடன் தொடர்பு தொழிலில் நலிவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
சுக்கிர திசை குருபுக்தி
சுக்கிர திசையில் குருபுக்தியானது 2 வருடம் 8மாதங்கள் நடைபெறும்.
குருபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவர்களை அழிக்கும் ஆற்றல் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் பிரச்சனை, உடல் நிலையில் பாதிப்பு, சமுதாயத்தினரால் அவமதிப்பு, பிராமணர்களால் சாபம், எதிர்பாராத விபத்துகளால் கண்டம், பணக்கஷ்டம், கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, சுபகாரியங்களில் தடை, சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாக கூடிய நிலை ஏற்படும்.
சுக்கிர திசையில் சனிபுக்தி
சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும்.
சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம். வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சனி பலமிழந்திருந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதிர்பாராத விபத்துக்களால் கண்டம் மற்றவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் அமைப்பு வண்டி வாகனங்களை இழக்கும் நிலை பகைவர்கள் அதிகரிக்கும் நிலை உண்டாகும்.
சுக்கிர திசையில் புதன் புக்தி
சுக்கிர திசையில் புதன் புக்தியானது 2வருடம் 10மாதம் நடைபெறும்.
புதன் பலம் பெற்றிருந்தால் கணக்கு, கம்பியூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஆடை ஆபரண, வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல் பேச்சாற்றல், ஞாபக சக்தி கணக்கு துறைகளில் ஈடுபாடு தான தரும காரியங்கள் செய்ய கூடிய வாய்ப்பு அமையும். நினைத்து நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியல் முன்னேற்றம் உண்டாகும்.
சுக்கிர திசையில் கேது புக்தி
சுக்கிர திசையில் கேது புக்தியானது 1வருடம் 2மாதங்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். தாராள தனவரவும் கிட்டும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், உடல் நிலை பாதிப்பு, வயிறு கோளாறு கல்வியில் மந்த நிலை, விபத்துகளால் கண்டம் பணவிரயம், விதவைகளால் வீண் பிரச்சனைகள் இடம் விட்டு இடம் சுற்றி தரியும் சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிர திசைக்குரிய பரிகாரங்கள்
வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது, வைரக்கல் மோதிரம் அணிவது, மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது உத்தமம். வைரக்கல்லை அணியலாம்.
please contact my postal adress
Jothidamamani
MURUGUBALAMURUGAN M.A.ASTRO.
Astro Ph.D research scholar
Guest Faculty For M.Sc. B.Sc. astrology, KARPAGAM UNIVERSITY, Coimbatore.
No-117/33 Bhakthavachalam colony 1st street, (Near Valli Thirumanamandapam)
Vadapalani,
Chennai-600026
My Cell - 0091 - 7200163001, 9383763001
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
15 comments:
//கேது நின்ற வீட்டதிபதி பலம் இழந்திருந்தால் தீர்த்த யாத்திரைகளுக்கு செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்கள் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், தெய்வ பக்தி, பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். தாராள தனவரவும் கிட்டும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் //
இரண்டிலுமே பலம் இழந்திருந்தால் என உள்ளதே
ஐயா என்னுடைய பிறந்த தேதி 30.12.1984 காலை 7.45 எனக்கு சுக்கிர திசை செவ்வாய் புத்தி நடக்கிறது இப்போது என்ன பலன்
ஐயா எனது பிறந்த தேதி
30.12.1984
எனக்கு சுக்கிர திசை செவ்வாய் புத்தி நடக்கிறது இப்ேபாது என்ன பலன்
ஐயா என் பிறந்த தேதி 05.02.1981 இப்போது என்ன பலன்
அய்யா என் பிறந்த நாள் 6.5.1996 மேஷம் ராசி பரணி நட்சத்திரம் எங்கள் புதிய வீடு பதில் நிற்கின்றது
அய்யா என் பிறந்த நாள் 6.5.1996 மேஷம் ராசி பரணி நட்சத்திரம் எங்கள் புதிய வீடு பதில் நிற்கின்றது
Sir my date of birth 8.12.1993,raghu dasai Ena puthinu therila iPa enaku gov job kidaikuma sir
We both same date of birth and year
Iyya en pirandha neram 17.8.1982 pahal.1.30 mani yenaku sukkira dasa yepdi irukkum
என்னுடைய மகன் 25.06.2012 அன்று பிறந்தான்.அவர் ஜாதகத்தில் சூரியனை சனி பார்ப்பதால் தந்தை மகன் பிரிந்து வாழுமாறு சொல்கிறார்கள்.தாயும் குழந்தையும் சுக்கிர திசையில் பிறந்திருப்பதால் சுக்கிரன் தன வரவை கொடுக்க மாட்டார் என்கிறார்.விளக்கவும்
சுக்கிரதிசையில் எந்தெந்த புத்தி என்ன பலன் தரும் என தெளிவாக இருந்தது
மேலும் சுக்கிரதிசையில் சுக்கிரன் புத்தியில் சூரியன் அந்தரம் எப்படிவேலைசெய்யும் அந்தரத்தையும் சேர்த்து இருந்தால் இன்னும் தெளிவாக இருக்கும்
சுக்ர திசை புதன் புத்தி, விருச்சிகம் ராசி, கேட்டை நட்சத்திரம்.. பிறந்தநாள் 12/04/1982.. அரசாங்க வேலை என்றாலும் வேலையை விட்டு வெளியேற்ற படும் சூழ்நிலை.. வேலை காப்பாற்ற படுமா ஜீ
ஐயா வணக்கம் நான் மிதுனம் ராசி மிருகசிரிசம் நட்சத்திரம் சனி திசை கேது புத்தி நடக்கிறது என்ன பலன் ஏற்படும்
ஐயா வணக்கம்.எனது பிறந்தநாள் 27-10-1980.நான் மிதுனம் ராசி மிருகசிரிசம் நட்சத்திரம் சனி திசை கேது புத்தி நடக்கிறது என்ன பலன் ஏற்படும்
ஐய்யா என் மகன் 19-06-1998 அன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர் அன்று முதல் கஸ்டம் என்ன பரிகாரம் சொல்லுங்கள்
Post a Comment