Tuesday, May 14, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசி


மிதுனம் 

மிருகசீரிஷ ம் 3, 4 திருவாதிரை, புனரபூசம் 1,2,3ம் பாதங்கள்

எவ்வளவு வேலைகள் செய்தாலும் களைப்பின்ற எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு கேந்திரஸ்தானங்களான 7.10க்கு அதிபதியான குருபகவான் வரும் 28.5.2013 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பஞ்சம ஸ்தானமான 5.ம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் எற்படும் என்றாலும் கேது லாபஸதானத்திலிருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். குருபார்வை 5,7,9 ஆம் இடங்களுக்கு இருப்பதால் புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவு கள் தோன்றி மறையும். பெரிய கெடுதி யில்லை. பயணங்களால் ஓரளவுக்கு அனு கூலம் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ய பவர்களுக்கு கூட்டாளிகளாலும், தொழி லாளர்களாலும் ஆதாயங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங் களை தவிர்க்க முடியும்.வீடு மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

-----------------------------------------------------------------------------------------------------------
முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடுகுரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.comBank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
----------------------------------------------------------------------------------------------------------------------------------

தேக ஆரோக்கியம் : 

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அடிக்கடி ஏதாவது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பாட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகி விடும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபீட்சமாகவே இருப்பார்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்த்தால் மன நிம்மதி யும் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை :

குடும்பத்தில் எடுக்கும் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், பணவரவுகள் ஓரளவக்கு சிறப்பா கவே இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்து விஷயங் களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். கடன்கள் ஏற்படாது.

கொடுக்கல் வாங்கல் :

குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்தாமல் இருப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுத்த கடன் களை வசூலிப்பதில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது.

தொழில் வியாபாரிகளுக்கு :

புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே நடைபெறம். போட்டிகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற வேண்டியி ருக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றமையுடன் செயல்படுவதால் தேக்கநிலை ஏற்படாமல் லாபத்தை பெறமுடியும். தேவை யற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகஸ்தர்கள் எதிர்ப்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதமான நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் பிரச்சினை யின்றி பணிபுரிய விரும்புவோரின் விரும்பங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் நிறைவேறும். முடிந்தவரை உடன்பணிபவர்களின் தேவை யற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யா திருப்பது நல்லது. வேலை பளு அதிகரித் தாலும் எதையும் சமாளிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கள் சிறப்பாக இருக்குமென்பதால் கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றி காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறை செலவு செய்யவேண்டியிருந்தாலும், வரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படுமென்றாலும் அதன் மூலம் அனுகூல பலன்களையும் அடைய முடியும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபமும் சுமாராகத்தவிருக்கும். புதிய நவீன முறைகளை கையாண்டு லாபத்தை பெற முயற்சி செய்வது நல்லது சொந்த பூமிமனை போன்றவற்றை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி யினை ஏற்படுத்தும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சிறப்புடன் செயல்படமுடியும். பண வரவுகள் தேவைக்கேற்ற படியிருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூமி வீடு மனை போன்றவை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய ஆசை சிறுசிறு தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றால் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை உண்டாக்கும்.

படிப்பு :

மாணவ மாணவியருக்கு கல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் தாண்டி நல்ல மதிப்பெண்களை பெறமுடியும். நல்ல நட்புக்கள் தேடிவரும். கல்விக்காக பல பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பயணங் களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

ஸ்பெகுலேஷ ன்

லெட்டரி ரேஸ்  ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013

குருபகவான் ஜென்ம லக்னத்திலேயே சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் 6, 11. க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்திலிருப்பதால் சிறுசிறு மறைமுக எதிர்புகளை சிந்திக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அனைவரிடமும் அனுசரித்து நடந்துக் கொள்ளுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு முயற்சிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவை களை தடையின்றி பூர்த்தி செய்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல்கள் மட்டும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதும், பிறருக்கு முன்ஜாமீன் வாக்குறுதி போன்றவற்றை கொடுக்காதிருப்பதும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் சிறு சிறு பிரச்சனை களை சந்தித்தாலும பெறவேண்டிய லாபத்தை பெற்று விடமுடியும். பயணங்களாலும் அனு கூலம் உண்டாகும். உத்தியோகஸ் தார்கள் தங்கள் பணிகளில் இடையூறுகளின்றி பணி புரிய முடியும். என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். விவசாயி களுக்கு சுமாரான லாபமே இடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல் படுவது நல்லது. முருகனை வழி படவும்.
குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2013 வரை

குருபகவான் ஜென்மராசியில் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவியடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் தோன்றும். பொருளாதார நிலை ஏற்ற இறங்காமல் இருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி யாகும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்தும் கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பிறர் எளிதில் தட்டிச் செல்வ தால் மன நிம்மதி குறையும். உடன் பணி புரிபவர்களிடம் அனுசரித்து நடப்பதன் மூலம் வேலை பளுவை குறைத்துக்கொள்ள முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த் லாபத்தைப் பெற சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தியினை பெருக்கு கொள்ளமுடியும். பூர்வீக அசையா சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத் தையும் தவிர்ப்பது நல்லது தூர்க்கையை வழிபடவும்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் ஜென்ம ராசியின்  தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தபலன்களையே பெற முடியும். பண விஷ யங்களில் பிறரை நம்பி பெரிய தொகைகளுக்கு முன்ஜாமீன் கொடுப் பதை தவிர்க்கவும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகளும், எதிர்பாராத உதவிகளும் மகிழ்ச்சியினை உண்டாகும். குடும்பத்தின் பண வரவுகள் திருப்பதிகரமாக இருக்கும். கணவன் மனைவியின் ஒற்றுமையும் சிறப்பாக அமையும். அசையம் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். பல பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களின் பேச்சிற்கு வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புக்களைப் பெற்று லாபத்தைப் பெற முடியும். பயணங்களையும் அடிக்கடி மேற் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவதன் மூலம் தேவையற்றப் பிரச்சினைகள் ஏற்படு வதை தவிர்த்துக் கொள்ளமுடியும். வேலை பளு அதிகரிக்கும் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.3.2014 வரை

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் ஓரளவுக்கு ஏற்றங்களைப் பெறமுடியும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். கேது பகவான் லாபஸ்தானத்திலிருப்பதால் லாபாங்கள் சிறப்பாக இருக்கும். கணவன் மனை ஒற்றுமையுடனிருபவர்கள், புத்திர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புக்கள் தேடிவரும் அடிக்கடி பயணங் கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகம். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியும் பெருக்கிக்கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டினை செலுத்த வேண்டிய காலம் என்பதால் கவனம் தேவை. தேவையற்ற நட்புக்களால் பாதை மாறக் கூடிய சூழ்நிலை ஏற்படும். உத்தி யோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். குருவுக்கு பரிகாரம் செய்யவும்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங் களிலும் சுமாரான நற்பலன்களையே பெற முடியும். லாப ஸ்தானமான 11.ஆம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமத்தில் சிறு சிறு பாதிப்புகளும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் உண்டாககூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. ஆசையம் அசையா சொத்துக்களாலும் விரயங்களை எதிர்கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகளும் பெரிய மனிதர்களின் ஆதரவுகளும் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஒற்றுமை யான செயல்பாடுகளால் அபிவிருத்தியை பெருக்கிவிடுவீர்கள், உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் திறமைகளுக்கேற்ப பாரட்டுதல் கள் கிடைக்கப்பெறுவதுடன், பணியிலும் நிம்மதியான நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது, துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பல பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சர் போட்டாவது வெற்றி யினைப் பெற்றுவிட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறுக்கமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ற உதவிகளும் கிடைக்கும். கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் வீண் மன சஞ்சலங்கள் குறையும். புத்திர வழயில் மனக்கவலைகள் தோன்றும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நம்பிய வர்களே துரோகம் செய்ய துணிவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வு கள் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக் காக உயரதிகாரிகளின் கண்டனத்திற்குநீங்கள் ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறமுடியும். விவசாயி கள் நல்ல விளைச்சலைப் பெற புதிய யுத்தி களை கையாள்வது நல்லது. திருப்பதி தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மிருகசீரிஷ ம் 3,4ம் பாதங்கள்

தான் எடுத்த காரியங்களை கண்ணும் கருத்துமாய் இருந்து முடிக்ககூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதும், கொடுக் கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

திருவாதிரை,

எப்பொழுதும் சுறு சுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்மராசியில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பதும், எந்தவொரு காரியங்களிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தா திருப்பதும் நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற் றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட் டாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபத்தை பெற முடியும்.

புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வராகவும், ஒழுக்க சீலராகவும் விளங்கும் உங் களுக்கு குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பண வி~யங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல்கள் குறையும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங் களை சிந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.

அதிர்ஷ டம் தருபவை

எண் - 5, 6, 8, 14, 15, 17
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை - வடக்கு 
தெய்வம் - விஷ ணு

பரிகாரம் : 

குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங் களை செய்வது, வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிறவஸ்திரமும் கொண்டை கடலை மாலையும் சாந்தி ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 5.ல் சனி சஞ்சரிப்பதால் ஆஞ்சநேயரை வழிபடவும். ராகுவும் 5.இல் இருப்பதால் ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதும் நற் பலனை உண்டாக்கும்.

No comments: