Tuesday, May 14, 2013

குருபெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி


குருபெயர்ச்சி ரிஷபம்

கிருத்திகை 1,2,3 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2, ம் பாதங்கள்

தன் பேச்சாலே எல்லோரையும் கவர்ந்திட கூடிய ஆற்றலும், வசீகரமான உடலமைப்பும் கொண்ட ரிப ராசி அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 8,11.க்கு அதிபதியான குரு பகவான் வரும் 28.5.2013 முதல் தன ஸ்தான மான 2 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இது மட்டுமன்றி தர்மகர்மாதிபதியான சனிபகவானும் ராகு சேர்கைப் பெற்று ருணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லாவிதப் பிரச்சனை களையும் சமாளித்து வெற்றி மேல் வெற்றி களைப் பெறமுடியும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கம். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். குருபார்வை 6,8,10ம் வீடுகளுக்க இருப்பதால் உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் படுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சொந்த கார் பங்களா, போன்ற வற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். பொன்னும் பொருளும் சேரும். கடன்கள் யாவும் குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் இடமாற்றங் களையும் பெற்று மகிழ்வார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள் வீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரி வடையும். பெயர் புகழ் உயரும்.முருகுஜோதிட ஆராய்ச்சி மையம்
நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்
ஜோதிடர்கள் மாநாடு

இடம் ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்
வடபழனி சென்னை

குருபெயர்ச்சியைமுன்னிட்டு
28.5.2013 மாபெரும் காலை 5  மதியம் 1 வரை குருபெயர்ச்சி யாகம்
27.5.2013 மதியம் 3 இரவு 9 ஜோதிடர்கள் மாநாடுகுரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மற்றும் மீன
ராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து
குரு குபேர டாலர், சுதர்சன யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

அன்பர்கள் ரூபாய் 500 (ரூபாய் 1000 வெளிநாடு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
வெளியூர் அன்பர்களுக்கு தபால் (அ) கொரியர் மூலம் பிரசாதம் அனுப்பபடும்

தொடர்புக்கு

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன் .
117-/-33, பக்தவச்சலம் காலனி முதல் தெரு, வடபழனி, சென்னை&600026
செல் 0091 7200163001 , 9383763001,  9444072006

தொடர்புக்கு


please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.comBank account details are


Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078


Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
தேக ஆரோக்கியம் : 

உடல் ஆரோக்கியம் மிக அற்புதமாக அமையும். கடந்த காலங்களிலிருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். உங்களின் பலமும் வலிமையும் கூடுவதால் அன்றாடபணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படமுடியும். குடும்பத்திலுள்ள பெரியவர்களும், மாணவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை :

திருமண வயதை அடைந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் கணவன் மனைவி யிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு அழகான ஆண் குழந்தை பாக்கியமும் இட்டும், பொன்பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்க வேண்டும் என்ற கனவும் நனவாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிப்பர் வண்டி வாகனங் களையும் வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கொடுக்கல்வாங்க :

குருபகவான் தனஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும் லாட்டரி ரேஸ் போன்றவற்றிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் சரளமான நிலை யிருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்து வந்த வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு : 

தொழில் வியாபாரம் செய்யபவர்களுக்கு சிறப்பான லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உதவிகள் தடையின்றி கிடைப்பதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர் வெளிநாடுகளிலும் புதிய கிளை களை நிறுவக் கூடிய நோக்கம் நிறை வேறும். வங்கி கடன்களை அமைக்க முடியும். புதிய நவீனக் கருவிகளையும் வாங்கி கோடுவீர்கள்.

உத்தியோகதஸ்தர்களுக்கு,

இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி, மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி, கிடைக்கும். இதுவரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறை வேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற பணி அமையு;. உடன் பணிபுரி பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். வேலைபளு குறையும் பயணங்களால் அனு கூலங்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

பதவி பெயர் புகழ் யாவும் உயர்வடையக் கூடிய காலமிது. உங்கள் பேச்சிற்கு எல்லா இடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களுக்கு கொடுத்து வாக்குறதிகளை காப்பாற்றவதால் மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கட்சிப்பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் வருவாய் பெருகு வதால் பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சர் சிறப்பாக அமைய புதிய யுக்திகளை கையாளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பூமிமனை மற்றும் புதிய கருவி களையும் வாங்கிப் போடுவீர்கள். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். கால்நடை களாலும் அனுகூலம் உண்டாகும். பால் தயில் நெய் போன்றவற்றையும் உற்பத்தி செய்ய முடியும்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவர் வழி உறவுகளின் ஆதரவுகளால் எதையும் சாதிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பொன் பொருளையும் வாங்கி சேர்ப்பீர்கள். மணமாதவர்களுக்கு மணமாகும். சொந்த வீடுமனை வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். கடன்களும் குறையும்.

படிப்பு 

கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நல்ல பெயரை வாங்கி சேர்ப்பீர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று வரக் கூடிய வாய்ப்பு சுற்றுலா தலங்களுக்கு செல்ல கூடிய வாய்ப்பு கிட்டும். அரசு வழியிலும் பல உதவிகள் கிடைக்கப் பெறும். எல்லா நட்புகளால் நற்பலன் உண்டாகும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், போன்றவற்றால் எல்லா லாபத்தை பெறமுடியும். பெரிய தொகைகளையும் ஈடுபடுத்தலாம்.

குரு பகவான் மிருகசீரிஷநட்சத்திரத்தில் 28.5.2013 முதல் 26.6.2013 வரை

குருபகவான் தன் நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2.ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகரமான திருமண சுபகாரிங்கள் தடை விலகி கைகூடும். கணவன் மனைவி யிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக் கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். விலகும் சென்ற உறவுகள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும் சனி ராகு 6. இல் சஞ்சலிப்பதால் எதிரிகளும் நண்பர்களா வார்கள். சொந்த பூமி மனை, வண்டிவாகனம் போன்றவை வாங்கவேண்டும் என்ற கனவுகள் நிஜமாகும். பொன்னும் பொருளும் சேரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிலிருக்கும். எதிர்பாராத தன வரவுகளாலும் மகிழ்ச்சியடைவீர்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தினை பெறுவர். கை நிறைய சம்பாதிப்பர். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் லாபத்தை அள்ளித்தரும். தினமும் விநாயகரை வழிபடலாம்.

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 27.6.2013 முதல் 28.8.2313 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 2.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்றாலும் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான அதி நவீன பொருட்களும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சயளிப்பதாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர் களுக்கு லாபங்கள் பெருகும். சனியும் ராகுவும் 6.இல் சந்திப்பதால் போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் இரந்த இடந் தெரியாமல் ஓடும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஸ்தலதானங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தி யோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாரா உயர்வு கள் மூலம் கௌரவமான பதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பபெற்று குடும்பத்தோடு சேருவார் கள். விநாயகரை தினமும் வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 29.8.2013 முதல் 13.11.2013 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் குடும்ப ஸ்தானமான 2.ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த மனை, கார் பங்காள போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் யாவும் குறைந்து சேமிப்புகள் பெருகும். குடும்பத்தில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு நினைத் தவரையே கைபிடிக்கும் வாய்ப்பும் உண்டா கும். புத்திர வழியில் மகிழ்ச்சித்தர கூடிய சம்பவங்கள் நடைபெற்று மன நிறைவை உண்டாக்கும். பொருளாதார உயர்வுகளால் பொன் பொருள் யாவும் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். குருபலமாக சஞ்சரிப்பதுடன்  சனி ராகுவும் 6.ஆம் வீட்டிலிருப்பதால் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். கல்வி பயிலுபவர்கள், படிப்பிலும், விளையாட்டுகளிலும் பரிசுகளைப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள், பெயரும் புகழும் உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவனர் வக்ர கதியில் 14.11.2013 முதல் 12.32014 வரை

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இக் காலங்களில் வக்ரகதியிலிப் பதால் பண வி~யங்கில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனியும் ராகுவும் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கார் பங்களா, போன்றவற்றை வாங்க முடியும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு போட்டிகளையும் சமாளிக்;க முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அபிவிருத்தி யும் பெருகும். பயணங்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சம்பள உயர்வும் உண்;டாகும். விவசாயிகள் எதிர்பார்த்தபடியே பயிர் விளைச்சல்கள்  சிறப்பாக இருக்கும். மாணவர் கள் கல்வியில் சாதனை படைப்பார்கள். குருவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

குருபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் 13.3.2014 முதல் 12.4.2014 வரை

குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக் காலங்களில் பண வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி இட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பிரிந்து சென்ற உறவுகளும் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்து வந்த வம்பு வழக்குகள் யாவும ஒரு முடிவுக்கு வரும். 6 இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் சிறு சிறு மறைமுக எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டி வரும் என்றாலும் குருவின் சாகமான சஞ்சாரத்தால் எதையும் எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறம். பதிய நவீனக்கருவிகள் வாங்க அரசு வழயில் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்கள் வீடுதேடி வரும். உத்தியோகத்தி லிருப்பவர்கள் பணியில் திருப்தியுடன் செயல்பட முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும். கல்வியில் மாணவர்கள் நினைத்த மதிப் பெண்களைப் பெறுபவார்கள். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.4.2014 முதல் 13.6.2014 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 2.ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களும் பொற்காலங்களே. பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. 6.ல் சஞ்சரிக்கும் சனி வகரகதி யிருந்தாலும் உடன் ராகு இருப்பதால் எந்த விதப் பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். கணவன் மனைவியிடையே அன் யோன் ஷயம் அதிகரிக்கும் உற்றார் உறவினர் களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண் டாக் கும். பல பெரிய மனிதர்களின்  நட்புகள் நன்மையளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் உண்டாவதுடன்  பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருந்தாலும் உடனிருப்பவர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விவசாயிகளுக்கு லாபம் பெருகும். கால்நடை களாலும் லாபங்கள் கிட்டும். மாணவ மாணவி யர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டும் அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கப்பெறும் சனிக்குரிய பரிகாரியங்களை செய்துவ நல்லது.

கிருத்திகை 1,2,3ம் பாதங்கள்,

சிறந்த பேச்சாற்றலும் நல்ல உழைப் பாற்றலும், குடும்பத்தின் மீது அதிக அக்கறை யும் கொண்ட உங்களுக்கு குருபகவான் தன ஸ்தானமான 2.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். மணமாகதவர் களுக்கு மணமாகும். சனியும் ராகுவும் 6.ல் சஞ்சரிப்பது மேலும் உங்களின் பலததை அதிகரிக்க செய்யக்கூடிய அமைப்பாகும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொருளா தார உயர்வுகளால் பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடை பெறும்.

ரோகிணி,
அமைதியானவராகவும், அடக்கமானவ ராகவும், கடவுளின் அருளை இயற்கை யிலேயே பெற்றவராகவும் விளங்கும் உங் களுக்கு, கருபகவான் குடும்பஸ்தானமான 2.ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக் கும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். திருமண பயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும. சனி, ராகு 6.ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும், இடமாற்றாங்களையும் பெறமுடியும். சொந்த வீடு கார் போன்றவற்றை யும் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்து வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்குவரும். சேமிப்பும் பெருகும்.

மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள் :

நல்ல அறிவாற்றலும் எதிலும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படும் திறனும் கொண்ட உங்களுக்கு குருபகவான் 2.ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். சனி ராகு 6.ம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். சகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. உத்தி யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷட் அளிப்பை

எண் - 5,6,8,14,15,17 
நிறம் - வெண்மை, நீலம் 
கிழமை - வெள்ளி, சனி 
கல் - வைரம் 
திசை - தென்கிழக்கு 
தெய்வம் - வி~;ணு, ல~;மி

பரிகாரம் :

கேது பகவான் 12.ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் தினமும் விநாயகரை வழிபாடு செய்வது. சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது நல்லது.

No comments: