Wednesday, October 30, 2013

நவம்பர் மாத பலன்கள்மேஷம்
எதிலும் துணிச்சலுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சனி ராகு சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. பணவரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். உத்தி யோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து செல்லவும். துர்க்கை அம்ம னை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 04-11-2013 மாலை 05.48 மணிமுதல் 
     06-11-2013 இரவு 08.56 மணி வரை.
ர்pஷபம்
யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்ட க்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சூரியன் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் எதிhபாராத கௌரவமான பதவி களை பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமா ற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவா ர்கள். தொழில் வியாபாரமும் போட்டி பொறாமை களின்றி சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கடன்கள் யாவும் குறையும். சேமிப்புகள் பெருகும் விஷ்ணு பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 06-11-2013 மாலை 08.56 மணி முதல் 
     08-11-2013 இரவு 11.20 மணி வரை
மிதுனம்
கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாயும் மாதமுற்பகுதியில் 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனை களிலிருந்து ஓரளவுக்கு விடுதலை பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். கொடுக்கல், வாங்கலில் பிறருக்கு முன் ஜாமின் கொடுப்பதை தவிர்க்கவும். லட்சுமியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-11-2013 காலை 07.35 மணி முதல் 
     11-11-2013 அதிகாலை 01.53 மணி வரை
கடகம்
தாராளமாக செலவுகள் செய்வதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு 2ல் செவ்வாயும் 4ம் வீட்டில் சனி சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோ க்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரய ங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். முடிந்த வரை உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முருகப் பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 11-112013 அதிகாலை 01.53 மணிமுதல் 
     13-11-2013 காலை 05.29 மணி வரை
சிம்மம்
வாக்கு சாதுர்யமும், ராஜதந்திரமும் கொ ண்ட உங்களுக்கு 3ல் சனிராகுவும், சூரியனும், 11ல் குருவும் சஞ்சாரம் செய்வதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தினையும் வெற்றியையும் பெறமுடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதர கூடிய சம்பவங்கள் நடை பெறும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திதரமாக வசூலாகும். பயணங்களால் அனு கூலம் ஏற்படும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம்     13-11-2013 காலை 05.29 மணிமுதல் 
15-11-2013 காலை 10.58 மணிவரை
கன்னி
வாழ்க்கையின் லட்சியங்களிலிருந்து தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனிராகுவும் 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத் திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நெருக்கடிகள் நிலவும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம 15-11-2013 காலை 10.58 மணிமுதல் 
17-11-2013 மாலை 06.45 மணிவரை

துலாம்
எதிலும் சரியாக முடிவெடுக்கம் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும் 11ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல முன்னே ற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மை ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பலபெரிய மனிதர்களால் அணுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். சிவனை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 17-11-2013 மாலை 06.45 மணி முதல்
20-11-2013 காலை 05.03 மணிவரை
விருச்சிகம்
மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் குருவும் 12ல் சூரியன் சனி, ராகுவும் சஞ்சரித்தாலும் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், பணவரவுகள் தேவைக்கே ற்றபடியிருக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற் கொள்ளும் புதியமுயற்சிகளில் அனுகூலம் உண்டா கும். அரசு வழியிலும் ஆதரவுகிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கம். வேளைபளுவும் குறையும். சிவபெரு மானை வழிபடவும்.
சந்திராஷ்டமம 20-11-2013 காலை 05.03 மணி முதல் 
22-11-2013 மாலை 04.42 மணிவரை


தனுசு முகஸ்துதிக்கு அடிபணியாமல் உயர்ந்த பண்புகளை கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 11ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நினைக்கும் காரியத்தை நிறைவேற்றமுடியும். எடுக்கம் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கம். வேலைபளுவும் குறையும். கடன்கள் யாவும் தீரும் விநாயகரை தினமும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22-11-2013 மாலை 04.42 மணி முதல் 
25-11-2013 காலை 04.03 மணிவரை
மகரம்
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு 6ல் குருவும் 8ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிக ரிக்கும். உங்கள் பலம் குறையும் தேவையற்ற வீண் வம்பு வழக்குகளும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்வாங்க வேண்டிவரும். மற்றவ ர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. மாத பிற்பகுதியில் சூரியன் 11ல் சஞ்சரிக்க விருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி நிலவும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-11-2013 காலை 04.03 மணிமுதல் 
27-11-2013 மதியம் 01.44 மணிவரை
கும்பம்
எளிதில் பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, 5ம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உறவினர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். மாதபிற்பாதியில் சூரியன் 10ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினை அடைய முடியும்.
சந்திராஷ்டமம் 31-10-2013 காலை 06.12 மணிமுதல் 
     02-11-2013 பகல் 01.06 மணிவரை 
     27-11-2013 மதியம் 01.44 மணி முதல் 
     29-11-2013 இரவு 08.56 மணிவரை
மீனம்
நீதி நேர்மை தவறாமல் வாழ விரும்பும் உங்களுக்கு 8ல் சூரியன் சனி,ராகு சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் நிம்மதியாக செயல்பட முடியாது சுகவாழ்வு பாதிப்படையும். உற் றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களை பிரிய நேரிடும். சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். கொடுத்ததைக் கேட்டால் அடுத் தது பகையாக மாறும். சனிக்குரிய பரிகாரங்கள் தொடர்ந்து செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-11-2013 பகல் 01.66 மணிமுதல் 
     04-11-2013 மாலை 05.48 மணிவரை 
     29-11-2013 இரவு 08.56 மணிமுதல் 
     02-12-2013 அதிகாலை 01.52 மணிவரை

தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com

Saturday, October 26, 2013

குரு ஆதிக்கத்தில் (3, 12, 21, 30) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

முருகு பாலமுருகன் 

எழுதிய 


2014ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்

நக்கிரன் நிறுவன வெளியீடு
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்  குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்  சி.நி.லி.ஷி. ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள். 

குண அமைப்பு 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு  அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி  பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள். 

இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள்  தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள். 

உடலமைப்பும் ஆரோக்கியமும் 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும்.  சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும்.  இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது- 

குடும்ப வாழ்க்கை 

மூன்றாம் எண்ணில்  பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக  சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும். 

பொருளாதாரம் 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.

தொழில் 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும். 

நண்பர்கள், பகைவர்கள் 

கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள்.  5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது. 

குருவுக்குரிய காலம் 

நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச்  சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். 

குருவுக்குரிய திசை 

குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும். 

அதிர்ஷ்ட கல் 

குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து  கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம். 

பரிகாரங்கள் 

குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக  தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம். 

அதிர்ஷ்டம் தருபவை 

அதிர்ஷ்ட தேதி    3,12,21,30

அதிர்ஷ்ட நிறம்                பொன் நிறம், மஞ்சள்

அதிர்ஷ்ட திசை               வடக்கு

அதிர்ஷ்ட கிழமை             வியாழன்

அதிர்ஷ்ட கல்                    புஷ்பராகம்

அதிர்ஷ்ட தெய்வம்            தட்சிணாமூர்த்தி


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com
Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078


Friday, October 18, 2013

சந்திரன் ஆதிக்கத்தில் ( 2,11, 20, 29) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்முருகு பாலமுருகன் 

எழுதிய 


2014ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்

நக்கிரன் நிறுவன வெளியீடு


இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய  ஆங்கில எழுத்துக்கள் ஙி.ரி.ஸி  ஆகியவை.

குண அமைப்பு 

2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள்.  சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். 
இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில்  உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.

வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு  கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள். தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு  பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால்  சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம். 

குடும்ப வாழ்க்கை 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு  முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும்.  தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும். 

உடல் அமைப்பு ஆரோக்கியம் 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள்  சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள். மெலிந்த குரலில்  பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால்  இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி,  தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம்  எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.

பொருளதாரம் 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும்  பிறருக்கு கொடுக்க வேண்டிய  கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

தொழில் 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும்.  அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள், பகைவர்கள் 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள்.  நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள். 

சந்திரனுக்குரிய காலம் 

ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும்.  சந்திரன் இரவில் பலம் உள்ளவன். 

சந்திரனுக்குரிய திசை 

சந்திரனுக்குரிய  திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள். 

அதிர்ஷ்ட கல் 

சந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள்  குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும். 

பரிகாரங்கள் 

சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும். 

அதிர்ஷ்டம் தருபவை 

அதிர்ஷ்ட தேதி, 1,10,19,3, 12,21,30 

அதிர்ஷ்ட நிறம்  வெள்ளை, பொன் நிறம்

அதிர்ஷ்ட திசை  தென் கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை  திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட கல் முத்து, சந்திரகாந்தகல்

அதிர்ஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி, துர்க்கை 


தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com
Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  

Wednesday, October 16, 2013

சூரியன் ஆதிகத்தில் (1,10, 19, 28 ல்) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்


முருகு பாலமுருகன் 
எழுதிய 
2014ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்
நக்கிரன் நிறுவன வெளியீடு
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற  எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய  தேதிகளில் பிறந்தவர்கள்  ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A. I. J. Q. Y .   ஆகியவை. 


குண அமைப்பு 

1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை  விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு  உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர்.  முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.        

தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். 

உடல் அமைப்பு ஆரோக்கியம் 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும்,  தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும். கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

குடும்ப வாழ்க்கை 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும். 

பொருளாதாரம் 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். 

தொழில் 

ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.

நண்பர்கள் பகைவர்கள் 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்.  2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும். 

சூரியனுக்குரிய காலம் 

ஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.

சூரியனுக்குரிய திசை 

சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம். 

அதிர்ஷ்ட கல் 

சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற  நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும்,  நன்மதிப்பும் உண்டாகும். 

பரிகாரங்கள் 

ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது. 

அதிர்ஷ்டம் தருபவை 

அதிர்ஷ்ட தேதி         1,10, 19, 28 

அதிர்ஷ்ட நிறம்             இளஞ்சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட திசை               கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை                   ஞாயிறு 

அதிர்ஷ்ட கல்                     மாணிக்கம் 

அதிர்ஷ்ட தெய்வம்              சிவன்


தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.comBank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078


Sunday, October 13, 2013

செவ்வாய்

செவ்வாய்

விஞ்ஞானத்தின் செவ்வாய் 

பூமியை போல சூரியனை சுற்றி வரும் கோள் செவ்வாயாகும். பூமியை அடுத்துள்ள உயர்நிலை கோள்களில் செவ்வாய் முதலாவது கோளாகும். சூரியனிலிருந்து 228 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமிக்கு சந்திரன் துணை கோளாக இருப்பது போல செவ்வாயிக்கும் இரண்டு துணை கோள்கள் உண்டு. செவ்வாய் கிரகம் பாலைவனப் பகுதியாகவும் நிறம் சிவப்பு ஆரஞ்சு நிறமுடையதாகவும் உள்ளது. 

புராணத்தில் செவ்வாய் 

பரத்துவாசர் என்ற முனிவருக்கு பிறந்தவராக கூறப்படுகிறார். பரத்வாசர் நருமதை நதிகரையில் ஆசிரமம் அமைந்து தவம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு நீராட வந்த தேவ மங்கையுடன் ஏற்பட்ட காதலின் விளைவாக பிறந்தவர் தான் செவ்வாய், தேவமங்கை தான் பெற்றெடுத்த குழந்தையை ஆற்றின் கரையிலேயே விட்டு சென்று விட பூமாதேவியால் வளர்க்கப்பட்டார். வளர்ந்து தன் தந்தை பரத்வாசர் என்று தெரிந்த பின் தந்தையிடம் எல்லா கலையும் கற்று ஒரு சிறந்ததலைவனுக்குரிய தகுதிகளை எல்லாம் பெற்றார். செவ்வாய்க்கு அங்காரகன், மங்களன் என்ற பெயர்களும் உண்டு. செவ்வாய் விநாயகப் பெருமானை தவமிருந்து நவகிரகங்களில் ஒருவராக திகழும் வரத்தினைப் பெற்றார். அவர் இந்த வரத்தினைப் பெற்ற நாளும் செவ்வாய்கிழமையே. செவ்வாயின் சின்னம்  சேவல் என்பதால் இவர் முருகனின் அம்சமாகவும்  கருதப்படுகிறார். கட்டுமஸ்தான உடலமைப்பிற்கு சொந்தகாரர். கலவரம், சண்டை,  வீண் வம்பு, புரட்சி, போராட்டம், அக்ஸிடண்ட், சித்ரவதை, கொலை, துர்மரணம், கோபம் போன்றவற்றிற்கு காரணகர்த்தா என்பதால் இவர் ஒரு பாவ கிரகமாவார். நெருப்பு இவருக்கு பிடித்தமான ஒன்று பிடிவாதகுணமும் முரட்டு சுபாவமும் கொண்டவர்.

எடுத்தகாரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் வீரர், சூரர் என பாராட்டுமளவிற்கு துணிச்சலுடன் இருப்பார். அதுவே பலமிழந்திருந்தால் எல்லாவற்றிற்கும் பயப்படும் சுபாவம் வந்து விடும். இது மட்டுமின்றி செவ்வாய் தோஷத்தை உண்டாக்கி மணவாழ்ககையும் போராட்டகரமானதாக மாற்றிவிடுவார்.  எண்கணிதப்படி 9 ம் எண்ணை ஆள்பவர். பொதுவாகவே 9ம் எண்ணில் பிறந்தவர்கள் எல்லா விஷயங்களிலும் பேராசையுடையவர்களாகவும், நிதானமில்லாதவர்களாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், பிறருக்கு அடங்கி நடக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். இளமை கால வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் முடிவில் தங்களுடைய மன உறுதியினால் வெற்றி பெற கூடியவர்கள். 

தீயணைப்பு வண்டி

செவ்வாய் நெருப்பு காரகன் என்பதால் அதனுடன் சம்மந்தப்பட்ட தீயணைப்பு வண்டியின் நிறமும் சிவப்பு என்பதை நாம் அனைவரும்அறிவோம். 

போக்குவரத்தின் சிக்னல் 

போக்கு வரத்தில் எந்த ஆக்ஸிடெண்டுகளும் நடைக்காமலிருக்க ஆங்காங்கே சிக்னல்கள் இருப்பதை நாம் அறிவோம். சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று விட வேண்டும். நிற்காமல் சென்றால் அதன் விளைவு அபாயம் தான். தீக்குச்சி, நெருப்பை உண்டாக்க பயன் படும் சாதாரனமான தீக்குச்சி தயாரிக்கப்பட்ட ஆண்டு எது தெரியுமா? 1827 = 18, 1+8= 9  செவ்வாயின் ஆதிக்கமல்லவா? 

போலீஸ் நிலையம்,

Police
873135 = 27- 2+7 = 9
அடி, உதை, சித்திரவதை, கலவரம், சண்டை சச்சரவு, ரத்தகசிவு, ஆக்ஸிடெண்ட் போன்றவற்றிற்கு காரகன் செவ்வாய். இந்த பிரச்சனைகளை கையாள்பவர்கள் போலீஸ் காரர்கள். போலீஸ் நிலையமும் அபாயத்தின் அறிகுறியாக சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். றிஷீறீவீநீமீ- ம் 9ம் எண்ணின் ஆதிக்கத்தில் தான் இருக்கும். 

அது போல மருத்துவமணை, மருந்துகடைகள், அப்ரேஷன் தியேட்டர் போன்றவற்றிலும் சிவப்பு விளக்குகள் எரியும். இதற்கும் காரகன் செவ்வாய்தான். 

செவ்வாய் சகோதரகாரகன், பூமிகாரகன் என்பதால் தான் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் பூமி மனை போன்றவற்றால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

பொதுவாகவே  யாருக்கும்  அடங்காதவனை அகங்காரம் பிடித்தவன் என்று கூறுகிறோம். செவ்வாய் அங்காரகன் இல்லையா. அகங்கார  குணமும் அங்காரகனுக்குரியதே. செம்பு என்பது செவ்வாயின் உலோகம். செப்பு கம்பி மின்சாரத்தை அதிவேகமாக கடத்தக்கூடியது என்பதால் செப்பு கம்பியை பயன்படுத்துகிறார்கள். செப்பு கம்பியை மின்சாரம் போகும் போது தொட்டால் எரிந்து பஸ்பமாகி விடுவோம். செவ்வாய் எவ்வளவு வேலை செய்கிறார். 

சேவல்,
சேவல் செவ்வாயின் அம்ளம். செவ்வாய் அடுதி மரணம் அதாவது திடீரென்று இரத்தம் சிந்தி சாவதற்கு அடுதி மரணம் என்று பெயர். சேவலின் கழுத்தில் இரண்டு சிவப்பு நிற தாடி போன்ற அமைப்பும், தலையில் சிவப்பு நிற கொண்டையும் இருக்கும். எந்த சேவலாவது தானாக இறந்ததுண்டா கழுத்து அறுபட்டு வீர மரணம் தானே எய்துகிறது. எல்லா செவ்வாயின் சக்திகுரிய குணம் தானே காரணமாகிறது. 

அரசியல் வாதிகள் - திடீர் கொலை 
செவ்வாய் அரசியல் கிரகம் ஆவார். சூரியனை போல செவ்வாயும் பலம் ஆட்சி, உச்சம் வர்கோத்தம் பெற்று இருந்தால் அவர் அரசியலுக்கு வந்து மக்கள் செல்வாக்கு பெற்று அரசியல்வாதியாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. செவ்வாய் திடீர் மரணத்திற்கு காரகனல்லவா. இதனால் தான் கண் மூடி திறப்பதற்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சிந்தியும், பாம் வெடித்து உடல் சிதறியும் கத்தியால் வெட்டுபட்டு ரத்த களறியாகவும் மரணம் அடைகிறார்கள்.  புகழை கொடுக்கும் செவ்வாய் மரணத்தையும் கொடுப்பார். 

செவ்வாய் Mars

செவ்வாய்க்கு ஆங்கிலத்தில் Mars என்று பெயர் உண்டு. விணீக்ஷீs இன் காரகங்கள் இராணுவம், போர் ரத்தகளரி, கொடுங்கோல் கொலை வெறி போன்றவை ஆகும். அதனால் தான் இதற்கெல்லாம் ஆங்கிலத்தில்  Martial  என்று பெயர்  வைத்தார்கள் போலும். இராணுவ வீரர்களுக்கும் வீரதீர சாகசங்களை செய்தவர்களுக்கும் கொடுக்க கூடிய பட்டத்தின் பெயரை பாருங்கள் Marshal ன் மகத்துவம் புரிகிறதா.

சீன பெரும் சுவர் 

விண் வெளியில் இருந்து பார்த்தால் சீன பெரும் சுவர் தெரிகிறதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக அதிசயத்தில் ஒன்றான இது செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட சீனாவில் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் கொடியின் நிறம் சிவப்பு. செவ்வாயின் காரகங்களால் சுவரும் செங்கலும் உண்டு. 

பெர்லின் சுவர் 

ரஷ்யர்களால் கட்டப்பட்ட இந்த சுவர் பெர்லினை இரண்டாக பிரித்து வைத்தது. ஜென்மனியர்கள் பல துயரங்களுக்குட்பட்ட போது உயிர் பிழைப்பதற்காக இந்த சுவரை ஏறி குதித்து தப்ப முயன்றும் முடியாமல் இறுதியில் மரணத்தை தழுவியவர்கள் நிறைய உண்டு. இது ஒரு மரண சுவராகவே கருதப்பட்டது. 

Berlin

252315 - 18= 1=8= 9
9 இந்த  நகரில் இருந்துதான் உலக போர்களும் ஆரம்பமானது. போருக்கு ஆங்கிலத்தில் கீணீக்ஷீ என்று பெயரல்லவா 

War
612 - 9
9 சண்டை காரகனல்லவா செவ்வாய்.

9-ம் எண்ணின் மகிமை 

9 ம் எண்ணை மட்டும் எந்த எண்ணுடன் பெருக்கினாலும் அதன் விடையும் 9 ஆக தான் வரும்.
1*9= 9 =9
2*9=19 1+8 =9
3*9=27 2+7 =9
4*9=36 3+6 =9
5*9=45 4+5 =9
6*9=54 5+4 =9
7*9-=63 6+3 =9

 பார்த்தீர்களா செவ்வாயின் ஆதிக்கமான 9 ம் எண்ணின் விட்டுக் கொடுக்காத தன்மையை.

தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.comBank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078