முருகு பாலமுருகன்
எழுதிய
2014ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்
நக்கிரன் நிறுவன வெளியீடு


மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் சி.நி.லி.ஷி. ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.
குண அமைப்பு
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம். முகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.
இவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.
உடலமைப்பும் ஆரோக்கியமும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது-
குடும்ப வாழ்க்கை
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.
பொருளாதாரம்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.
தொழில்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.
நண்பர்கள், பகைவர்கள்
கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.
குருவுக்குரிய காலம்
நவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.
குருவுக்குரிய திசை
குருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட கல்
குருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.
பரிகாரங்கள்
குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி 3,12,21,30
அதிர்ஷ்ட நிறம் பொன் நிறம், மஞ்சள்
அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட கிழமை வியாழன்
அதிர்ஷ்ட கல் புஷ்பராகம்
அதிர்ஷ்ட தெய்வம் தட்சிணாமூர்த்தி
ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001
தொடர்புக்கு
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street , (Near Valli Thirumanamandapam) Vadapalani, Chennai-600026 My Cell - 0091 - 7200163001, 9383763001.9444072006.
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.Web www.muruguastrology.com
Bank account details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078
No comments:
Post a Comment