Sunday, October 13, 2013

செவ்வாய்

செவ்வாய்

விஞ்ஞானத்தின் செவ்வாய் 

பூமியை போல சூரியனை சுற்றி வரும் கோள் செவ்வாயாகும். பூமியை அடுத்துள்ள உயர்நிலை கோள்களில் செவ்வாய் முதலாவது கோளாகும். சூரியனிலிருந்து 228 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமிக்கு சந்திரன் துணை கோளாக இருப்பது போல செவ்வாயிக்கும் இரண்டு துணை கோள்கள் உண்டு. செவ்வாய் கிரகம் பாலைவனப் பகுதியாகவும் நிறம் சிவப்பு ஆரஞ்சு நிறமுடையதாகவும் உள்ளது. 

புராணத்தில் செவ்வாய் 

பரத்துவாசர் என்ற முனிவருக்கு பிறந்தவராக கூறப்படுகிறார். பரத்வாசர் நருமதை நதிகரையில் ஆசிரமம் அமைந்து தவம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு நீராட வந்த தேவ மங்கையுடன் ஏற்பட்ட காதலின் விளைவாக பிறந்தவர் தான் செவ்வாய், தேவமங்கை தான் பெற்றெடுத்த குழந்தையை ஆற்றின் கரையிலேயே விட்டு சென்று விட பூமாதேவியால் வளர்க்கப்பட்டார். வளர்ந்து தன் தந்தை பரத்வாசர் என்று தெரிந்த பின் தந்தையிடம் எல்லா கலையும் கற்று ஒரு சிறந்ததலைவனுக்குரிய தகுதிகளை எல்லாம் பெற்றார். செவ்வாய்க்கு அங்காரகன், மங்களன் என்ற பெயர்களும் உண்டு. செவ்வாய் விநாயகப் பெருமானை தவமிருந்து நவகிரகங்களில் ஒருவராக திகழும் வரத்தினைப் பெற்றார். அவர் இந்த வரத்தினைப் பெற்ற நாளும் செவ்வாய்கிழமையே. செவ்வாயின் சின்னம்  சேவல் என்பதால் இவர் முருகனின் அம்சமாகவும்  கருதப்படுகிறார். கட்டுமஸ்தான உடலமைப்பிற்கு சொந்தகாரர். கலவரம், சண்டை,  வீண் வம்பு, புரட்சி, போராட்டம், அக்ஸிடண்ட், சித்ரவதை, கொலை, துர்மரணம், கோபம் போன்றவற்றிற்கு காரணகர்த்தா என்பதால் இவர் ஒரு பாவ கிரகமாவார். நெருப்பு இவருக்கு பிடித்தமான ஒன்று பிடிவாதகுணமும் முரட்டு சுபாவமும் கொண்டவர்.

எடுத்தகாரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் வீரர், சூரர் என பாராட்டுமளவிற்கு துணிச்சலுடன் இருப்பார். அதுவே பலமிழந்திருந்தால் எல்லாவற்றிற்கும் பயப்படும் சுபாவம் வந்து விடும். இது மட்டுமின்றி செவ்வாய் தோஷத்தை உண்டாக்கி மணவாழ்ககையும் போராட்டகரமானதாக மாற்றிவிடுவார்.  எண்கணிதப்படி 9 ம் எண்ணை ஆள்பவர். பொதுவாகவே 9ம் எண்ணில் பிறந்தவர்கள் எல்லா விஷயங்களிலும் பேராசையுடையவர்களாகவும், நிதானமில்லாதவர்களாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், பிறருக்கு அடங்கி நடக்க விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். இளமை கால வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் முடிவில் தங்களுடைய மன உறுதியினால் வெற்றி பெற கூடியவர்கள். 

தீயணைப்பு வண்டி

செவ்வாய் நெருப்பு காரகன் என்பதால் அதனுடன் சம்மந்தப்பட்ட தீயணைப்பு வண்டியின் நிறமும் சிவப்பு என்பதை நாம் அனைவரும்அறிவோம். 

போக்குவரத்தின் சிக்னல் 

போக்கு வரத்தில் எந்த ஆக்ஸிடெண்டுகளும் நடைக்காமலிருக்க ஆங்காங்கே சிக்னல்கள் இருப்பதை நாம் அறிவோம். சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று விட வேண்டும். நிற்காமல் சென்றால் அதன் விளைவு அபாயம் தான். தீக்குச்சி, நெருப்பை உண்டாக்க பயன் படும் சாதாரனமான தீக்குச்சி தயாரிக்கப்பட்ட ஆண்டு எது தெரியுமா? 1827 = 18, 1+8= 9  செவ்வாயின் ஆதிக்கமல்லவா? 

போலீஸ் நிலையம்,

Police
873135 = 27- 2+7 = 9
அடி, உதை, சித்திரவதை, கலவரம், சண்டை சச்சரவு, ரத்தகசிவு, ஆக்ஸிடெண்ட் போன்றவற்றிற்கு காரகன் செவ்வாய். இந்த பிரச்சனைகளை கையாள்பவர்கள் போலீஸ் காரர்கள். போலீஸ் நிலையமும் அபாயத்தின் அறிகுறியாக சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். றிஷீறீவீநீமீ- ம் 9ம் எண்ணின் ஆதிக்கத்தில் தான் இருக்கும். 

அது போல மருத்துவமணை, மருந்துகடைகள், அப்ரேஷன் தியேட்டர் போன்றவற்றிலும் சிவப்பு விளக்குகள் எரியும். இதற்கும் காரகன் செவ்வாய்தான். 

செவ்வாய் சகோதரகாரகன், பூமிகாரகன் என்பதால் தான் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் பூமி மனை போன்றவற்றால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

பொதுவாகவே  யாருக்கும்  அடங்காதவனை அகங்காரம் பிடித்தவன் என்று கூறுகிறோம். செவ்வாய் அங்காரகன் இல்லையா. அகங்கார  குணமும் அங்காரகனுக்குரியதே. செம்பு என்பது செவ்வாயின் உலோகம். செப்பு கம்பி மின்சாரத்தை அதிவேகமாக கடத்தக்கூடியது என்பதால் செப்பு கம்பியை பயன்படுத்துகிறார்கள். செப்பு கம்பியை மின்சாரம் போகும் போது தொட்டால் எரிந்து பஸ்பமாகி விடுவோம். செவ்வாய் எவ்வளவு வேலை செய்கிறார். 

சேவல்,
சேவல் செவ்வாயின் அம்ளம். செவ்வாய் அடுதி மரணம் அதாவது திடீரென்று இரத்தம் சிந்தி சாவதற்கு அடுதி மரணம் என்று பெயர். சேவலின் கழுத்தில் இரண்டு சிவப்பு நிற தாடி போன்ற அமைப்பும், தலையில் சிவப்பு நிற கொண்டையும் இருக்கும். எந்த சேவலாவது தானாக இறந்ததுண்டா கழுத்து அறுபட்டு வீர மரணம் தானே எய்துகிறது. எல்லா செவ்வாயின் சக்திகுரிய குணம் தானே காரணமாகிறது. 

அரசியல் வாதிகள் - திடீர் கொலை 
செவ்வாய் அரசியல் கிரகம் ஆவார். சூரியனை போல செவ்வாயும் பலம் ஆட்சி, உச்சம் வர்கோத்தம் பெற்று இருந்தால் அவர் அரசியலுக்கு வந்து மக்கள் செல்வாக்கு பெற்று அரசியல்வாதியாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. செவ்வாய் திடீர் மரணத்திற்கு காரகனல்லவா. இதனால் தான் கண் மூடி திறப்பதற்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சிந்தியும், பாம் வெடித்து உடல் சிதறியும் கத்தியால் வெட்டுபட்டு ரத்த களறியாகவும் மரணம் அடைகிறார்கள்.  புகழை கொடுக்கும் செவ்வாய் மரணத்தையும் கொடுப்பார். 

செவ்வாய் Mars

செவ்வாய்க்கு ஆங்கிலத்தில் Mars என்று பெயர் உண்டு. விணீக்ஷீs இன் காரகங்கள் இராணுவம், போர் ரத்தகளரி, கொடுங்கோல் கொலை வெறி போன்றவை ஆகும். அதனால் தான் இதற்கெல்லாம் ஆங்கிலத்தில்  Martial  என்று பெயர்  வைத்தார்கள் போலும். இராணுவ வீரர்களுக்கும் வீரதீர சாகசங்களை செய்தவர்களுக்கும் கொடுக்க கூடிய பட்டத்தின் பெயரை பாருங்கள் Marshal ன் மகத்துவம் புரிகிறதா.

சீன பெரும் சுவர் 

விண் வெளியில் இருந்து பார்த்தால் சீன பெரும் சுவர் தெரிகிறதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக அதிசயத்தில் ஒன்றான இது செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட சீனாவில் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் கொடியின் நிறம் சிவப்பு. செவ்வாயின் காரகங்களால் சுவரும் செங்கலும் உண்டு. 

பெர்லின் சுவர் 

ரஷ்யர்களால் கட்டப்பட்ட இந்த சுவர் பெர்லினை இரண்டாக பிரித்து வைத்தது. ஜென்மனியர்கள் பல துயரங்களுக்குட்பட்ட போது உயிர் பிழைப்பதற்காக இந்த சுவரை ஏறி குதித்து தப்ப முயன்றும் முடியாமல் இறுதியில் மரணத்தை தழுவியவர்கள் நிறைய உண்டு. இது ஒரு மரண சுவராகவே கருதப்பட்டது. 

Berlin

252315 - 18= 1=8= 9
9 இந்த  நகரில் இருந்துதான் உலக போர்களும் ஆரம்பமானது. போருக்கு ஆங்கிலத்தில் கீணீக்ஷீ என்று பெயரல்லவா 

War
612 - 9
9 சண்டை காரகனல்லவா செவ்வாய்.

9-ம் எண்ணின் மகிமை 

9 ம் எண்ணை மட்டும் எந்த எண்ணுடன் பெருக்கினாலும் அதன் விடையும் 9 ஆக தான் வரும்.
1*9= 9 =9
2*9=19 1+8 =9
3*9=27 2+7 =9
4*9=36 3+6 =9
5*9=45 4+5 =9
6*9=54 5+4 =9
7*9-=63 6+3 =9

 பார்த்தீர்களா செவ்வாயின் ஆதிக்கமான 9 ம் எண்ணின் விட்டுக் கொடுக்காத தன்மையை.

தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.comBank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

No comments: