Wednesday, October 30, 2013

நவம்பர் மாத பலன்கள்மேஷம்
எதிலும் துணிச்சலுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சனி ராகு சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. பணவரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். உத்தி யோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து செல்லவும். துர்க்கை அம்ம னை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 04-11-2013 மாலை 05.48 மணிமுதல் 
     06-11-2013 இரவு 08.56 மணி வரை.
ர்pஷபம்
யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்ட க்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 2ல் குருவும் 6ல் சூரியன் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் எதிhபாராத கௌரவமான பதவி களை பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமா ற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவா ர்கள். தொழில் வியாபாரமும் போட்டி பொறாமை களின்றி சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கடன்கள் யாவும் குறையும். சேமிப்புகள் பெருகும் விஷ்ணு பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 06-11-2013 மாலை 08.56 மணி முதல் 
     08-11-2013 இரவு 11.20 மணி வரை
மிதுனம்
கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாயும் மாதமுற்பகுதியில் 6ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனை களிலிருந்து ஓரளவுக்கு விடுதலை பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். கொடுக்கல், வாங்கலில் பிறருக்கு முன் ஜாமின் கொடுப்பதை தவிர்க்கவும். லட்சுமியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 08-11-2013 காலை 07.35 மணி முதல் 
     11-11-2013 அதிகாலை 01.53 மணி வரை
கடகம்
தாராளமாக செலவுகள் செய்வதில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு 2ல் செவ்வாயும் 4ம் வீட்டில் சனி சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோ க்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்ப த்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரய ங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். முடிந்த வரை உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. முருகப் பெருமானை வழி படவும்.
சந்திராஷ்டமம் 11-112013 அதிகாலை 01.53 மணிமுதல் 
     13-11-2013 காலை 05.29 மணி வரை
சிம்மம்
வாக்கு சாதுர்யமும், ராஜதந்திரமும் கொ ண்ட உங்களுக்கு 3ல் சனிராகுவும், சூரியனும், 11ல் குருவும் சஞ்சாரம் செய்வதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தினையும் வெற்றியையும் பெறமுடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதர கூடிய சம்பவங்கள் நடை பெறும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திதரமாக வசூலாகும். பயணங்களால் அனு கூலம் ஏற்படும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம்     13-11-2013 காலை 05.29 மணிமுதல் 
15-11-2013 காலை 10.58 மணிவரை
கன்னி
வாழ்க்கையின் லட்சியங்களிலிருந்து தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன் சனிராகுவும் 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத் திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்கள் துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நெருக்கடிகள் நிலவும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம 15-11-2013 காலை 10.58 மணிமுதல் 
17-11-2013 மாலை 06.45 மணிவரை

துலாம்
எதிலும் சரியாக முடிவெடுக்கம் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும் 11ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல முன்னே ற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மை ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பலபெரிய மனிதர்களால் அணுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். சிவனை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம 17-11-2013 மாலை 06.45 மணி முதல்
20-11-2013 காலை 05.03 மணிவரை
விருச்சிகம்
மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட உங்களுக்கு 8ம் வீட்டில் குருவும் 12ல் சூரியன் சனி, ராகுவும் சஞ்சரித்தாலும் 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும், பணவரவுகள் தேவைக்கே ற்றபடியிருக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற் கொள்ளும் புதியமுயற்சிகளில் அனுகூலம் உண்டா கும். அரசு வழியிலும் ஆதரவுகிட்டும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை யிருக்கம். வேளைபளுவும் குறையும். சிவபெரு மானை வழிபடவும்.
சந்திராஷ்டமம 20-11-2013 காலை 05.03 மணி முதல் 
22-11-2013 மாலை 04.42 மணிவரை


தனுசு முகஸ்துதிக்கு அடிபணியாமல் உயர்ந்த பண்புகளை கொண்ட உங்களுக்கு 7ல் குருவும் 11ல் சனி ராகுவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நினைக்கும் காரியத்தை நிறைவேற்றமுடியும். எடுக்கம் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கம். வேலைபளுவும் குறையும். கடன்கள் யாவும் தீரும் விநாயகரை தினமும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22-11-2013 மாலை 04.42 மணி முதல் 
25-11-2013 காலை 04.03 மணிவரை
மகரம்
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு 6ல் குருவும் 8ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிக ரிக்கும். உங்கள் பலம் குறையும் தேவையற்ற வீண் வம்பு வழக்குகளும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்வாங்க வேண்டிவரும். மற்றவ ர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. மாத பிற்பகுதியில் சூரியன் 11ல் சஞ்சரிக்க விருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி நிலவும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-11-2013 காலை 04.03 மணிமுதல் 
27-11-2013 மதியம் 01.44 மணிவரை
கும்பம்
எளிதில் பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, 5ம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உறவினர்களின் ஆதர வுகள் மகிழ்ச்சியளிக்கும். மாதபிற்பாதியில் சூரியன் 10ம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் சிறப்பான முன்னேற்றத்தினை அடைய முடியும்.
சந்திராஷ்டமம் 31-10-2013 காலை 06.12 மணிமுதல் 
     02-11-2013 பகல் 01.06 மணிவரை 
     27-11-2013 மதியம் 01.44 மணி முதல் 
     29-11-2013 இரவு 08.56 மணிவரை
மீனம்
நீதி நேர்மை தவறாமல் வாழ விரும்பும் உங்களுக்கு 8ல் சூரியன் சனி,ராகு சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள் நிறைய ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் நிம்மதியாக செயல்பட முடியாது சுகவாழ்வு பாதிப்படையும். உற் றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் அவர்களை பிரிய நேரிடும். சுபகாரிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். கொடுத்ததைக் கேட்டால் அடுத் தது பகையாக மாறும். சனிக்குரிய பரிகாரங்கள் தொடர்ந்து செய்யவும்.
சந்திராஷ்டமம் 02-11-2013 பகல் 01.66 மணிமுதல் 
     04-11-2013 மாலை 05.48 மணிவரை 
     29-11-2013 இரவு 08.56 மணிமுதல் 
     02-12-2013 அதிகாலை 01.52 மணிவரை

தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com

No comments: