Friday, November 29, 2013

குரு

நன்றி,நன்றி  

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள்  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 5 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அன்புடன்
முருகுபாலமுருகன்

விஞ்ஞானத்தில் குரு 

பொன்னவன் என போற்றப்படுகின்ற குரு சூரிய குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய கோளாகும். உயர்நிலை கோளால் வானவீதியில் பிரிவு செய்துள்ள குரு. செவ்வாய் கோளை அடுத்து சூரியனை சுற்றி வலம் வருகிறது. குரு ஒரு பெரிய  கோள் என்பதால் குருவை சுற்றி வரும் துணை கோள்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.  குருவின் துணைகோள்கள் 14 என கணக்கிடப்பட்டுள்ளது. குரு பூமியை விட அதிக பிரதிபலிப்பு தன்மை கொண்டது ஆகும்.  சூரிய ஒளிக்கதிர்களின் 51 சதவீகிதத்தை வாங்கி பிரதிபலிக்கிறது. குருவின் நிறம் மஞ்சள் ஆகும். குரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 

புராணத்தில் குரு 

தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் உரியவராகவும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், ஆச்சார்யராகவும் விளங்குபவராகவும், மூவுலகிற்கும் புக்தி சக்தியாக  திகழ்பவராகவும் இருப்பவர் குருபகவானாவார். உலகில் உள்ள சகல சௌபாக்கியங்களுக்கும் காரணமானவர் இவரே. கல்வியில் முதன்மை வகிப்பவர் உள்ளத்திற்கு வலிமையை தருபவர். நீதிமான். பல ஆசிரியர்களையும மேதைகளையும், நீதிபதிகளையும், மந்திரிகளையும் உருவாக்குபவர். விவேகம், வித்தை அந்தஸ்து, புகழ், ஆற்றல், பணம், தெய்வீகம் முதலியவற்றிக்கு மூலகாரணமும் இவரே.
எல்லா கிரகத்தையும் விட குருபகவானே முழு சுபராவார். யானை இவரது வாகனம் இனிப்பு பிரியர். சாத்வீக குணம் கொண்டவர். இவரது உலோகம் பொன். கல் புஷ்பராகம். வடகிழக்கு திசையை ஆள்பவர். திருமணபாக்கியத்தையும், குழந்தை செல்வத்தையும் கொடுப்பவர் இவரே. எண்கணிதத்தில் 3 வது எண்ணுக்கு சொந்தகாரர்.
3ம் எண்ணில் பிறந்தவர்கள் ஒரு பொழும் மற்றவர்களுக்கு கீழ்படியும் பணியும் வேலைகளை செய்ய விரும்ப மாட்டார்கள். உலகில் உயர்வுகளையும், புகழ்களையும் பெற வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள், மனசாட்சியுடன் நடந்து கொள்வதால் நம்பிக்கையும் பொறுப்பும் வாய்ந்த எல்லாவித பதவிகளிலும் மேன்மை வகிப்பார்கள். பிறர் தம்முடைய கட்டளைகளுக்கு  கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவார்கள். 

மாதா பிதா குரு தெய்வம் 

மாதா பிதாவிற்கு அடுத்தபடியாக குறிப்பிடுவது குருவைதான். நமக்கு கல்வி கற்பிப்பவர்களை குரு என்றுதான் குறிப்பிடுகிறோம்.  ஆசிரியர்கள் போதிப்பவர்களாகவும், வழிகாட்டுபவராகவும் விளங்குபவர்களாக இருப்பதால் அவர்களை குரு என  அழைக்கிறோம். 

மாங்கல்யம மஞ்சள் நிறம் 

சுபகிரகமான குருவின் நிறம் மஞ்சள் என முன்பே பார்த்தோம். அடங்காமல் திரிபவனையும் கட்டுக்கடங்காவைக்கும் பந்தம் திருமணம். ஒரு திருமணத்திற்கு நிச்சயதார்த்தம், நலங்கு,, பந்தகால், உறவினர் வருகை, மகிழ்ச்சி, சந்தோஷம் என பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் இருந்தாலும் முழுமை பெற வைப்பது ஒரு மஞ்சள் கயிறு மட்டுமே. மஞ்சள் கயிறு கட்டினால் தான் ஒரு திருமணமே நிறைவு பெறும். குருவின்  உலோகம் பொன் என பார்த்தோம். இந்த மங்கள நிகழ்ச்சியில் மஞ்சள் கயிற்றில் பொன்னாலான தாலியை அவரவர் சம்பிரதாயத்திற்கேற்ப வடிவமைத்து பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார்கள். வசதியே இல்லாதவனாக இருந்தாலும் மஞ்சள் கயிற்றில் ஒரு சிறிய  மஞ்சள் துண்டை வைத்து கட்டி அதையே தாலியாக கட்டுவான். மஞ்சளுக்கு உள்ள மகிமையே மகிமைதான். அதுபோல நம காலாசாரத்தில் சுமங்கலிகளுக்கு ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. கழுத்து நிறைய நகை இல்லாவிட்டாலும் மஞ்சள் நிற தாலி கயிறு இருந்துவிட்டால் அவர்கள் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமை வகிக்கும் தகுதியை பெறுகிறார்கள். சுபகிரகமான குரு பெண்களின் மாங்கல்ய பலத்திற்கும், அதனால் உண்டாக கூடிய பெருமைக்கும் காரகனாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா. 
தாலி கயிறு கட்டுபவர்களை மட்டும் குறிப்பிட்டீர்களே, இதனால் தாலியின் மகிமை புரிகிறது. மோதிரம் மாற்றுபவர்களை பற்றி என்ன சொல்வது என கேட்டால் அதற்கும் பதில் உண்டு. குருவின் உலோகம் பொன் என்பதை அறிவோம். மோதிரத்தை பொன்னால் செய்து தானே மாற்றி கொள்கிறார்கள். இங்கும் குருவின் ஆதிக்கம் இருப்பது புரிகிறதல்லவா? 

மஞ்சள் நீர் 

வீட்டிலும் சரி அலுவலகங்களிலும் சரி எல்லா வகையிலும் சுபிட்சங்களையும் பெற கலசங்களை வைத்து யாகம் செய்கிறோம். பூஜைகள் பரிகாரங்கள் செய்கிறோம். எல்லாம் முடிந்தவுடன் அந்த கலசத்தில் உள்ள நீரை வீடு முழுவதும்.(அலுவலகத்திலும்) தெளிக்கிறோம். அந்த கலசத்தில் உள்ள நீர் என்ன தெரியுமா? மஞ்சள் கலந்த நீர்தான். வாரந்தோறும் தண்ணீரில் மஞ்சளை கரைத்து வீடுகளில் தெளித்தால் தீட்டு, பீடை தரித்திரம் யாவும் விலகும் என்பது ஐதீகம். மஞ்சள் நிறமுடைய குரு சுபரல்லவா. சுப தன்மையை தானே வழங்குவார். 

மஞ்சள் காமாலை நோய் 

மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் என்ற பழமொழியே உண்டு. மஞ்சள் காமாலை நோய்க்கு காரகனே குருதானே. இருதயம் ஈரல் போன்றவற்றிற்கும் குரு காரகம் வகிக்கிறார். மஞ்சள் காமாலை வந்தால் ஈரல் பழுதடைகிறது.  இதனால் உடலும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாகவே போகிறது. மஞ்சள் காமாலை குருவின் நோய் அல்லவா. அதுபோல பித்தம் அதிகமாக ஆவதற்கும் ஈரல் ஒரு காரனம். பித்தம் அதிகமானால் தலைசுற்றல், மஞ்சள் மஞ்சளாக வாந்தி போன்றவை வரும். இந்த பித்தத்தை ªளிவிப்பதற்கும் மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம் பழ  சாற்றை பிழிந்து குடிப்பதன் மூலம் நிவாரணம்கிடைக்கிறது குருவின் மஞ்சள் நிறத்திற்குள்ள மகிமையைப் பார்த்தீர்களா?

இருதய துடிப்பிற்கு காரகன் குரு 

இருதயம் குருவின் ஆதிக்கமாகும். இருதய துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 75 தடவை துடிக்கிறது என மருத்துவர்கள் நிருபித்து காட்டியுள்ளனர். 75 ஐ கூட்டுங்கள் 7+5 = 12, 1 + 2 3 அனைவரின் இருதயத்திலும் குடியுள்ளார். குரு என்பது தெரிகிறதல்லவா.

தனக்காரகன் குருபகவான்

பணவரவு பணபுழக்கம் போன்றவற்றிற்கு காரகன் குருபகவானாவார். உலகின் முதல் பேங்கின் பெயர் பாங்கோ டிரிவால்டா இந்த வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1587. இந்த வருடத்தின் கூட்டுத் தொகையை பாருங்கள். 1+5+8+7 = 21 2+1 =3  பணம், தனம் ரொக்கம் என்பதற்கெல்லாம் ஒரே ஆங்கில சொல் சிணீsலீ பணத்தை  ஆள்பவர் குருபகவான் 
Cash
3135 = 12 1+2 = 3 
விடுவிடுவாரா தன் ஆதிக்கத்தை 

Jubiter ன் Jubileeவிழா

விழாக்களுக்கு காரண கர்த்தா வியாழ பகவான். ஒருவருக்கு பட்டம் கொடுப்பதற்காக விழா எடுக்கிறோம். விழாவில் சாதாரணமாக ஒரு துண்டை போர்த்தினாலும் அதனை பொன்னாடை போர்த்துவதாக பெருமையாக கூறுகிறோம். பொன்னன் என்பது குருவின் பெயரல்லவா Jubiter என்றால்  வியாழன் கோள் என்பது அனைவரும் அறந்ததே. கோல்டன் ஜீப்லி , சில்வர் ஜீப்லி டைமண்ட் ஜீப்லி,  என்று ஒவ்வொன்றிற்கும் விழா எடுப்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். (Golden Jubilee, Silver Jubilee, Diamand Jubilee) Jubiter   ல் கடைசி எழுத்தை மட்டும் எடுத்து விட்டு Jubilee  என்று அழைக்கிறார்கள். 

கடவுளுக்கு பேதமில்லை

முஸ்லீம்கள் எல்லா புகழும் இறைவனுக்கே  என்ற கொள்கையுடையவர்கள். அவர் களிக்கடவுளுக்கு  முக்கியத்துவமான எண் 786&ஐ கொண்டுள்ளார்கள். இதன் கூட்டுத் தொகையை பாருங்கள் 7+8+6=21-, 2+1 =3 கடவுள் அனைவருக்கும் சமமானவரல்லவா.

பிரகஸ்பதி மேதாவி என்று அழைக்கப்படுகின்ற குரு பொன்னிறமானவர். எனவே தான் பொன்னவன் என்று போற்றுகிறோம். இவர் காசியில் பதினாராயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.. குரு அஞ்ஞானம் எனப்படும் இருளை அகற்ற கூடிய  வல்லமை படைத்தவர். குருவை வித்யாகாரகன் எனவும் போற்றுகிறோம்.  குரு பகவான் தன்னுடைய பலத்தை அனைவருக்கும் கொடுத்து வாழ்விக்கும் பரந்த மனைப்பான்மை உடையவர். இவரால் நீண்ட ஆயுள் நிலையான புகழ், பாசமிக்க உறவுகள், உயர்ந்த பதவிகள், வாழ்வில் பல சாதனைகள் செய்ய கூடிய யோகம் போன்ற அற்புதமான நற்பலன்கள் அமையும். 

உதாரணத்திற்கு 12.1.1863 ல் பிறந்த விவேகானந்தர் 3ம் எண்ணின் அதிக்கத்தில் பிறந்தவர். காவி உடுத்தி தூய வாழ்க்கை வாழ்ந்தவர். உலகே வியக்கும் வண்ணம் பல சாதனைகள் செய்தவர். அவருக்கு  உலகம் முழுவதும் பக்தர்களும், ரசிகர்களும் இருந்தார்கள். இந்தியாவே அவரால் பெருமை பெற்றது என கூறலாம். 3ம் எண்ணின் ஆதிக்கமல்லவா குரு உயர்ந்தி விட்டார். 

தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.comBank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

Sunday, November 17, 2013

புதன்


நன்றி,நன்றி  

       சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த வாசக பெரு மக்களுக்கு என் மன மார்ந்த நன்றி. தொடங்கிய 2 வருடத்திற்குள்  தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 5 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.

அன்புடன்
முருகுபாலமுருகன்
விஞ்ஞானத்தில் புதன் 

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். பூமியிலிருந்து புதனை காண்பது கடினம். கோள்களில் மிக சிறய கோளாகும். புதன் சூரியனை ஒருமுறை  சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 88 ஆகும். புதன் எப்பொழுதும் சூரியனை நோக்கியே  இருக்கும். புதன் பாதரசம் நிறம்பிய கிரகம் என்றும் பச்சை நிறமுடைய கிரகம் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. 

புராணத்தில் புதன் 

சந்திரனுடைய புதல்வராகிய புதன் ஒரு அலிகிரகமாகும். சந்திரன் குருபகவானிடம் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தான். பின்பு தட்சனுடைய 27 பெண்களையும் மணந்து கொண்டான். பிறகு மகாவிஷ்ணுவின் ஆசி வேண்டி ராஜ சரய யாகம் நடத்தினான். அந்த யாகத்திற்கு அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். குருவால் யாகத்தில் கலந்து கொள்ள முடியாததால் தன் மனைவி தாராவை அனுப்பி வைத்தார். யாகத்தில் கலந்து கொள்ள வந்த தாரா சந்திரனின் மீது காதல் கொண்டு அதன் பயனாகிய அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அவர் தான் புதனாவார். புதன் யாரிடமும் வளராமல் தனித்தே சகல கலைகளையும் கற்று தேர்ந்தார். 

புதன் எல்லா விதமான வித்தைகளுக்கும் காரண கர்த்தா ஆவார். கல்விக்கு காரகனாவர். புக்தி கூர்மை மிக்கவர். பச்சை இவரது நிறம். குணத்தில் வைசியர். பள்ளி சாலைகள் இவருக்கு மிகவும் பிடித்தவை.  மகாவிஷ்ணுவை பூஜித்து கிரக அந்தஸ்து பெற்றதால் மகாவிஷ்ணுவின் ஓர் அங்கமாக கருதப்படுகிறார்.  பொக்குஷத்தை பாதுகாக்கவும் கணக்கு எழுதவும் உகந்தவர். புக்தியால் செய்யப்படும் புரோக்கர், கமிஷன், காண்டிராக்ட், போன்றவற்றிற்கு மூலகாரணம் இவரே. கதை காவியம் போன்றவற்றை ஜோடித்து எழுதவும், கூத்தாடுதல், நகைச்சுவையுணர்வு போன்றவற்றிற்கும் மூலகாரணமும் இவரே. வரது வடிவம் களி வெந்தயம், பாசிப்பயிறு போன்றவற்றில் விரும்பி இருப்பவர். உவர்ப்புசுவையை அதிகம் விரும்பி உண்பவர். இவரது திசை வடக்கு, வாத நோய், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிற்கும் காரணம் இவர் தான்.  புதன் 5 ம் எண்ணாக என்கணிதத்தில் கூறப்பட்டுள்ளது. 5ம் எண்ணில் பிறந்தவர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர்கள். புதிய கண்டு பிடிப்புகளாலும், எந்த காரியத்தையும் விரைவில் முடிக்கும் ஆற்றலாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள். 

பச்சை இங்க்

பெரிய அளவில் கல்வி கற்று எந்தவொரு செயலையும் புத்திசாலிதனத்தோடு ஆராய்ந்து செயல்பட கூடிய அளவிற்கு திறமையுடன் பெரிய பதவிகளை வகிப்பவர்கள் பச்சை இங்கில் கையெழுத்து போடும் அங்கீகாரததை பெறுகிறார்கள். கவர்மெண்ட்டில் பெரிய அளவில் அதிகார பதவிகளையும் அடைகிறார்கள். அறிவு காரகனை புதனின் நிறம் பச்சையல்லவா. உலகெங்கும் பச்சை இங்க்கில் கையெழுத்துப் போடுபவர்களுக்கென்று ஒரு தனிமரியாதையே இருக்கின்றது. 

பச்சை சிக்னல் 

பொறுமை, புக்திகூர்மை, நிதானம் யாவும் புதனின் அச்மசமாகும். எனவே தான் வண்டிவாகனங்களில் பயணம் செய்யும் போது பச்சை நிற சிக்னல் விழுந்தால் மட்டுமே புறப்படுகிற«£ம். பச்சை நிறத்தின் மகத்துவத்தைப் பார்த்தீர்களா? 

கீரின்கார்டு 

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியலல, போன்ற வெளிநாடுகளில் கிரீன் கார்டு இல்லாமல் வசிக்க முடியாது. கிரீன் கார்டு என்பது அந்நாட்டு அங்கீகாரத்திற்காக வழங்கப்படும் ஒரு ஐ.டி. எந்தவொரு நாட்டிலும் தொடர்ந்து 5 வருடங்கள் வசித்தால் இந்த கிரீன் கார்டைப் பெற்று அந்த நாட்டின் பிரஜையாகி விடலாம்.இதில்  பாருங்கள் அங்கீகாரம் பிரஜை 5 ஆண்டு பச்சை இந்த எண்ணிற்கும் புதனே ஆதிக்கம் செலுத்துபவராவார். புதனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தானே. 

ஐந்து ரூபாய் நோட்டு

நமது இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5 ரூபாய் நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும். அதில் பச்சை வயல் வெளியில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருக்கும். அதாவது விவசாயத்தை குறிப்பதாக இருக்கும். 5 ரூபாய் நோட்டும் பச்சை, புதனின் ஆதிக்கம். விவசாயமும் புதனின் ஆதிக்கம். 

பார்லிமெண்ட் 

மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவர்கள் அதாவது பச்சை மையில் கையெழுத்துப் போடுகிறார்கள். மக்களின் கருத்துக்களை எடுத்து சொல்லி தீர்மானங்களை பெறும் இடமாக பார்லிமெண்ட் விளங்குகிறது. இதன் உறுப்பினர்களும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார்கள். மக்கள், தீர்மாணம், 5 ஆண்டு இவை அனைத்தும் புதனின் காரகத்துவங்களே.

வறுமையும், புலமையும்

புதன் வறுமை கிரகம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. புதன் நல்ல அறிவு கிரகம். கல்வி கேள்விகளில் மிக்க புலமையை தருபவர். பண்டைய காலங்களில் புலவர்கள் எல்லாம் தம் வறுமையை போக்கி கொள்ள அரசர்களை தம் பலமையால் பாடி பொற்காசுகளைப் பெற்று செல்வார்கள். புலவர்கள் எப்பொழுதும் வறுமை வாழ்ந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது. 

பெருமாளுக்கு பச்சை நிற துளசி 

பெருமாள் புதனின் அம்சம். எல்லா தெய்வங்களுக்கும் வண்ண வண்ண மலர்களால் அர்ச்சனை செய்தாலும் பெருமாளுக்கு மட்டும் பச்சை நிறமான துளசியை கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். பச்சையும் பெருமாளும் புதனின் அம்சமாக உள்ளதல்லவா?

பச்சை கிளி சொல்லும் ஜோதிடம் 

ஜோதிடம் புதனின் காரகத்துவம். எவ்வளவோ பேர் பச்சை கிளியை வைத்து சீட்டை எடுக்கச் சொல்லி அதில் வரும் படத்தை வைத்து ஜோதிடம் சொல்கிறார்கள். இதற்கு கிளி ஜோதிடம் என்று பெயர். 

ஷேக்ஸ்பியர் 

புலவர்கள் அறிவுத்திறமையுடன் இருந்தாலும் வறுமையில் தான் வாழ்ந்தார்கள் என்று முன்பே பார்த்தோம். இதில் புத்தகங்களையும் கவிதைகளையும், காவியங்களையும் எழுதி குவித்தவர் மிகப்பெரிய அறிவாளியுமானவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற அறிஞானாவார். இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையுணர்வும் புதனின் காரகத்துவங்களே. இவர் பிறந்த தேதியும் 23 2+3=5 ம் எண்ணும் புதணுக்குரியதே.

சட்ட நூல்களை எழுதிய மேதை டாக்டர். அம்பேத்கார் இந்திய கண்டத்தின் சட்ட நூலையும் இயற்றியவராவார். அறிவாளியான அவர் பிறந்த தேதியும் புதனின் எண்ணாகிய 14& 1+4= 5 ஆகும். 

புதன் என்றாலே வியாபாரி என நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலத்தில் புதனுக்கு Mercury  திலிருந்து தோன்றியது தான் Merchant என்ற வார்த்தை. அதாவது வியாபாரி, புதனின் காரகத்துவத்தை பார்த்துர்களா.


தொடர்புக்கு


For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.9444072006.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.comBank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078

Thursday, November 7, 2013

ராகு ஆதிக்கத்தில் (4,13,22,31) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

ராகு ஆதிக்கத்தில் (4,13,22,31) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என  நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D.M.T  கியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.

குண அமைப்பு 

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தைய«£, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும். 

இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு.  அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே  அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள். 

உடலமைப்பும், ஆரோக்கியமும் 

நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால்  அடிக்கடி பாதிப்பு உண்டாகும். 

குடும்ப வாழ்க்கை 

நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே  கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.

பொருளாதாரம் 

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். 

தொழில் 

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். 

நண்பர்கள், பகைவர்கள் 

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள். 

ராகுவுக்குரிய காலம் 

ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது. 

ராகுவுக்குரிய திசை 

தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும். 

ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல் 

நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும். 

பரிகாரங்கள் 

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம். 

அதிர்ஷ்டம் தருபவை 

அதிர்ஷ்ட தேதி,  1,10,19,28

அதிர்ஷ்ட நிறம்    மஞ்சள்

அதிர்ஷ்ட திசை   கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை   ஞாயிறு

அதிர்ஷ்ட கல்   கோமேதகம்

அதிர்ஷ்ட தெய்வம்   துர்க்கை 


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001  


தொடர்புக்கு


For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  


Jothidamamani

MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar

No-117/33 Bhakthavachalam colony 1st street,  (Near Valli Thirumanamandapam)  Vadapalani,  Chennai-600026   My Cell - 0091 - 7200163001,  9383763001.
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.Web  www.muruguastrology.com
Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.MICR no - 600019072IFS code ; IDIB000S082CBS CODE-01078