Thursday, December 19, 2013

ஜோதிடச் சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்களின் வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்

ஜோதிடச் சக்கரவர்த்தி 

முருகு இராசேந்திரன் 
அவர்களின்  வாழ்க்கை 
ஒரு கண்ணோட்டம்
பிறப்பும் வளர்ப்பும்

ஜோதிட சக்கரவர்த்தி என்று உலக மக்களால் போற்றப்படுகின்ற திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் கடலூர் வட்டம் வடலூர் அருகிலுள்ள தம்பி பேட்டை என்ற ஊரில் ;முருகு இராசேந்திரனின் தந்தை திரு. முருகேச செட்டியார் அவர்கள் ஓர் விவசாயி. மழை பொய்த்துப் போகும் காலங்களில் எல்லாம் கடும் போராட்டத்திற்கிடையே  ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து பெரும் பாடுபட்ட பெருமை அவருக்கு உண்டு.

இளமைப் பருவம்

முருகு இராசேந்திரன் அவர்கள் குறிஞ்சிப் பாடியில் உள்ள உயர்நலைப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே பேச்சாற்றல் எழுத்தாற்றல் இவற்றில் சிறந்து விளங்கி பல பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றார். இயற்கையிலேயே வாக்கு பலிதம் கொண்ட இவருக்கு 7ஆம் வகுப்பில் படிக்கும் போதே ஜோதிடம் சொல்லும் ஆற்றல் உண்டாகியது. இவர் விருத்தாச்சலம் கலை கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். அப்பொழுதும் மேடை பேச்சுக்களில் வல்லவராக திகழ்ந்ததோடு  மாணவர் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். தன் 16 வயதில் பள்ளி இறுதி வகுப்பை படிக்கும் போது ஜோதிடத்தை கணித்து பலன் கூறக் கூடிய அற்புத ஆற்றல் உண்டானது.  சிறந்த முருக பக்தரான இவரது குலதெய்வம் நெய்வெலி அருகிலுள்ள வேலுடையான்பட்டு முருகன் ஆவார். 

இனிய இல்லற வாழ்க்கை

வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளைக் கண்ட இவர் எதற்கும் அஞ்சாமல் வாழ்வில் முன்னேறினார். திரு. முருகு இராசேந்திரனுக்கு 27 வயது ஆனவுடன் வள்ளுவருக்கு ஓர் வாசுகி. பாரதிக்கு ஓர் கண்ணம்மா. வாழ்க்கை துணைவியாக அமைந்ததை போல கடலூருக்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள சந்தை பேட்டை என்ற கிராமத்தில் பிறந்த கஸ்தூரி அம்மாள் வாழ்க்கை துணைவியானார்.

திருமணத்திற்கு பின் மனமொத்து வாழ்ந்த இவர்களின் வாழ்வில் பல மாற்றங்கள் உண்டாகின. தன் சொந்த ஊ¶லிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வரும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்தது.  முதலில் ஆலந்தூரிலும் பின்பு. ஆதம்பாக்கத்திலும் அதன் பின்னர் அசோக் நகரிலும் குடியிருந்தார்கள். வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்களை கண்டார். இரவு பகல் பாராது உழைத்தார்.  உழைப்பின் பயனாக  தனக்கென வீடு வாகனங்களை சேர்த்தார்.  சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ அருகில் உள்ள முனுசாமி தெரு 5/2 என்ற எண்ணுள்ள இல்லத்தில் தன் இறுதி காலம் வரை வாழ்ந்து வந்தார்.

பிள்ளைச் செல்வங்கள் 

முருகு இராசேந்திரன் அவர்களுக்கு 3 மகன்கள். 3 பேருமே இவருக்கு நகரான முத்துக்கள். முருகனின் பக்தர் என்பதால் தன் குலம் தழைத்தோங்க அனைவருக்கும் முருகனின் திருநமத்தையே பெயராக சூட்டினார்.  இவருடைய ­முத்த மகன் திரு. முருகு பாலமுருகன் B.com, B.L. M.A.Astro முனைவர் பட்ட ஆய்வாளர். இவரின் துணைவியார் திருமதி. இலட்சுமி B.Sc.. இவருக்கு தனுஸ்ரீ என்ற மகளும் திருமுருகன் என்ற மகனும் உண்டு. இரண்டாவது மகனுக்கு ராஜ முருகன் B.E. .கம்ப்யூட்டர் சயின்ஸ். இவருடைய துணைவியார் திருமதி.இந்துமதி. இவருக்கும் வேல்முருகன் என்ற மகனும் தர்ஷினி என்ற மகளும் உண்டு. கடைசி மகன் துரைமுருகன் B.E. இவருடைய துணைவியார் திருமதி. சுமதி. B.E


ஜோதிடத்தில் ஈடுபாடும் மக்கள் திருத் தொண்டும்

முருகு இராசேந்திரன் அவர்கள் முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை தொடங்கி கடந்த 30 வருட காலமாக ஜோதிடக் கலைக்கு சேவை புரிந்து வந்தார். இவர் தினமும் முருகனை வழிபட்ட பின்னரே ஜோதிட பலனை சொல்ல தொடங்குவார். இவருடைய  அலுவலகம் கடந்த 22 வருடங்களாக சென்னை வடபழனி  முருகன் திருக்கோயில் அருகில் 33. பழனி ஆண்டவர் கோயில் தெரு வடபழனி சென்னை26. என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.  இவர் ஜாதகம், கைரேகை, எண் ஜோதிடம், வாஸ்து ஆகிய கலைகளின் ­மூலம் எதிர்கால பலன்களை கூறி வந்தார். செய்யும் தொழிலையே தெய்வமாக கொண்ட இவர் தம் அலுவலகத்திற்கு தினமும் வந்து கொண்டிருந்தார். அனைவருக்கும் பலன் சொல்லுவதிலேயே அதிக விருப்பம்.

முருகு இராசேந்திரன் அவர்களின் பத்திரிகை அனுபவம்

திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வந்தார். கோபுர தரிசனம் ,சி÷நிகிதி,  கோகுலம் கதிர், நலம் தரும் ஜோதிடம், வளம் தரும் வாஸ்து, மாலை மலர், பாலஜோதிடம், மலேசிய நிண்பர், தமிழ் நிசன, போன்ற பத்திரிகைகளுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி வந்தார். 30 ஆண்டுகளாக முருகு ஜோதிடக் கலை என்ற மாத பத்திரிகையின் ஆசிரியராக இருந்து குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, தினப்பலன், மாதப்பலன், புத்தாண்டுபலன் போன்றவற்றை எழுதியுள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுபவ மும் கிடைத்த பட்டங்களும்

ஜோதிட சக்கரவர்த்தி முருகுஇராசேந்திரன் அவர்களுக்கு பல்வேறு ஆன்றோர் சான்றோர்களால் பல பட்டங்கள் வழங்கப்பட்டன.  அதில் குறிப்பிட்ட தக்கவைகள் ஜோதிட சக்கரவர்த்தி, யாக சக்கரவர்த்தி ஆகியவை. இவர் கடந்த 20 ஆண்டுகளாக  தொலைக்காட்சியில் தோன்றி தினப்பலன், வார பலன் ஜோதிட கலந்துரையாடலில்  ஒளிபரப்பு, போன்றவற்றில் மிகச் சிறப்பாக நகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.  1996  முதல்  2005 வரை ராஜ் தொலைக்காட்சியில் தினப்பலனை கூறியுள்ளார். அதே சமயம் 2001 முதல் 2002 வரை விஜய் தொலைக்காட்சியிலும் தினப்பலனை கூறியுள்ளார்.  2011 மு தல் 2013 வரை வசந்த் தொலைக்காட்சியில் தின மும் காலை 7.30- 8.00 மணி வரை தினப்பலனை வழங்கியுள்ளார்.

1999ஆம் ஆண்டு மலேசியா வானொலியில் இவருடைய பேட்டி ஒளிப்பரப்பானது. 2008 2009இல் BIG FM இல் ராசிபலன் கூறினார். இவருடைய நகழ்ச்சிகளை கண்டவர்கள் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் இவரைப் போலவே பேசியும் நடித்து ம் புகழ் பெற்றனர்.

வெளிநாட்டு அனுபவம்

 முருகு இராசேந்திரன் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கே போன்ற நாடு களிலும் தன்னுடைய ஜோதிட சொற்பொழிவை நடத்தியுள்ளார். இதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார்.

முருகு இராசேந்திரன் நடத்திய யாகங்களும் ஜோதிட மாநாடு களும்

ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற  நிறுவனத்தின் ­மூலம் கடந்த 30 வருடங்களாக ஜோதிடக் கலையை அஞ்சல் வழியிலும் பலருக்கு பயிற்றுவித்து வந்தார். 1992ஆம் ஆண்டு முதல் கிரக பெயர்ச்சிகள் ஏற்படுகின்ற போது மக்களின் நலன் கருதி அவர்களின் ஆதரவுடன் மிக பிரம்மாண்டமாக குரு பெயர்ச்சி யாகம். சனிப் பெயர்ச்சி யாகம் மற்றும் ராகு.கேது பெயர்ச்சி யாகம் போன்ற யாகங்களை நடத்தி வந்தார். அதே போல் தனது சொந்த முயற்சியால் ஜோதிடக் கலையை பரப்புவதற்காக ஜோதிட மாநாடுகளையும் நடத்தி வந்தார். இதில் பல மாநலங்களிலுள்ள ஜோதிடர்கள் வந்து சொற்பொழிவாற்றுவார்கள். இவற்றில் வெளிநாடு சோதிடர்களும் கலந்து கொள்வார்கள். மாநாட்டில் பட்டி மன்றம், கருத்தரங்கம்.வழக்காடு மன்றம் போன்றவை இடம்பெறும். யாகம் மற்றும் மாநாடட்டின் தொகுப்புகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நிறுவியதோடு, அனைத்திந்திய ஜோதிடர்கள் சங்கம் எனும் மாபெரும் ஆலமரத்தைத் தோற்றுவிக்க விதையாக செயல்பட்டு.  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வந்தார். முதன் முதலாக வி.ஜி.பி. தங்க கடற்கரையில் 1991. 92, 93களில் ஜோதிடர்களுக்கான மாநடுகளை நடத்த பெரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.  அதோடன்றி ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி. சனிப்பெயர்ச்சி நேரங்களில். மாபெரும் யாகங்களும். மாநாடுகளும் நடத்தி பல வளர்ந்து வரும் ஜோதிடர்களை மேடையேற்றி அழகு பார்த்தார்.

இவரை மானசீக குருவாக  கருதி இன்னும் பலர் ஜோதிட பலன்களை கூறி வருகின்றனர்.  எண்ணற்ற ஜோதிடர்களை உருவாக்கி தனக்கு பின்னும் தன் கலை சேவையை தன் சீடர்கள் ­முலமாக தொடர்கிறார்.

அன்றாடம்  தன் அலுவலகம் வந்து அன்பர்களைச் சந்தித்து பலன் கூறும் வழக்கம் கொண்ட இவர் 12.12.2013 அன்று வியாழக்கிழமை மாலை 4/00      மணியளவில் அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள  மருத்துவமனையில் உயிர்நீத்தது  இயற்கையாய்  நடந்த நிகழ்வு.

குருவாய் வாழ்ந்த அவர்தம் நினைவைப் போற்றி அவர்தம் ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் இறைஞ்சுகிறோம். திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் மறைந்தாலும் அவர் தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொரு ராசியையும் சொல்லி  நேயர்களே என்று கனிவுடன் அழைக்கும் குரல் என்றென்றும் தமிழ்நேஞ்சங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

அவரின் நினைவில் வாடும்

முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் குடும்பத்தினர் மற்றும்  நண்பர்கள்

வாழ்க அவர் புகழ்!          வளர்க ஜோதிடக் கலை!!

No comments: