Friday, May 2, 2014

குரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;

குரு பெயர்ச்சி பலன்  2014 - 2015 -  கன்னி ; 

உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்கள்

     அழகிய உடல்வாகும், நீலவிழியும் சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! பொன்னவனான குரு பகவான் வரும் 13.6.2014 முதல் 5.7.2015 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் 21.6.2014 முதல் ஜென்ம ராசியில் ராகுவும் 7இல் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஏழரை சனியால் பல இடையூறுகளை சிந்தித்து வரும் உங்களுக்கு வரும் 16.12.2014 இல் ஏழரை சனி முழுவதுமாக முடிவடைகிறது. பின்பு சனி 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.

தேக ஆரோக்கியம்
     உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு  நலமாக இருப்பார்கள் என்று கூற முடியாது.

குடும்பம் பொருளாதார நிலை
     குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
     பண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     பணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.

அரசியல்வாதிகளுக்கு
     பெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு  பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

படிப்பு
     கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

ஸ்பெகுலேஷன்
     லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் பெற முடியும்.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும் 1,7&இல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும்.  பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
     குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11 இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களையே அடைய முடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். 1,7இல் ராகு கேது சஞ்சரிப்பதாலும் ஏழரை சனி நடைபெறுவதாலும் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
     குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்தரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
     இக்காலங்களில் குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். இது உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதாரம் உயர்வடையும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும்.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் ஜென்ம ராசிக்கு 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 1,7 இல் ராகு கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
     குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11&இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சனியும் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

உத்திரம் 2,3,4ம் பாதங்கள்
     எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தடம் மாறாத பண்பு கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம்
     அழகான முக அமைப்பு வசீகரமான தோற்றமும் கொண்ட உங்களுக்கு, குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை அடைய முடியும். வேலை பளு குறையும்.

சித்திரை 1,2ம் பாதங்கள்
     ஆன்மீக தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11இல் குரு சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் தடைபட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 4,5,6,7,8 
நிறம் & பச்சை, நீலம்
கிழமை & புதன், சனி
கல் & மரகத பச்சை 
திசை & வடக்கு
தெய்வம் & ஸ்ரீவிஷ்ணு

பரிகாரம்
     கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் ராகுவும் 7இல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வதும், ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 16.12.2014 வரை சனி பகவான் 2 இல் சஞ்சரித்து ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

Post a Comment

Intha Naal