Monday, May 5, 2014

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;

குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;  
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்

     எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்து வைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்பராசி அன்பர்களே ! ஆண்டு கோளாளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டில் 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். குரு  6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். 16.12.2014 வரை சனி பகவான் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் ஒரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2லும் ராகு 8லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகளை உண்டாக்கும். 16.12.2014 முதல் சனி 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் இனி உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல் படுவது பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்கள் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

     குடும்ப ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுப காரியங்கள் தாமதப்படும்.

கொடுக்கல் வாங்கல்

     பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு வழக்குகள் ஏற்படும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     தொழில் வியாபாரம் சுமாராக தான் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சல உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடனிருப்பது நல்லது பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

     பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

     மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்த வொரு காரியத்திலும் முழுமை இருக்காது. உடன் பழகுடவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலனின்றி போகும் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும்.

பெண்களுக்கு

     உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

படிப்பு

     கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

ஸ்பெகுலேஷன்

     லாட்டரி, ஷேர், போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ருண ரோக ஸ்தானமான 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற சிறு சிறு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் தடையின்றி கிடைக்கும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவற்றையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப் பெற்றாலும்  உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படும். 21.06.2014 முதல் கேது 2லும் ராகு 8&லும் சஞ்சரிக்க விருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

    குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எனவே உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. நீங்கள் நல்லதா நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சனைகளை உண்டாக்கி விடும். பொருளாதார நிலை ஒரளவுக்கு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 2இல் கேது 8இல் ராகு சஞ்சரிப்பதாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும் உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் அட்டமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். திருமண மானவர்கள் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையினை அடைய முடியும். பண வரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர் பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். சனி 9இல் சஞ்சரிப்பதால் பயணங்களால் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். சிம்ம ராசி உங்கள் ஜென்ம ராசிக்கு சம சப்தம ஸ்தானம் என்பதால் எல்லா வகையிலும் மேன்மையான பலன்கள் உண்டாகும். தடைபட்டு கொண்டிருக்கும் திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியமும் ஒரளவுக்கு சிறப்பாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் 16.12.2014 முதல் சனி 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருந்தாலும் குரு சாதமாக இருப்பதால் தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் பட முடியும். சேமிப்பும் பெருகும்.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை காண முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்து பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறும். உடன் பணிபுரியவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை

    குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். 2இல் கேது, 8இல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் தாமதப்படும். உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையும் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. சனி பகவான் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கும் நெருக்கடிகள் அதிகரிக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவி போகும்.

அவிட்டம் 3,4ம் பாதங்கள்

     தன் அனுபவ அறிவால் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவில் நெருக்கடிகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் திறம் பட செயல்பட முடியாமல் போகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

சதயம்

     எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களையும் மற்றவர்கள் குறை காண்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.

பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்

     முன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  5,6,8,14,15,17
கிழமை  வெள்ளி, சனி
திசை  மேற்கு
நிறம்  வெள்ளை, நீலம்
கல்  நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
     கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 21.06.2014 முதல் கேது 2லும் ராகு 8லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்யவும். 16.12.2014 முதல் சனி 10 &இல் சஞ்சரிக்க விருப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

For your consultation
Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,S/O Murugu Rajendran,No 33 Palani andavar koil street,Vadapalani Chennai -600026,South India. Cell 9841771188/7200163001

Post a Comment

Intha Naal