Rasi palangal

Thursday, June 5, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ;

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ; 
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

அன்பார்ந்த வாசக நேயர்களே

சோதிட சம்மந்தமான 500 பதிவுகளை  இது வரை எனது  வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ), தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். 


காணத்தவறாதீர்

விஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்


13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று 

விஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை 
12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்
இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்


முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091 - 7200163001.9383763001,9841771188


எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் 16.12.2014 முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. 05.07.2015 முதல் குரு பகவான் 7&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் அதன் பின்னர் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தொழில் வியாபார உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும்.

உடல் நிலை
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். சோர்வு அசதி, மந்த நிலை யாவும் கொடுக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாதபடி சுனக்கம் உண்டாகும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெரியவர்களால் ஏற்படக் கூடிய மருத்துவ செலவுகளால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் முன் கேபாத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே மனசஞ்சலங்களை ஏற்படுத்தும். திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்க கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
பணி புரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் உழைப்பிற்கான பலனை பிறர் பெறுவார்கள். இதனால் மனநிம்மதி குறையும். வரவேண்டிய உயர்வுகளும் சற்று தாமதமடையும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய சற்று தாமத நிலை உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.

அரசியல்வாதிகளுக்கு
மக்களிடையே உங்களின் செல்வாக்கு குறைய கூடிய காலம் என்பதால் அவர்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பட்ட பாட்டிற்கான பலனை பெறுவதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். புதிய யுக்திகளை கையாள்வதால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடையலாம். புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிர் விளைச்சல் பாதிக்கும்.

கலைஞர்களுக்கு
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. நிறைய போட்டிகள் உண்டாவதால் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும். வர வேண்டிய பணத் தொகைகளிலும் இழு பறி நிலை நீடிக்கும். படபிடிப்பிற்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சேர்க்கைகளையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் சாதகமானது எனக்கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் நெருக்கடிகள் உண்டாகும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமராகத் தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சம்பவகங்கள் நடைபெறும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். புத்திர வழியில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும் குடும்பத்திலுள்ள்வர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு-கள் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் சுகவாழ்வு பாதிப்படையும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 16.12.2014 முதல் சனிபகவான் 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்ற அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயர்வுகளை பிறர்தட்டி செல்வார்கள்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இக்காலங்களிலும் சுமாரான அனுகூலங்களையேப் பெற முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்குப் பெற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8&ஆம் வீட்டிலும்,கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி கை கூடும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்க முடியும் என்றாலும் நிறைய போட்டிகளையும் சமாளிக்க வேண்டி வரும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும்.

அவிட்டம் 3,4ம் பாதங்கள்

எதற்கும் அஞ்சாத நெஞ்சமும், மன வலிமையும் கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.  பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும்.

சதயம்

உழைத்து வாழ்க்கையில் உயர்வு பெற விரும்பும் உங்களுக்கு குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் பிரச்சனைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

முன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மன நிம்மதி குறைவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற முடியும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் பிரச்சனைகளை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  5,6,8,14,15,17
கிழமை  வெள்ளி, சனி
திசை  மேற்கு
நிறம்  வெள்ளை, நீலம்
கல் நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2இல் கேதுவும் 8இல் ராகுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 16.12.2014 முதல் சனி 10இல் சஞ்சரிக்க விருப்பதால் சனிக்கு பரிகாரம் செய்யவும். 05.07.2015 வரை குரு 6இல் சஞ்சரிப்பதால் தட்சிணா மூர்த்தியை வழிபடுடவும்.

No comments: