Sunday, June 1, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 துலாம்

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 
2014-2016  துலாம் ;  

சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்

வசீகரமான உடல்வாகும், அழகான முக அமைப்பும் பயப்படாத குணமும் கொண்ட துலா ராசி அன்பர்களே ! சர்ப கிரகங்களான ராகு 12 ஆம் வீட்டிலும் கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது வரை இருந்த போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறையும். ஏழரை சனி தொடருவதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு மனநிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சுமாராகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. 05.07.2015 முதல் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் முற்பாதி வரை போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

உடல் நிலை
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். அடிக்கடி ஏதாவது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக்குப் பின் குணமாகி விடும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்வதை தவிர்த்தால் மன நிம்மதி கிடைக்கும். பயணங்களை குறைக்கவும்.

குடும்பம் குழந்தை
குடும்பத்தில் எடுக்கும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் நற்பலன் ஏற்படும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி யிருந்தாலும் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்தாமலிருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கடன்கள் வசூலாகும்.

தொழில் வியாபாரம்
புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையிலேயே நடைபெறும். போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் பொருட் தேக்க நிலை ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களை குறைப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்கள் ஏதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் பிரச்சனையின்றி செயல் பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். வேலை பளு சற்று அதிகரிக்கும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சிறப்புடன் செயல்பட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் ஆசை சிலருக்கு நிறைவேறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கடன்கள் சற்று குறையும்.

அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவுகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் வரவுகளும் அதற்கேற்றபடியிருக்கும். கட்சிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு
விளைச்சல் சுமாராக இருக்கும் என்பதால் லாபமும் சுமாராகத் தானியிருக்கும். காலத்திற்கேற்ப நவீன யுக்திகளை கையாள்வது நல்லது. உங்களுக்குள்ள வம்பு பிரச்சனைகள் மறையும். பங்காளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதால் பெயர் புகழை தக்க வைத்து கொள்ள முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப இருக்கும். ஆடம்பர வாழ்க்கையில் சற்றே குறைபாடுகள் ஏற்படும்.

மாணவ மாணவியர்களுக்கு
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் தாண்டி நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவீர்கள். நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதரவுகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்திலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது ஒரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கேது 6இல் சஞ்சரிப்பதால் எந்த போட்டி பொறாமைகளையும் சமாளிக்க முடியும். சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பண வரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். குரு 10&இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல்27.02.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்திலும் 6ஆம் வீட்டிலும்,சஞ்சரிக்கும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். குடும்பத்தில் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான்  16.12.2014 முதல் 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் ஏழரை சனியில் ஜென்மச்சனி முடிகிறது. இதனால் பொருளாதார நெருக்கடி குறையும். குரு 10&இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று நெருக்கடிகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திராட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களும் ஏற்ற இறக்கமானதாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கேது 6&இல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரம் சுமாரான லாபத்தை தரும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். 05.07.2015 முதல் குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். உற்றார் உறவினர்களிடையே இருந்தே கருத்து வேறுபாடுகள் மறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் கிடைக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஏழரை சனியில் பாத சனி தொடருவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள், இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களிடம் இருந்த பிரச்சனைகள் குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும்  தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் வர வேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும், உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

சித்திரை 3,4&ம் பாதங்கள்

அழகிய உடல்வாகும் கட்டான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நிலை உண்டாகும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலை பளு சற்று கூடும்.

சுவாதி
அனைவரையும் தன் வசமாக்கிக் கொள்ள கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்கு பின் கிட்டும்.

விசாகம் 1,2,3ம் பாதங்கள்
முன்கோபம் இருந்தாலும்  தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கும் உங்களுக்கு உடல்  நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி யிருந்தாலும் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  4,5,6,7,8
நிறம்  வெள்ளை, பச்சை
கிழமை  வெள்ளி, புதன்
திசை தென் கிழக்கு
கல்  வைரம்
தெய்வம்  லட்சுமி

பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு பகவான் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும். ஏழரைசனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றி வழிபடுவது நல்லது. 05.07.2015 வரை குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as

R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,

No comments: