Rasi palangal

Thursday, September 11, 2014

விபத்து - சோதிட பாா்வை

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம் 








விபத்து - சோதிட பாா்வை

தினமும் நாம் தூங்கி எழுவதில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம். எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். என்றாலும் அவை அனைத்தும் மனதளவில் பாதிக்கக்கூடிய விஷயங்களாக இருக்கிறது. ஒரு சிலர் வெளியில் செல்லும் போது கடவுளை வணங்கி, எதிரில் வரக்கூடிய சகுணங்களை  பார்த்து, ராகு காலம், எமகண்டம் பார்த்து வெளியில் செல்வார்கள். இந்த இயந்திர மயமான உலகில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. எவ்வளவுதான் ஜாக்கிரதையாக பயணம் செய்தால் கூட எதிர்பாராத திடீர் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. சிலர் நான் சரியாகத்தான் சென்றேன். எதிரில் வந்தவர் தான் விபத்தை உண்டாக்கினார் எனக்கூற கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் நடந்து செல்பவர்கள் கூட எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கிறார்கள். இப்படி ஏற்படக்கூடிய விபத்துக்களால் எத்தனையோ பேர் தன் உடல் உறுப்புகளை இழந்து இருக்கிறார்கள். யாருமே வேண்டுமென்று விபத்துக்களை ஏற்படுத்துவதில்லை. எதிர்பாராமல் ஏற்படுவதுதான் விபத்து.  இதற்கு காரணம் என்ன எனப்பார்க்கும் போது  ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவ்விதமான விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.

நவக்கிரகங்களில் ரத்தகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய கிரகம் செவ்வாய். செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு காரகனாக  விளங்குகிறார். அது போல மந்தகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும்,  அங்க ஹீனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். பொதுவாகவே  சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும், 8ம் அதிபதியுடன்  இணைந்திருந்தாலும், சனி, செவ்வாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ரத்த காயங்கள், உடல் உறுப்புகளில் பாதிப்பு போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. குறிப்பாக சனி திசை செவ்வாய் புக்தி, செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் விபத்து ஏற்படுகிறது.

சனி அல்லது செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 6,8ல் இருந்தாலும், மூவரும் இணைந்து 6,8ல் இருந்தாலும்,6,8ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்று சனி, செவ்வாய், ராகு ஆகியவர்களில் இருவர் இருந்தாலும், விபத்துக்களை அக்கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் சந்திக்க நேரிடும். சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கைகள் பெற்று 8ம் வீட்டில் காணப்பட்டால் போர் மற்றும் அசம்பாவிதம் மூலமும், ஆயுதம் போன்றவற்றாலும் மரணம் ஏற்படும். 
சூரியன், செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும். காலபுருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக்கூடிய விருச்சிகத்தில் சனி, செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் அதன் தசாபுக்தி நடைபெற்றாலும் விபத்துக்களை சந்திக்க நேரிடும்.
வாகன காரகன் எனச் சொல்லக்கூடிய சுக்கிரன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம், நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளால் கண்டம் உண்டாகும்.
லக்னாதிபதி பலமிழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை சந்திக்க நேரிடும். ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ, 8ம் வீட்டையோ பாவிகள் சூழ்ந்திருந்தால் அதாவது இருபுறமும் பாவிகள் இருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகிறது. செவ்வாய்,சனி,ராகுவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment