Rasi palangal

Thursday, September 25, 2014

நவகிரகங்களும் ருசி தன்மையும்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 
 (திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு








     


அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.





முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 



சனி பெயா்ச்சி யாகம்





நவகிரகங்களும் ருசி தன்மையும்

பண்டைய காலங்களில் எல்லாம் பசிக்காக மட்டுமே உணவு உண்டார்கள். பசிக்காக இருந்தாலும் அவ்வுணவானது சத்தானதாகவும் அவரவர் வசதிக்கேற்பவும் இருந்தது. ஏழை கூழை குடித்தான், கூழை குடித்து மகிழ்ச்சியாக இருந்தான். பணக்காரர்களாக இருந்தால் பழரசங்களை பருகினார்கள். எதுவாக இருந்தாலும் அது இயற்கை உணவாக இருந்தது. வரும் நோய்க்குக் கூட பச்சிலை மருந்துகளை பயன்படுத்தி சரிசெய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்தார்கள். காலங்கள் மாற மாற வாழ்க்கை முறைகளும் மாற தொடங்கிவிட்டனர். நிலாவை காட்டி உணவு ஊட்டிய அம்மா இன்று தொலைக்காட்சியில் சுட்டி டி.வி.யையும், ஜெட்டிக்ஸையும் காட்டி உணவு ஊட்டுகிறார்கள். இயற்கை உணவுகள் போய் நாக்கு ருசிக்காக மட்டுமே எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியே சென்று கொண்டு இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என நமக்கு நாமே தெரிந்து கொள்ள வேண்டியது தான். இப்போது ஜோதிட ரீதியாக யாருக்கு எவ்வகை உணவில் நாட்டம் இருக்கும் என பார்ப்போம்.

எவ்வகை உணவில் அதிகமான பிரியமாக இருப்பார்கள் என்று அறிய ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவமும், 2,3ம் பாவத்திற்கு 7ம் வீடான 8,9ம் பாவமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.2,3 ஆம் பாவம் பாதிக்கப்பட்டால் ருசி தன்மை பாதிக்கும்

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 2 அல்லது 3ம் பாவங்களில் சூரியன் அமைந்தாலோ 2,3ம் பாவத்திற்கு 7ம் வீடான 8 அல்லது 9ம் பாவங்களில் சூரியன் பலமாக அமைந்தாலோ, கார வகை உணவு எதையும் சூடாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
2 அல்லது 3ம் பாவங்களில் சந்திரன் பலமாக அமையப் பெற்றாலோ 2,3ம் வீட்டின் அதிபதிகள் சேர்க்கைப் பெற்று சந்திரன் வலுவாக அமையப் பெற்றாலோ குளிர்ச்சியான உணவுப் பொருட்கள், ஜலத் தொடர்புள்ள உணவுகள், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

2,3ம் பாவங்களில் செவ்வாய் வலுவாக அமையப் பெற்றால் சூடான உணவுப் பொருட்கள், துவர்ப்பு சார்ந்த உணவு வகைகள், பூமியில் விளையும் உணவு பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிக நாட்டம் இருக்கும். ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவங்களில் புதன் வலுவாக அமையப் பெற்றால் அறுசுவை உணவு உண்ணுவதில் நாட்டம், சாப்பிடும் உணவில் அதிகமாக உப்பு கலந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

2,3ம் பாவங்களில் குரு அமையப் பெற்றாலோ, 2,3ம் பாவங்களை குரு வலுவாக பார்வை செய்தாலோ இனிப்பு வகை உணவு சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் இருக்கும். இதன் மூலம் எளிதில் சக்கரை வியாதியை அடைவார்கள்.

2,3ம் பாவங்களில் சுக்கிரன் அமையப் பெற்றாலோ, சுக்கிரன் 2,3ம் அதிபதிகளின் சேர்க்கைப் பெற்று வலுவாக இருந்தாலோ இனிப்பு வகை உணவுகள், விலை உயர்ந்த உணவு வகைகள் சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் இருக்கும்.

2,3ம் பாவங்களில் சனி அல்லது ராகு அமையப் பெற்றாலோ, 2,3ம் அதிபதிகள் சேர்க்கைப் பெற்று சனி, ராகு இருந்தாலோ மாமிச உணவுகளை சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவங்களில் கேது அமையப் பெற்றால் புளிப்பு வகை உணவு சாப்பிடுவதில் அதிக நாட்டம் இருக்கும்.
சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வதால் ருசி தன்மையில் உள்ள பாதிப்புகள் விலகும்.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment