Rasi palangal

Tuesday, September 30, 2014

உங்கள் ராசிக்கு ஏற்ற ஊட்டச்சத்துணவுகள்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 
 (திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு


அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.


முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள சனி பெயா்ச்சி யாகம்
உங்கள் ராசிக்கு ஏற்ற ஊட்டச்சத்துணவுகள்

மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. நாம் உயிரோடு நடமாட காரணமாக இருப்பது நாம் சாப்பிடும் உணவு தான். நமது முன்னோர்கள் பசித்துப் புசி என்றும் உணவே  மருந்து என்றும் கூறியிருக்கிறார்கள். இன்றும் கூட நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொரு காய்கறிகளை சமைத்து நமக்கு சாப்பிட கொடுக்கும் போது இது மூளைக்கு நல்லது. இது வயிற்றுக்கு நல்லது. இது சிறு நீரகத்திற்கு நல்லது என்று கூறி நம்மை சாப்பிட வைப்பார்கள் உதாரணமாக வாழைத் தண்டினை தரும் போது சிறு நீரில் ஏற்படும் கல்லை கரைக்கும் என்றும் பாவற்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. கீரைகளை சாப்பிட்டால்  மலச்சிக்கல் வராது என சொல்லி குழந்தைகளை சாப்பிட வைத்து வளர்க்கிறார்கள். இது விஞ்ஞான ரீதியாக ஆதாரபூர்வமான உண்மையாகும். என்ன தான் பிடித்த உணவானாலும் அளவோடு சாப்பிட்டால் தான் வளமோடு வாழ முடியும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. எப்போதுமே வயிறு முட்ட முட்ட சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள உறுப்புகளுக்கு அதிக வேலை ஏற்பட்டு வெகு சீக்கிரத்திலேயே அந்த உறுப்புக்கள் சோர்வடைந்து விடும். உணவில் சில கட்டுப்பாடுகளை வைத்தால் தான் நமது ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
ஜோதிடத்தில் ஜெனன ஜாதகத்தில் 6,8,12ம் அதிபதிகளும், ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் நல்ல ஆரோக்கியமான உடல் நோய் நொடியற்ற வாழ்வு உண்டாகின்றது. 12 ராசிகளில் பிறந்தவர்கள் எத்தகைய உணவு வகைளை உட்கொள்வது என்பதனை பார்ப்போம்.

மேஷம்;
மேஷ ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள் காலிபிளவர், ஆலிவ் ஆயில், தோல், உரிக்காத உருளைக்கிழங்கு, வெங்காயம், பரங்கிக்காய், வெள்ளரிக்காய், கோஸ், எலுமிச்சை, பீன்ஸ், அவரைக்காய், வால்நெட், ஆப்பிள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்;
ரிஷப ராசிகளில் பிறந்தவர்கள் மூளையிட்ட பயறு வகைகள், கேரட் பசலைக்கீரை, வேர் கிழங்குகள், ஆப்பிள் முந்திரி பழம், வெள்ளரிக்காய், மஞ்சள் நிறமுடைய பழ வகைகள், சிவப்பு முள்ளங்கி, சீஸ், பாதாம், தேங்காய் போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

மிதுனம்;
மிதுன  ராசிகளில் பிறந்தவர்கள் கேரட், பசலைகீரை, தக்காளி, பார்லி, அவரை, சிவப்பு நிறமுள்ள பழ வகைகள், பழச்சாறு, தர்பூசணி, முட்டை மஞ்சள் கரு, நார் கொண்ட பழங்களின் கொட்டைகள் போன்றவற்றை உண்டால் நல்லது

கடகம்;
கடக ராசிகளில் பிறந்தவர்கள்  பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள் பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை உண்பதால் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.

சிம்மம்;
சிம்ம ராசிகளில் பிறந்தவர்கள் பசலைக்கீரை, மற்ற எல்லா கீரை வகைகள், வெள்ளரிக்காய், பாதாம், பார்லி, சோளம், வால்நெட், கோதுமை, அத்திப்பழம் இவற்றை உண்ணுவது மூலம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.

கன்னி;
கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் பசலைகீரை, காலிபிளவர், வெள்ளரி, கீரை வகைகள், கோஸ், முட்டை மஞ்சள் கரு, தக்காளி, வெங்காயம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பச்சையாக தினசரி சாப்பிடுவது மூலம் உடல் நிலையை பாதுகாத்து கொள்ள முடியும்.

துலாம்;
துலா ராசிகளில் பிறந்தவர்கள் கைகுத்தல் அரிசி, மஞ்சள் சோளம், பச்சைப் பட்டாணி, காலி பிளவர், வெள்ளரிக்காய், வேர் உணவு, கேரட், கீரை வகைகள், முந்திரி பழம், நாவல் பழம், சிவப்பு மஞ்சள், பழங்கள் அத்திப்பழம், முழு கோதுமை ரொட்டி, பாதம், வால்நெட், இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் உண்டாகாது.

விருச்சிகம்;
விருச்சிக ராசிகளில் பிறந்தவர்கள் சிவப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ் வேர் கிழங்குகள், வெள்ளரி, காலி பிளவர், முந்திரி, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், நாவல் பழம் இவைகளை உண்டு வந்தால் நோய்கள் தாக்காது.

தனுசு;
தனுசு ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள், முட்டை கோஸ், கேரட், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, பாதாம், வால்நட், கோதுமை, பார்லி இவைகளை அன்றாட உணவில் சேர்ப்பது மூலம் ஆரோக்கியமான உடல் உண்டாகும்.

மகரம்;
மகர ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வாழைப் பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், எண்ணெய் சத்து குறைந்த வேக வைத்த காய்கறிகள், கொழுப்பு சத்து குறைவாக உள்ள உணவு இவைகளை சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்;
கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் வாழத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழங்கள், பார்லி, கீரை வகைகள், காலிபிளவர், கேரட், தக்காளி, பப்பாளி பழம், குளிர்ந்த நீரும் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பாதுகாக்கும்.

மீனம்;
மீன ராசிகளில் பிறந்தவர்கள் கோதுமை ரொட்டி, பார்லி, பச்சை பட்டாணி, கோஸ், கீரை வகைகள், வெள்ளரி, ஜவ்வரிசி,கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் நோயின்றி பாதுகாப்பாக வாழ முடியும்.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: