Rasi palangal

Friday, October 17, 2014

பரிகாரங்களை எங்கு எப்போது செய்யலாம்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்

திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 

 (திருமணவாழ்வு பற்றிய முழுமையான புத்தகம்)
96 பக்கம் இலவச இணைப்பு

அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.



பரிகாரங்களை எங்கு எப்போது செய்யலாம்

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உண்டாக கூடிய இன்பம், துன்பம், சந்தோஷம், போன்ற அனைத்திற்கும் காரணமாக இருப்பது நவகிரகங்களே. நம்முடைய ஜனன ஜாதகத்தில் அமையக் கூடிய நவகிரகங்களின் தன்மைகளுக்கேற்ப அந்தந்த தசா புக்தி காலங்களில் நன்மை தீமைகளை சந்திக்கின்றோம். இந்த கிரகங்களுக்குரிய பரிகாரங்களை எளிய முறையில் செய்து பலனைடைய நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் பல வழி முறைகளை கணித்து கூறியுள்ளனர். ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு கிழமை உண்டு என்பதால் அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிரகங்களுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

எதை தின்றால் பித்தம் தணியும் என்று நினைக்கும் மனிதனுக்கு ஆலய வழிபாடே சிறந்தது என்பது என் கருத்து. தேவையற்றவைகளை, தேவையற்றவர்களை நம்பி பணத்தை,நேரத்தை வீனாக்காமல் இறைவழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சுப காரியங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் வளர்பிறையிலும், துன்பம் துயரங்களிலிருந்து விடுபட விரும்புவோர் தேய்திறையிலும் பரிகாரங்களை செய்வது நல்லது.  ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வது அதை விட சிறப்பானது.

தொழிலில் நஷ்டம், கணவன் மனைவியிடையே பிரச்சனைகள், எதிரிகளால் ஏற்படும் கஷ்ட நஷ்டம், புத்திர பாக்கியம் இல்லாத குறை, எப்போதும் தோல்வி இடையூறுகளையே வாழ்வில் சந்திப்பவர்கள், பௌர்ணமி முதல் அமாவாசை வரையில் உள்ள 15 நாட்களில் பரிகாரம் செய்வது நல்லது. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யும் போது வளர் பிறை தேய்பிறை எனப் பார்க்க வேண்டிய தில்லை.

முக்கியமாக பரிகாரங்களை ஆலயங்களில் செய்வதே  மிக சிறந்தது. ஆறுகளின் கரைகள், ஏரிக்கரை, குளக்கரை, கடற்கரை, அருவிகள் அமைந்து உள்ள ஆலயங்களில் பரிகாரங்களை செய்வது மூலம் கெடுதிகள் குறையும்.
குடும்ப நன்மைகளுக்காகவும், தரித்திரம், கெட்ட கனவுகள் நீங்கவும் வீட்டிலேயே கணபதிஹோமம், சுதர்சன ஹோமம், ஆயுட் ஹோமம், லட்சுமி நாராயண பூஜை, சுமங்கலி பூஜை, கௌரி நோம்பு போன்றவற்றை வீட்டிலேயே செய்வது மிகவும் நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment