Tuesday, November 11, 2014

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017

முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்













சனி பெயர்ச்சி பலன்கள் 
தனுசு  2014 -2017



தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் - 1

தவறு செய்தவர்கள் ஒப்பு கொண்டால் மன்னிக்கும் சுபாவமும் அத்துமீறுபவர்கள் சகவாசத்தை தவிர்க்கும் நற்குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! இது நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பல நற்பலன்களை வாரி வழங்கிய சனி பகவான் வரும் 16.12.2014 முதல்  ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்கவுள்ளது. விரயச் சனி நடைபெறுவது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2,6,9 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து ஒற்றுமை குறையும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். எதிர்பார்க்கும் பண வரவுகளிலும் இடைய+றுகள் ஏற்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் கடன் வாங்க வேண்டிய நிலைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திரும்பப் பெறமுடியாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும்  கௌரவம் கிடைக்கப் பெற்றாலும் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறும் இக்காலங்களில் 05.07.2015 வரை தனக்காரகன் குருபகவானும் அஷ்டம  ஸ்தானமான 8 ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள், தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க கூடிய நிலை உண்டாகும். 05.07.2015  முதல் 02.08.2016 வரை பாக்கிய ஸ்தானமான 9 ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால்  குடும்பத்தில் மகிழ்ச்சி திருமண சுப காரியங்கள் கைகூட கூடிய வாய்ப்பு, பூமி மனை வாங்கும் யோகம், கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 02.09.2017 முதல் 04.10.2018 வரை லாப  ஸ்தானமான 11 ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது எல்லா வகையிலும் நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும்.

தேக ஆரோக்கியம்
     சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.  உங்களின் உடல் நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூற முடியாது. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
     கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவதோடு இல்வாழ்விலும் நாட்டமின்மை ஏற்படும். சுகவாழ்வு பாதிப்படையும்.குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்; நடைபெறும் என்றாலும் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உங்களிடம் உதவிகள் பெற்றவர்கள் கூட உங்களை பாராட்டுவதற்கு பதில் பின்னால் தூற்றுவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பழிகளைச் சுமப்பீர்கள். பண வரவுகளில் ஏற்ற தாழ்வான நிலையிருக்கும். குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாகி விடும். ப+மி மனை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். எதிர்பாராத விரயங்கள் உண்டாகக் கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு
     உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். திடீர் இடமாற்றத்தால் புதிய மொழி புதிய இடம் என அலைச்சல்களும் மனசஞ்சலங்களும் உண்டாகும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதியினை  உண்டாக்கும். உடன்பணிபுரியவர்கள் ஒரளவுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு தடைகள் உண்டாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரம் செய்பவர்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறமுடியும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சறுக்கல்களைச் சந்திப்பீர்கள். வெளிய+ர் வெளி நாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு சவாலாக அமையும். விடாமுயற்சியும் மன தைரியமும் கொண்டு முன்னேற்றத்தினைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே மற்ற காரியங்களை எளிதில் முடிக்க முடியும். திருமணமாகதவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெற்றாலும் கணவன் மனைவி விட்டுக்  கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையுடன் வாழ முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும், வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். பணி புரிவோர்க்கு வேலைப் பளு கூடும்.

கொடுக்கல் வாங்கல்
     பணவரவுகள் தாராளமாகவே இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்கள் உண்டாகும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்றாகி விடும். கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு
     தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலமிது மக்களின் செல்வாக்கிற்கு காரகனான சனிபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவைப் பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு பள்ளம் தோண்டுவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் குறையும். எந்தவொரு முயற்சியிலும் தடைகளையே சந்திப்பீர்கள்.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல்கள் சுமாராகத்தான் இருக்கும். அதிலும் புழு ப+ச்சிகள் தொல்லைகள் அதிகரிக்கும். போட்ட முதலீட்டை எடுக்கவே அரும்பாடு படவேண்டியிருக்கும். பட்ட பாட்டிற்கான பலன்கள் சுமாராக இருக்கும். புதிய நிலம், நவீன கருவிகள் போன்றவை வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படும். கால்நடைக்களால் ஒரளவுக்கு லாபத்தினைப் பெற முடியும்.

படிப்பு
     கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உறக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் ஞாபக சக்தி குறையும். குடும்பச் சூழலும் உங்கள் படிப்பில் நாட்டமின்மைக்கு ஒரு காரணமாக அமையும். தேவையற்ற பொழுது போக்குகள் மற்றும் நண்பர்களின் சேர்க்கைகள் போன்றவற்றாலும் மதிப்பெண்கண் குறையும். முயற்சியுடன் படிக்கவும் பயணங்களில் கவனம் தேவை.
ஸ்பெகுலேஷன்:- லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
சனி பகவான் உங்கள் இராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பதால்;  குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திக்க நேரிடும். எந்த வேலையையும் சரிவர முடிக்க முடியாமல் சிரமப்பட வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் செய்யபவர்கள் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 12 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில்  8 இல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புக்கள் மறைந்து எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சுமாராக தான் இருக்கும். மனைவி புத்திரர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைய கூடிய சூழ்நிலைகளும், நண்பர்களே எதிரிகளாக மாற கூடிய நிலையும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் அலைச்சலை உண்டாக்கும். குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். மன அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் லாபக் குறையும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களால் வீணான பிரச்சினைகளை சந்திப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
விரய ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில்; வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். உங்களது வெற்றிகள் தொடர்ந்தபடியே இருக்கும். பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் செயபவர்கள் வெற்றி மேல் வெற்றிகளை பெற்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலில் மேன்மையை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயற்பட்டால் மட்டுமே வீண்பழிகளிலிருந்து தப்பிக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை  பாதிப்படையும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்கு பின்பே வெற்றி காண முடியும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு 12 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி 11 இல் சஞ்சரிக்க இருப்பதால்  உடல் நிலை சிறப்பாக அமையும். குருபகவான் 9 இல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகளே உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி எதிர்பாராத தீடீர் தன வரவுகள் போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள்; நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சொந்த ப+மி, மனை போன்றவற்றையும் வாங்க முனைவீர்கள். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும்; எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிலும்  சரளமான நிலையே இருக்கும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 12 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு  9 ம் வீட்டிலும், 10 இல் இராகுவும் சஞ்சரிப்பதால்  உங்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். நினைத்த காரியங்களும் தடைப்பட்ட காரியங்களும் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதர்பாராத தீடீர் பண வரவுகளும் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கடன்களை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை.  வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சமுதாயத்தில் பெயர், புகழை உண்டாகும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களின அனைத்து ஆசைகளும் பூர்த்தியடையும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பதால்; உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாககூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் குரு  9 ஆம் வீட்டிலும், 10 இல் இராகுவும் இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசகரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயரக்கூடிய காலமாகும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்தால் வெற்றியைப் பெறுவீர்கள்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
உங்கள் இராசிக்கு 12 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 9 லும்,  கேது 3 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்சன் குறையும். உடல் ஆரோக்கியத்திலும் மேன்மை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும் தீடீர்; தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்களை அடைய கூடிய காலமாகும். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தியோக உயர்வையும் தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
விரய ஸ்தானத்தில் சனியும் 10 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும்.  உங்களின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இக்காலங்களில் நெருங்கியவர்களை இழக்க கூடிய வாய்ப்புகளும் அமையும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உங்களின் முன் கோபத்தையும் முரட்டுதனத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகியவையே சிறந்ததாகும்.  தொழில் வியாபாரத்தில் மேன்மையான பலன்கள் இருந்தாலும் சில தடைகளையும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். பெரிய முதலிடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.உத்தியோகஸ்தர்கள் எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு 7,10 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் 12 இல் சனியும் 10 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எதிலும் எதிர் நீச்சல் போட்டே எடுக்கும் காரியங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்களின் உடல்நிலை சில மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். பூர்வீக சொத்துகளால் வீண் அலைச்சல், விரயம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் தொடங்கும் காரியங்களில் எச்சரிக்கை தேவை. பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் தேவையற்ற குழப்பங்கள் குறையும். எவ்வளவுதான்  பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை அடைய முடியவில்லை என்ற மனவருத்தம் உண்டாகும்

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 12 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 10 லும் சஞ்சரிப்பதால்  பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும் பொருளாதார நிலை சுமாராக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைவீர்;கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். கேது 3 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
சனி தனது நட்பு நட்சத்திரத்தில் 12 இல் சஞ்சரிப்பது நல்லதல்ல என்றாலும் குரு லாப ஸ்தானத்தில்  சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். திருமண சுப காரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. உணவு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் சற்றே முன்னேற்றம் அடையும் கடந்த கால போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவதே நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.  நினைத்த காரியங்களை நிறைவேற்ற விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
தனக்குப் பிடித்தவர்களிடம் அன்பாகவும், பிடிக்காதவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்ட உங்களுக்கு சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. இதனால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதைக் குறைக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

 பூராட நட்சத்திரத்த்தில் பிறந்தவர்களுக்கு
     எந்தச் சூழ்நிலையிலும் நல்லதையே நினைக்கும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

உத்திராடம் 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
     பொறுப்புள்ளவர்களாகவும் காரியவாதிகளாகவும் விளங்கும் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது மருத்துவச் செலவுகளைக் குறைக்க உதவும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 1,2,3,9,10,11, 12
கிழமை : வியாழன், செவ்வாய்
நிறம் : மஞ்சள், வெள்ளை
கல் : புஷ்பராகம்
திசை : வடகிழக்கு
தெய்வம் : தட்சிணாமூர்த்தி;

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Post a Comment

Intha Naal