Rasi palangal

Saturday, November 1, 2014

நவம்பர் மாத பலன்கள் 2014


ஓம்சரவண பவா

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
நவம்பர் 2014 
ஓம்சரவணபவா இதழுடன்

2015 புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 சந்திராஷ்டமம்,அதிர்ஷ்டக்குறிப்புகள்  அடங்கியது)  

96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு

ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்






நவம்பர் மாத பலன்கள் 2014





மேஷம்    அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே முன்கோபமும், முரட்டு சுபாவமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 9-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெரும்.உடல் நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக அமையும். திருமண சுப முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு  சிறுசிறு தடைகளுக்கு பின்; நல்ல பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எதிர் பார்;த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். 

பரிகாரம்;;;;  சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 22.11.2014 காலை 07.12 மணி முதல் 24.11.2014 பகல் 11.49 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே கம்பீரமான தோற்றமும் பிடிவாத குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், சனியும் 11-ல் கேது;வும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிiவேறும். குடும்பத்திலும் ஒற்றுமை உண்டாகும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடமும் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருந்தாலும் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் வியாபாரத்தில் நல்ல லாபம், கூட்டாளிகளால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயர்வாகவே அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவையும் பெறுவார்கள்.

பரிகாரம் முருகப்பொருமானை வழிபாடு செய்வது  சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் 24.11.2014 பகல் 11.49 மணி முதல்  26.11.2014 மதியம் 02.51 மணி வரை.


மிதுனம் மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசியே தனது காரியங்களை சாதித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 2-ல் குருவும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும்.பொருளாதார நிலை சிறப்பாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உடல்நிலையிலும் சிறுபாதிப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரயவகள் சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயரக்கூடிய காலமாகும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்தால் வெற்றியைப் பெறுவீர்கள்.

பரிகாரம் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.11.2014 மதியம் 02.51 மணி முதல்  28.11.2014 மாலை 05.30 மணி வரை.

 கடகம்      புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே தங்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி தைரியமாக எடுத்துரைக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் 6-ல்  செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும்.உங்களின் உடல்நிலை சில மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். பூர்வீக சொத்துகளால் வீண் அலைச்சல், விரயம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பொருளாதார நிலையில் சில சங்கடங்கள் இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வரவுக்கு மீறிய செலவுகளை தவிர்ப்பது கடன்களை குறைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் தொடங்கும் காரியங்களில் எச்சரிக்கை தேவை. புதிய கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பேச்சுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் தேவையற்ற குழப்பங்கள் குறையும்.

பரிகாரம் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம். 
சந்திராஷ்டமம் 01.11.2014 பகல் 12.07  மணி முதல் 03.11.2014 மதியம் 02.26 மணி வரை.
; 28.11.2014 மாலை 05.30 மணி முதல் 30.11.2014 இரவு 08.33 மணி வரை

சிம்மம்     @  மகம், ப+ரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே எதிலும் தீர ஆலோசித்த பின்னரே செயல்பட கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ராசிக்கு 3-ல் சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினை பெறுவீர்கள்.தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.; உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் சற்றே முன்னேற்றம் அடையும் கடந்த கால போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவதே நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.  பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு சற்று டிவலை பளு அதிகரிக்கும்.

பரிகாரம் சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.11.2014 மதியம் 02.26 மணி முதல்  05.11.2014 மாலை 04.56 மணி வரை 


கன்னி @  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உயர்ந்த எண்ணங்களையும், லட்சியங்களையும் கொண்ட உங்களுக்கு 11-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும்.இதனால் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்களும் தடைப்பட்ட சுப காரியங்களும் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதர்பாராத தீடீர் பண வரவுகளும் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கடன்களை குறைக்கும்.  கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் அமையும். டிகாடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூல் ஆகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சமுதாயத்தில் பெயர், புகழை உண்டாகும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களின அனைத்து ஆசைகளும் பூர்த்தியடையும். 

பரிகாரம் துர்கைவழி பாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.


சந்திராஷ்டமம் 05.11.2014 மாலை 04.56 மணி முதல் 07.11.2014 இரவு 08.44 மணி வரை 


துலாம்   சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி சுகவாழ்வையும், சொகுசுவாழ்வையும் அதிகம் விரும்பும்  உங்களுக்கு ராசிக்கு 3-ல் செவ்வாயும்   6-ல் கேதுவும் சஞ்சாரம் செயவதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும்; என்றாலும் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்  ஏழரை சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள.; தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலப்பலன்கள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றத்தை ஊதிய உயர்வுடன் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம் சனி பிரிதி ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது  சனி கிழமை தோறும் எள் எண்ணெய் தீப மேற்றுவதுஉத்தமம்.

சந்திராஷ்டமம் 07.11.2014 இரவு 08.44 மணிமுதல் 10.11.2014 அதிகாலை 03.01 மணி வரை 


விருச்சிகம்@ விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற ஒழுக்க நெறிகளை கொண்ட உங்களுக்கு 9-ல் குரு 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும் தீடீர்; தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்களை அடையகூடிய காலமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தியோக உயர்வையும் தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு முன்னேற்ற காலமாக அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற்று மகிழ்ச்சி  அடைவார்கள்.
பரிகாரம்;;;; செவ்வாய்கிழமை தோறும் முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 10.11.2014 அதிகாலை 03.01மணிமுதல் 12.11.2014 மதியம் 12.31 மணி வரை 

தனுசு மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எந்த விஷயத்திலும் பிறரை கலந்த ஆலோசித்து முடிவெடுக்கும் உங்களுக்கு ராசிக்கு 11-ல் சூரியன் சுக்கிரன் சனி சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும்.எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி  செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து ஏற்றம் ஏற்படும். தொழிலாளி முதலாளி உறவு சமூகநிலையில் இருக்கும். வியாபாரத்தை வெளியூர்களில் விரிவுபடுத்தும் நோக்கத்தில் சற்று இடையூறு உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியும், நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் அமையும். தீடீர் தனவரவுகளும் உண்டாகி; குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சற்று கடன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்தாலும் முன் ஜாமீனை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புதிய பதவிகளும் பொறுப்பும் உற்சாகத்தை உண்டாக்கும். அரசியல்வாதிகளின் புகழ் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். மக்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

பரிகாரம் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம். 
சந்திராஷ்டமம் 12.11.2014 மதியம் 12.31 மணி முதல் 14.11.2014 இரவு 12.36 மணி வரை 

மகரம்@ உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய விருப்பதும் எல்லா வகையிலும் மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.எந்தவித சோதனைகளையும் சமாளித்து வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக சில நெருக்கடிகள் இருந்தாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சம்பவங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வீண் பழி சொல்லுக்கு ஆளாக நேர்ந்தாலும் எந்த வித சிக்கலையும் எதிர் கொண்டு ஏற்றத்தினை அடைவார்கள். திருமண்  சுபகாரியங்கள் சில தடைகளுக்கு பின் கை கூடும். சிலருக்கு தேவையற்ற தொலை தூர பயணங்களால் அலைச்சல்கள்; உண்டாகும்.; பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திம்  செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம்.
பரிகாரம் முருக பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.11.2014 இரவு 12.36 மணி முதல் 17.11.2014 மதியம் 01.10 மணி வரை 

கும்பம் @ அவிட்டம்3,4, சதயம்,பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பும் உங்களுக்கு 9-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எதிர் பாராத லாபங்கள் உண்டாகும்.என்றாலும் இக்காலங்களில் ஏற்றத்தாழ்வுடைய பலன்களையே பெற முடியும். தனவரவு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள்  சற்று தகுதிக்கு குறைவாகவே அமையும். ஊதிய உயர்வுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களை பெறுவார்கள். அரசு வழியிலும் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும் உடல் ஆரோக்கியத்தில்  சற்று கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 17.11.2014 மதியம் 01.10 மணி முதல்  19.11.2014 இரவு 11.46 மணி வரை 


மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் பிறரின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் உங்களுக்கு 5-ல் குருவும் 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.. புத்திரர்களால் சுபசெலவுகள் உண்;டாகும். தனவரவுகள் தடையின்றி அமையும். உங்கள் பலமும் வளமும் கூடும்;. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கடந்தகால கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கு பவர்களுக்கு அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் பூர்த்தியாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபம் அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கலைஞர்கள் நல்ல பொருளாதார மேன்மையை அடைவார்கள். அரசியல்வாதிக்கு சமுதாயத்தில் பெயர் புகழ் உண்டாகும்.

பரிகாரம் சனி  கிழமை தோறும் எள் எண்ணெய் தீப மேற்றுவது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 19.11.2014 இரவு 11.46 மணி முதல்  22.11.2014 காலை 07.12 மணி வரை


சுபமுகூர்த்த நாட்கள்

02.11.2014 ஐப்பசி மாதம், 16 ஆம் தேதி   ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி, சதய  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 08.00 மணி முதல்  9.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை


9.11.2014 ஐப்பசி மாதம், 23 ஆம் தேதி   ஞாயிற்றுக்கிழமை, திருதியை திதி, ரோகிணி நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 07.00 மணி முதல்  8.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம் தேய்பிறை


10.11.2014 ஐப்பசி மாதம், 24 ஆம் தேதி   திங்கட்;கிழமை, சதுர்த்தி திதி, மிருகசீரிஷி  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 5.30 மணி முதல்  06.30 மணிக்குள் துலா இலக்கினம் தேய்பிறை


12.11.2014 ஐப்பசி மாதம், 26 ஆம் தேதி   புதன்;கிழமை, சஷ்டி திதி, புனர்ப+ச  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 05.30 மணி முதல்  06.30 மணிக்குள் துலா இலக்கினம் தேய்பிறை


13.11.2014 ஐப்பசி  மாதம், 27 ஆம் தேதி   வியாழக்கிழமை, சப்தமி திதி, ப+ச    நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 05.00 மணி முதல்  06.00 மணிக்குள் துலா இலக்கினம் தேய்பிறை


20.11.2014 கார்த்திகை மாதம், 04 ஆம் தேதி   வியாழக்கிழமை, திரயோதசி திதி, சித்திரை  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 10.30 மணி முதல்  11.30 மணிக்குள் மகர இலக்கினம் தேய்பிறை


27.11.2014 கார்த்திகை மாதம், 11 ஆம் தேதி   வியாழக்கிழமை, சஷ்டி திதி, திருவோண  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 10.00 மணி முதல்  11.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை


28.11.2014 கார்த்திகை மாதம், 12 ஆம் தேதி   வெள்ளிக்;கிழமை, சப்தமி திதி, அவிட்ட  நட்சத்திரம் சித்த யோகம் கொண்ட சுப தினத்தில்  காலை 06.30 மணி முதல்  07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வனர்பிறை

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment