Rasi palangal

Friday, November 14, 2014

சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2014 -2017

முருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும் 


சனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்






சனி பெயர்ச்சி பலன்கள் 
மகரம்  2014 -2017

மகரம் (உத்திராடம் 2 ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய )

     எந்தக் காரியத்திலும் தீர ஆலோசித்துச் செயல் படும் குணமும் நாணயம் தவறாத பண்பும் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்கள் இராசியாதிபதி சனிபகவான்  இது நாள் வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தால் தொழில் உத்தியோக ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்திர்கள். தற்போது ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் 16.12.2014 முதல் 19.12.2017 வரை லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் சாதகமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்களது பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகி வாழ்வில் மறுமலர்ச்சியினை அடைவீர்கள். நீங்கள் நினைத்தெல்லாம் நிறைவேறும் குடும்பத்திலிருந்த  பிரச்சனைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவடினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் நல்ல மேன்மைகள் ஏற்படுவதால் கடன்கள் யாவும் தீரும். அசையா அசையா சொத்துகள் வாங்க கூடிய யோகத்தினைப் பெறுவீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்பவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலும் இருந்த போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வரும் 05.07.2015 வரை ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவானும் சமசப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும்;;;;இ பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு  அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகளும் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 02.08.2016 முதல் 02.09.2017 வரை குருபகவான் பாக்கிய  ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் சனியும் பலமாக சஞ்சரிப்பது சிறப்பான பொற்காலங்களாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிட்டும்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியம்  அற்புதமாக இருக்கும். நீண்ட நாள் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் தெரியும். அன்றாடப் பணிகளில்  சோர்வில்லாமல் செயல்பட முடியும். மனைவி பிள்ளைகளும் குடும்பத்திலுள்ள வயதில் மூத்தவர்களும் நலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைவடையும்.

குடும்பம் பொருளாதார நிலை

     பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் குடியேறும். கணவன் மனைவியிடையே கடந்த காலங்களிலிருந்த  மனசஞ்சலங்கள் விலகி அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான குழந்தைச் செல்வமும் உண்டாகும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலர் மனதில் நினைத்தவரையே கை பிடித்து மகிழ்வர். பொன், பொருள், ஆடை, ஆபரண சேரும். புதிய வீடு, கார் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். இது தான் வரை பகைமை பாராட்டிய உற்றார் உறவினர்கள் கூடி தேடி வந்து நட்புடன்  பழகுவார்கள். கடன்களும் படிப்படியாகக் குறைந்து சேமிப்பு பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

     உத்தியோக ஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமிக்கப் பதவிகளைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். பணியிலிருந்த நெருக்கடிகள் வீண் பழிச் சொற்கள் யாவும் படிப்படியாக விலகும். உயரதிகாரிகள் உங்கள் திறமைகளைப் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். சிலர் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளிய+ர் வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரிய நினைப்பவரின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பும் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     கடந்த காலங்களிலிருந்த வந்த போட்டி, பொறாமைகள் யாவும் வலகி தொழில், வியாபாரம் சிறப்பாக  முன்னேற்ற மடையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் கொடுத்து நல்ல பெயரையும் எடுப்பீர்கள். புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபங்கள் அமையும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் அனுகூலங்கள் உண்டாகும். மறைமுக எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

பெண்களுக்கு

     கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தைச் செல்வத்தைப் பெற்றேடுப்பீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். பொன், பொருள் ஆடை, ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி சாதனை படைப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிட்டும்.

கொடுக்கல் வாங்கல்

     பண வரவுகள் தடையின்றி இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். பெரிய முதலீடுகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர்க்கு எதிர்பார்த்த படி லாபங்கள் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு

     அரசியல் வாதிகளின் பெயர், புகழ்,உயர்வடையும். உங்கள் வார்த்தைகளுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். மறைமுக வருவாய்களும் அதிகரிக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் சிறப்பாக அமைந்து லாபத்தை அள்ளித் தரும். பட்ட பாட்டுக்கு இரு மடங்கு ஊதியத்தைப் பெறுவீர்கள். உங்களின் விளைப்பொருட்கள் சந்தையில் நல்ல விலைக்குப் போகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ப+மி, நிலம் போன்றவற்றையும் வாங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராது கிடைக்கும். மானியங்களால் கடன்கள் நிவர்த்தியாகும். சேமிப்பும் பெருகும்.

கலைஞர்களுக்கு

     புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிர்பார்த்துச் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும் பெறும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு திருமண சுப காரியங்களும் நடைபெறும். படப்பிடிப்பிற்காக வெளிய+ர் வெளி நாடுகளுக்குச் சென்று வருவீர்கள். சுகவாழ்வு சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும்.

படிப்பு

     கல்வியில் பல சாதனைகள் படைக்கும் காலமாக இருக்கும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
ஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். என்றாலும் குரு சாதகமற்ற நேரங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. 


சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை

உங்கள் இராசியாதிபதி சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் லாபஸ்தானமான  11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். ஆண்டு கோளான குருபகவானும் சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். புத்திரர்களால் சுபசெலவுகள் உண்;டாகும். தனவரவுகள் தடையின்றி அமையும். உங்கள் பலமும் வளமும் கூடும் காலமாக அமையும். கடந்த கால கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் பூர்த்தியாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபம் அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை

உங்கள் இராசிக்கு லாப ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரத்தில் சனி  சஞ்சரிக்கும் இக்காலத்தில்; 3 இல் கேது இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.. தொழில் ரீதியாக இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து ஏற்றம் ஏற்படும். தொழிலாளி முதலாளி உறவு சமூகநிலையில் இருக்கும். வியாபாரத்தை வெளியூர்களில் விரிவுபடுத்தும் நோக்கத்தில் முன்னேற்றம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியும், நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் அமையும். தீடீர் தனவரவுகளும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புதிய பதவிகளும் பொறுப்பும் உற்சாகத்தை உண்டாக்கும். அரசியல்வாதிகளின் புகழ் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். மக்களின் ஆதரவு சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை

லாப ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருந்தாலும் 7 ஆம் வீட்டில் குரு  உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.  இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் குறைந்து வெற்றி மேல் வெற்றியினை உண்டாக்கும். பண வரவுகளும் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் உத்தியோகத்திலிருப்பவர்கள் கௌரவமான உயர்வுகளையும் பெற முடியும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.உற்றார் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத வரவுகளும் ஏற்படும். அரசியல் வாதிகளின் பதவிகளை காப்பாற்றி கொள்ள பாடுபட வேண்டுடியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உத்தமம்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை

உங்கள் இராசிக்கு  பதினென்றாம் வீட்டில் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி தொழில் ஸ்தானமான 10 இல் சஞ்சரிக்க இருப்பதாலும், குரு அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டில் சஞ்சரி ருப்பதாலும் பண வரவுகளிலும் நெருக்கடிகள் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள், எடுக்கும் முயற்சிகளிலும் தடை இடையூறுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளிலும் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வீண் குழப்பம் என அனுகூலமற்ற பலன்களே உண்டாகும்;;. எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள், கூட்டாளிகளிடையே ஒற்றுமை குறைவு, எதிர்பார்த்த கடனுதவிகள் தடைபடும் நிலை உண்டாகும். தெய்வ வழிபாடுகள் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். அரசியல் வாதிகளின் பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படக் கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 19.10.2015 வரை

உங்கள் இராசிக்கு 3,12 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு 8 ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக இடையூறுகளை கொடுக்கும் என்பதால்; புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன்கள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றத்தை ஊதிய உயர்வுடன் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை

சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 8 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில்  சிறு தடைகளுக்கு பின் சாதகப்பலன்கள் உண்டாகும்.
இக்காலங்களில் ஏற்றத்தாழ்வுடைய பலன்களை பெற முடியும். தனவரவு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் சுபகாரிய முயற்சிகளுக்கு தடையாக அமையும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள்  சற்று தகுதிக்கு குறைவாகவே அமையும். ஊதிய உயர்வுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களை பெறுவார்கள். அரசு வழியிலும் உதவிகள் கிடைக்கும். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் அமையும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்; தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகளால் நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் வர வேண்டிய லாபம் வந்து சேரும்.

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை

உங்கள் இராசிக்கு 11 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும்  கேது 2 ஆம் வீட்டிலும், குரு, இராகு  8 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை பெறுவீர்கள். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகளில் சிறப்பான நிலை இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  உடல் நலனில்  சோர்வு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளாலும் வாக்கு வாதங்களாலும் ஒற்றுமை குறைந்து மன நிம்மதியற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்;லைகள் அதிகரிக்கும். கூட்டு தொழிலிலும் கூட்டாளிகளிடம் பிரச்சினைகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்ற அனுகூலமற்ற பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சினைகள் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை பிரிய நேரிடுவதால் மன நிம்மதியை இழப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகி மதிப்பெண்கள் குறையும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை

உங்கள் இராசிக்கு லாப ஸ்தானம் என்னும் 11 ஆம் வீட்டில் வலுவாக சனியும், பாக்கிய ஸ்தானமான 9 இல் குருவும் சஞ்சரிப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல மேன்மையை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவிகளும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் எண்ணமும் நிறைவேறும். பூர்வீக சொத்து வழக்குகள் எதிர்பாராத தனவரவை உண்டாக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுடன் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் புதிய பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். 2 இல் கேது. 8 இல் இராகு சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை

உங்கள் இராசிக்கு 6.9 இக்கு அதிபதியான புதனின் சாரத்தில்  11 ஆம் வீட்டில் சனியும், 9 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சலை சந்தித்தாலும் அதனால் அனுகூலப்பலனையும் பெறுவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். பழைய கடன்கள் குறையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சற்று தடைபின் சாதகப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அற்புதமான லாபத்தை அடைவீர்;கள். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளை பெறுவார்கள். 2 இல் கேது. 8 இல் இராகு இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும்.

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை

உங்கள் இராசிக்கு 11 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில்  சஞ்சரித்தாலும், குரு  9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் ஏற்றமிகு பலன்களை பெற முடியும். எடுக்கும் காரியங்களில் சிறு சிறு தடை இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை அடைய முடியும். பண வரவுகள் சரளமான நிலையில் இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 2 இல் கேது 8 இல் இராகு இருப்பதால் கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு அமையும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முன்னேற்றம் தரும். புதிய முயற்சிகளில் அரசு வழியில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் சுமாரான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெறுவார்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் ஆறுதல் தரும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை

சனி தனது நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 11 ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதால் உடல்நிலை சிறப்பாக அமையும். பொருளாதார நிலையிலும் முன்னேற்றமான பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை தோன்றினாலும் சிறப்பாக கைகூடும்.  உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குரு பகவான் 10 இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக சுமாரான நற்பலன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்கள் குறையும். பூர்வீக சொத்து வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை பூhத்தி செய்வதால் மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்சனைகளும் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும்;.

உத்திராடம் 2,3,4 ஆம் பிறந்தவர்களுக்கு

     சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பொருளாதார நிலை உயர்வடையும் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

     பொது மக்களின் நலனுக்காகப் பாடுபடும் குணமும் ஆத்ம பலமும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறும் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அவிட்டம் 1,2ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

     அதிக ஞாபக சக்தியும் நல்ல உழைப்பாற்றலும் கொண்ட உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புதிய கார், பங்களா  வாங்கும் யோகம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலும் முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும்.

அதிர்ஷ்டம் தருபவை

தேதி : 4,5,6,7,8
கிழமை : சனி, புதன்
நிறம் : நீலம், பச்சை
கல் : நீலக்கல்
திசை : மேற்கு
தெய்வம் : ஐயப்பன்


Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Post a Comment