Tuesday, September 30, 2014

உங்கள் ராசிக்கு ஏற்ற ஊட்டச்சத்துணவுகள்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 
 (திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு


அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.










முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 



சனி பெயா்ச்சி யாகம்




உங்கள் ராசிக்கு ஏற்ற ஊட்டச்சத்துணவுகள்

மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. நாம் உயிரோடு நடமாட காரணமாக இருப்பது நாம் சாப்பிடும் உணவு தான். நமது முன்னோர்கள் பசித்துப் புசி என்றும் உணவே  மருந்து என்றும் கூறியிருக்கிறார்கள். இன்றும் கூட நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொரு காய்கறிகளை சமைத்து நமக்கு சாப்பிட கொடுக்கும் போது இது மூளைக்கு நல்லது. இது வயிற்றுக்கு நல்லது. இது சிறு நீரகத்திற்கு நல்லது என்று கூறி நம்மை சாப்பிட வைப்பார்கள் உதாரணமாக வாழைத் தண்டினை தரும் போது சிறு நீரில் ஏற்படும் கல்லை கரைக்கும் என்றும் பாவற்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. கீரைகளை சாப்பிட்டால்  மலச்சிக்கல் வராது என சொல்லி குழந்தைகளை சாப்பிட வைத்து வளர்க்கிறார்கள். இது விஞ்ஞான ரீதியாக ஆதாரபூர்வமான உண்மையாகும். என்ன தான் பிடித்த உணவானாலும் அளவோடு சாப்பிட்டால் தான் வளமோடு வாழ முடியும். நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. எப்போதுமே வயிறு முட்ட முட்ட சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள உறுப்புகளுக்கு அதிக வேலை ஏற்பட்டு வெகு சீக்கிரத்திலேயே அந்த உறுப்புக்கள் சோர்வடைந்து விடும். உணவில் சில கட்டுப்பாடுகளை வைத்தால் தான் நமது ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
ஜோதிடத்தில் ஜெனன ஜாதகத்தில் 6,8,12ம் அதிபதிகளும், ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் நல்ல ஆரோக்கியமான உடல் நோய் நொடியற்ற வாழ்வு உண்டாகின்றது. 12 ராசிகளில் பிறந்தவர்கள் எத்தகைய உணவு வகைளை உட்கொள்வது என்பதனை பார்ப்போம்.

மேஷம்;
மேஷ ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள் காலிபிளவர், ஆலிவ் ஆயில், தோல், உரிக்காத உருளைக்கிழங்கு, வெங்காயம், பரங்கிக்காய், வெள்ளரிக்காய், கோஸ், எலுமிச்சை, பீன்ஸ், அவரைக்காய், வால்நெட், ஆப்பிள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்;
ரிஷப ராசிகளில் பிறந்தவர்கள் மூளையிட்ட பயறு வகைகள், கேரட் பசலைக்கீரை, வேர் கிழங்குகள், ஆப்பிள் முந்திரி பழம், வெள்ளரிக்காய், மஞ்சள் நிறமுடைய பழ வகைகள், சிவப்பு முள்ளங்கி, சீஸ், பாதாம், தேங்காய் போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

மிதுனம்;
மிதுன  ராசிகளில் பிறந்தவர்கள் கேரட், பசலைகீரை, தக்காளி, பார்லி, அவரை, சிவப்பு நிறமுள்ள பழ வகைகள், பழச்சாறு, தர்பூசணி, முட்டை மஞ்சள் கரு, நார் கொண்ட பழங்களின் கொட்டைகள் போன்றவற்றை உண்டால் நல்லது

கடகம்;
கடக ராசிகளில் பிறந்தவர்கள்  பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள் பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை உண்பதால் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.

சிம்மம்;
சிம்ம ராசிகளில் பிறந்தவர்கள் பசலைக்கீரை, மற்ற எல்லா கீரை வகைகள், வெள்ளரிக்காய், பாதாம், பார்லி, சோளம், வால்நெட், கோதுமை, அத்திப்பழம் இவற்றை உண்ணுவது மூலம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.

கன்னி;
கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் பசலைகீரை, காலிபிளவர், வெள்ளரி, கீரை வகைகள், கோஸ், முட்டை மஞ்சள் கரு, தக்காளி, வெங்காயம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பச்சையாக தினசரி சாப்பிடுவது மூலம் உடல் நிலையை பாதுகாத்து கொள்ள முடியும்.

துலாம்;
துலா ராசிகளில் பிறந்தவர்கள் கைகுத்தல் அரிசி, மஞ்சள் சோளம், பச்சைப் பட்டாணி, காலி பிளவர், வெள்ளரிக்காய், வேர் உணவு, கேரட், கீரை வகைகள், முந்திரி பழம், நாவல் பழம், சிவப்பு மஞ்சள், பழங்கள் அத்திப்பழம், முழு கோதுமை ரொட்டி, பாதம், வால்நெட், இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் உண்டாகாது.

விருச்சிகம்;
விருச்சிக ராசிகளில் பிறந்தவர்கள் சிவப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ் வேர் கிழங்குகள், வெள்ளரி, காலி பிளவர், முந்திரி, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், நாவல் பழம் இவைகளை உண்டு வந்தால் நோய்கள் தாக்காது.

தனுசு;
தனுசு ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள், முட்டை கோஸ், கேரட், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, பாதாம், வால்நட், கோதுமை, பார்லி இவைகளை அன்றாட உணவில் சேர்ப்பது மூலம் ஆரோக்கியமான உடல் உண்டாகும்.

மகரம்;
மகர ராசிகளில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வாழைப் பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், எண்ணெய் சத்து குறைந்த வேக வைத்த காய்கறிகள், கொழுப்பு சத்து குறைவாக உள்ள உணவு இவைகளை சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்;
கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் வாழத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழங்கள், பார்லி, கீரை வகைகள், காலிபிளவர், கேரட், தக்காளி, பப்பாளி பழம், குளிர்ந்த நீரும் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பாதுகாக்கும்.

மீனம்;
மீன ராசிகளில் பிறந்தவர்கள் கோதுமை ரொட்டி, பார்லி, பச்சை பட்டாணி, கோஸ், கீரை வகைகள், வெள்ளரி, ஜவ்வரிசி,கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் நோயின்றி பாதுகாப்பாக வாழ முடியும்.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Thursday, September 25, 2014

நவகிரகங்களும் ருசி தன்மையும்

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
அக்டோபர்  2014 ஓம்சரவணபவா இதழுடன்
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் 
 (திருமண வாழ்வு பற்றிய முழுமையான புத்தகம் )
96 பக்கம் இலவச இணைப்பு








     


அன்புள்ள வாசக  பெருமக்களே! 

எனது 18 வருட ஜோதிட அனுபவத்தில் இருந்தும், தற்போது முனைவர் பட்ட ஆய்விற்காக மேற்கொள்ளபட்ட பணியில் இருந்தும் கிடைக்க பெற்ற திருமணத்தை பற்றிய பல அரிய தகவல்களை அக்டோபர் 2014 ஓம்சரவணபவா இதழுடன் திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள் (96 பக்கம் இலவச இணைப்பு) என்ற தலைப்பில் தொகுத்து வழங்கியுள்ளேன். பல தரப்பட்ட திருமண வாழ்வு, திருமண பொருத்தம், தோஷங்கள், தோஷத்திற்கு ஏற்ற வரனை தேர்ந்து எடுக்கும் விதம், திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் பற்றியும் விளக்கியுள்ளேன். இதனை படித்து அனைவரும் பலனடையும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026

செல்  0091&7200163001.9383763001.





முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 



சனி பெயா்ச்சி யாகம்





நவகிரகங்களும் ருசி தன்மையும்

பண்டைய காலங்களில் எல்லாம் பசிக்காக மட்டுமே உணவு உண்டார்கள். பசிக்காக இருந்தாலும் அவ்வுணவானது சத்தானதாகவும் அவரவர் வசதிக்கேற்பவும் இருந்தது. ஏழை கூழை குடித்தான், கூழை குடித்து மகிழ்ச்சியாக இருந்தான். பணக்காரர்களாக இருந்தால் பழரசங்களை பருகினார்கள். எதுவாக இருந்தாலும் அது இயற்கை உணவாக இருந்தது. வரும் நோய்க்குக் கூட பச்சிலை மருந்துகளை பயன்படுத்தி சரிசெய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்தார்கள். காலங்கள் மாற மாற வாழ்க்கை முறைகளும் மாற தொடங்கிவிட்டனர். நிலாவை காட்டி உணவு ஊட்டிய அம்மா இன்று தொலைக்காட்சியில் சுட்டி டி.வி.யையும், ஜெட்டிக்ஸையும் காட்டி உணவு ஊட்டுகிறார்கள். இயற்கை உணவுகள் போய் நாக்கு ருசிக்காக மட்டுமே எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படியே சென்று கொண்டு இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என நமக்கு நாமே தெரிந்து கொள்ள வேண்டியது தான். இப்போது ஜோதிட ரீதியாக யாருக்கு எவ்வகை உணவில் நாட்டம் இருக்கும் என பார்ப்போம்.

எவ்வகை உணவில் அதிகமான பிரியமாக இருப்பார்கள் என்று அறிய ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவமும், 2,3ம் பாவத்திற்கு 7ம் வீடான 8,9ம் பாவமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.2,3 ஆம் பாவம் பாதிக்கப்பட்டால் ருசி தன்மை பாதிக்கும்

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 2 அல்லது 3ம் பாவங்களில் சூரியன் அமைந்தாலோ 2,3ம் பாவத்திற்கு 7ம் வீடான 8 அல்லது 9ம் பாவங்களில் சூரியன் பலமாக அமைந்தாலோ, கார வகை உணவு எதையும் சூடாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
2 அல்லது 3ம் பாவங்களில் சந்திரன் பலமாக அமையப் பெற்றாலோ 2,3ம் வீட்டின் அதிபதிகள் சேர்க்கைப் பெற்று சந்திரன் வலுவாக அமையப் பெற்றாலோ குளிர்ச்சியான உணவுப் பொருட்கள், ஜலத் தொடர்புள்ள உணவுகள், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றில் நாட்டம் அதிகமாக இருக்கும்.

2,3ம் பாவங்களில் செவ்வாய் வலுவாக அமையப் பெற்றால் சூடான உணவுப் பொருட்கள், துவர்ப்பு சார்ந்த உணவு வகைகள், பூமியில் விளையும் உணவு பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிக நாட்டம் இருக்கும். ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவங்களில் புதன் வலுவாக அமையப் பெற்றால் அறுசுவை உணவு உண்ணுவதில் நாட்டம், சாப்பிடும் உணவில் அதிகமாக உப்பு கலந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

2,3ம் பாவங்களில் குரு அமையப் பெற்றாலோ, 2,3ம் பாவங்களை குரு வலுவாக பார்வை செய்தாலோ இனிப்பு வகை உணவு சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் இருக்கும். இதன் மூலம் எளிதில் சக்கரை வியாதியை அடைவார்கள்.

2,3ம் பாவங்களில் சுக்கிரன் அமையப் பெற்றாலோ, சுக்கிரன் 2,3ம் அதிபதிகளின் சேர்க்கைப் பெற்று வலுவாக இருந்தாலோ இனிப்பு வகை உணவுகள், விலை உயர்ந்த உணவு வகைகள் சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் இருக்கும்.

2,3ம் பாவங்களில் சனி அல்லது ராகு அமையப் பெற்றாலோ, 2,3ம் அதிபதிகள் சேர்க்கைப் பெற்று சனி, ராகு இருந்தாலோ மாமிச உணவுகளை சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். ஜென்ம லக்கினத்திற்கு 2,3ம் பாவங்களில் கேது அமையப் பெற்றால் புளிப்பு வகை உணவு சாப்பிடுவதில் அதிக நாட்டம் இருக்கும்.
சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வதால் ருசி தன்மையில் உள்ள பாதிப்புகள் விலகும்.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Saturday, September 20, 2014

தடுக்கப்பட வேண்டிய தற்கொலைகள்

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம்











தடுக்கப்பட வேண்டிய தற்கொலைகள்

பெற்றோர் படைத்த உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. அதற்கு சட்டமும் அனுமதிக்கவில்லை. இருந்தும் உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலர் தங்களது வாழ்க்கையை தாங்களாகவே முடித்துக் கொள்கிறார்கள். இயற்கை மரணமாக இல்லாமல் அவர்களது வாழ்க்கையை அவர்களே செயற்கையாக முடித்துக் கொள்கிறார்கள்.

குறிப்பாக சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நெருங்கியவர்கள் செய்யும் கொடுமைகளை தாங்க முடியாததாலும் தங்களை தாங்களாகவே தற்கொலை மூலம் மாய்த்துக் கொள்கிறார்கள். சில இடத்தில் வரதட்சணை கொடுமையால் கூட தற்கொலைகள் ஏற்படுகிறது.

தற்கொலை மரணம் என்பது ஒரு தைரியம் இழந்த நிலையில் ஏற்படும் ஒரு சம்பவமாகும். வாழ வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக ஒருவருக்கு இயற்கையாகவே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு செயற்கை செயலால் உடலில் வலுவான காயங்கள் ஏற்பட்டு அதுவே மரணமாகி விடுகிறது. தற்கொலை செய்யும் சூழ்நிலை யாருக்கு ஏற்படுகிறது என்பதனை இங்கு தெளிவாக பார்ப்போம்.

ஜோதிட ரீதியாக ஆராய்கின்ற போது ஜென்ம லக்னமானது ஒருவரின் உடல் அமைப்பு ஆகும். 3ம் வீடு தைரியம் வலது கை ஆகும். 11ம் வீடு இடது கையும் அதன் செயல்பாடுகளும் ஆகும். 10ம் வீடு ஒருவரின் கர்ம ஸ்தானமாகும். தற்கொலையில் ஒருவரின் சுயமாகச் செய்யும் செயல்களே முக்கிய பங்கு வகிக்கின்றது. மேற்கூறிய ஸ்தானங்களின் அதிபதிகளின் சேர்க்கையானது 1,8ல் அமையப் பெற்று சூரியன் சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் ஆதிக்கம் வலுப் பெற்று பாவ கிரகங்களின் திசா புக்தி நடைபெற்றால் தற்கொலை செய்யும் சூழ்நிலை உண்டாகும்.

8 ம் வீடு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமாகும். 1,8க்கு அதிபதிகள் பலமிழந்து பாவ கிரகங்களான சூரியன் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகளின் பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலும், 12ம் வீட்டில் அமையப் பெற்றாலும் தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவம் நடைபெறும். அது போல பாவ கிரகங்களின் சேர்க்கை 3,11ல் அமையப்பெற்றாலும் அவர்களின் செயல்பாடுகளே கெடுதலை தரும். குறிப்பாக 3,8க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் தற்கொலை செய்ய நேரிடுகிறது.

4,10ல் அல்லது 5,9ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று 8ல் செவ்வாய் அமைந்தாலும், 8ம் அதிபதி செவ்வாய் சேர்க்கை பெற்றாலும். சந்திரனுக்கு 5,9ல் பாவ கிரகங்கள் அமையப் பெற்று பாவ கிரக பார்வையும் உண்டாகி 8ம் வீட்டில் சர்ப கிரகங்கள் அமையப்   பெற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறை சந்திரனாகி சனி செவ்வாய் ராகு போன்ற கொடிய பாவ கிரக சேர்க்கை பெற்று 8ம் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் அந்த ஜாதகர் நெருப்பாலோ தண்ணீர் மூலமாகவோ தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையை  உண்டாக்கிக் கொள்வார்.

சந்திரன் சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு செயற்கை மரணம் உண்டாகும்.
சந்திரனானவர் சனி செவ்வாயின் வீட்டில் அமைந்து பாவ கிரகங்களால்  சூழப்பட்டிருந்தால் செயற்கை மரணம் தற்கொலை செய்யும் சூழ்நிலை உண்டாகும்.
சந்திரன்,ராகுவிற்கு பரிகாரம் செய்வது தியானம் நல்லது.


Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Thursday, September 11, 2014

விபத்து - சோதிட பாா்வை

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம் 








விபத்து - சோதிட பாா்வை

தினமும் நாம் தூங்கி எழுவதில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம். எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். என்றாலும் அவை அனைத்தும் மனதளவில் பாதிக்கக்கூடிய விஷயங்களாக இருக்கிறது. ஒரு சிலர் வெளியில் செல்லும் போது கடவுளை வணங்கி, எதிரில் வரக்கூடிய சகுணங்களை  பார்த்து, ராகு காலம், எமகண்டம் பார்த்து வெளியில் செல்வார்கள். இந்த இயந்திர மயமான உலகில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. எவ்வளவுதான் ஜாக்கிரதையாக பயணம் செய்தால் கூட எதிர்பாராத திடீர் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. சிலர் நான் சரியாகத்தான் சென்றேன். எதிரில் வந்தவர் தான் விபத்தை உண்டாக்கினார் எனக்கூற கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் நடந்து செல்பவர்கள் கூட எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கிறார்கள். இப்படி ஏற்படக்கூடிய விபத்துக்களால் எத்தனையோ பேர் தன் உடல் உறுப்புகளை இழந்து இருக்கிறார்கள். யாருமே வேண்டுமென்று விபத்துக்களை ஏற்படுத்துவதில்லை. எதிர்பாராமல் ஏற்படுவதுதான் விபத்து.  இதற்கு காரணம் என்ன எனப்பார்க்கும் போது  ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 8ம் பாவம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவ்விதமான விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.

நவக்கிரகங்களில் ரத்தகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய கிரகம் செவ்வாய். செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு காரகனாக  விளங்குகிறார். அது போல மந்தகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் உடல் உறுப்புகளுக்கும்,  அங்க ஹீனங்களுக்கும் காரகனாக விளங்குகிறார். பொதுவாகவே  சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று 8ல் இருந்தாலும், 8ம் அதிபதியுடன்  இணைந்திருந்தாலும், சனி, செவ்வாய் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ரத்த காயங்கள், உடல் உறுப்புகளில் பாதிப்பு போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. குறிப்பாக சனி திசை செவ்வாய் புக்தி, செவ்வாய் திசை சனி புக்தி காலங்களில் விபத்து ஏற்படுகிறது.

சனி அல்லது செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 6,8ல் இருந்தாலும், மூவரும் இணைந்து 6,8ல் இருந்தாலும்,6,8ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்று சனி, செவ்வாய், ராகு ஆகியவர்களில் இருவர் இருந்தாலும், விபத்துக்களை அக்கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் சந்திக்க நேரிடும். சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கைகள் பெற்று 8ம் வீட்டில் காணப்பட்டால் போர் மற்றும் அசம்பாவிதம் மூலமும், ஆயுதம் போன்றவற்றாலும் மரணம் ஏற்படும். 
சூரியன், செவ்வாய் 8ல் இருந்தால் இடி, மின்னல், அதிக வெயில், நெருப்பு மற்றும் உஷ்ணத்தால் மரணம் உண்டாகும்
வாகன ஸ்தானமான 4ம் வீட்டின் அதிபதி சனி சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் வண்டி வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு மரணம் உண்டாகும். காலபுருஷ தத்துவப்படி எட்டாம் இடம் என வர்ணிக்கப்படக்கூடிய விருச்சிகத்தில் சனி, செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் அதன் தசாபுக்தி நடைபெற்றாலும் விபத்துக்களை சந்திக்க நேரிடும்.
வாகன காரகன் எனச் சொல்லக்கூடிய சுக்கிரன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் வாகனங்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படும்.
ஜல காரகன் சந்திரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 8ல் இருந்தால் ஜலத்தால் கண்டம், நீச்சல் குளம் மற்றும் கடல் பகுதிகளால் கண்டம் உண்டாகும்.
லக்னாதிபதி பலமிழந்து 8ல் பாவிகள் பலம் பெற்றால் விபத்துக்களை சந்திக்க நேரிடும். ஜென்ம லக்னத்தையோ, சந்திரனையோ, 8ம் வீட்டையோ பாவிகள் சூழ்ந்திருந்தால் அதாவது இருபுறமும் பாவிகள் இருந்தால் எதிர்பாராத கண்டங்கள் உண்டாகிறது. செவ்வாய்,சனி,ராகுவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Monday, September 8, 2014

சிறு நீரக கோளாறுகள்




முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம் 



சிறு நீரக கோளாறுகள்

நம்முடைய உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறு நீரகங்கள் ஆகும். நம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து சிறுநீராக மாற்றி வெளியேற்றி நம்மை சுகவாழ்வு வாழ வைப்பது சிறுநீரகம் தான். அவரை விதை போன்ற வடிவில் நம் கையளவில் அமைந்திருக்கும் இரண்டு சிறுநீரகங்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். சிறு நீரகங்கள் இரண்டு இருப்பதால் ஒன்று செயலிழந்தால் கூட மற்றொன்றை வைத்தே உயில் வாழ முடியும். இரண்டுமே செயலிழந்தால் கண்டிப்பாக வேறொரு சிறு நீரகத்தை பொருத்த வேண்டும். இல்லையெனில் ரத்தம் அசுத்தமடைந்து மரணத்தை தழுவ நேரிடும். உடலில் உப்பு, சர்க்கரை,கொழுப்பு போன்றவை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும் போது சிறு நீரகங்கள் பாதிக்கப் படுகின்றன. சிலருக்கு தீடீரென்று செயலிழப்பதும் சுருங்கி விடுவதும் உண்டு. ஏனிந்த பாதிப்புகள் என ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது இதுவும் நவகிரகங்களின் திருவிளையாடலே.

சனி,சூரியன்,சுக்கிரன் 5இல் இருந்தாலும்
செவ்வாய் 10இல் இருந்து சனியின் தொடர்பு ஏற்பட்டாலும்,
சூரியன்,செவ்வாய் 1 அல்லது 7இல் இருந்தாலும்
சந்திரன் ஜல ராசியில் அமையப் பெற்று புதனின் பார்வை பெற்றாலும், ஜென்ம லக்னத்திற்கு 6,8,12க்கு அதிபதிகளுடன் இணைந்து சனியின் பார்வை பெற்றாலும்,
சனி,சூரியன்,சுக்கிரன் 5இல் இருந்தாலும்
செவ்வாய் 10இல் இருந்து சனியின் தொடர்பு ஏற்பட்டாலும்,
சூரியன்,செவ்வாய் 1 அல்லது 7இல் இருந்தாலும்
ஜென்ம லக்னத்திற்கு 6,7 இல் பாவிகள் அமையப் பெற்று அல்லது பாவிகளின் பார்வை பெற்றாலும்,
சந்திரன் புதன் இணைந்து 6,8,12ல் அமைந்து சனி செவ்வாயின் பார்வை பெற்றாலும் சிறு நீரக கோளாறு சிறுநீரகத்தில் கல் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும்.
செவ்வாய் ராகு மாந்தி ஆகியவர்கள் இணைந்து 6,8ல் அமைந்தாலும்
செவ்வாய், சுக்கிரன் இணைந்து 7ம் வீட்டில் அமைந்தாலும் 7,8க்கு அதிபதிகள் பாவர்களாக இருந்து பரிவர்த்தனை பெற்றாலும்.
சூரியன் செவ்வாய் ராகு சனி ஆகிய பாவர்கள் 7,8&ம் இடங்களில் இணைந்து காணப்பட்டாலும்
சிறு நீரக கோளாறுகள், சிறு நீரகம் பாதிக்கப்படும் நிலை, சிறு நீரகத்தில் கற்கள் உண்டாக கூடிய அமைப்பு உண்டாகிறது.
சுக்கிரன், சந்திரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Tuesday, September 2, 2014

இரண்யா கோளாறு

முருகு சோதிட ஆராய்ச்சி மையத்தின் 

சாா்பில் நடைபெறவுள்ள 


சனி பெயா்ச்சி யாகம்




இரண்யா கோளாறு 

ஆண்களுக்கு உடல் உறுப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆண் குறியாகும். ஆண்களின் உயிர் நாடியாகவும் இது விளங்குகிறது. இந்த ஆண் குறியுடன் ஒட்டி இணைந்து அமைந்திருப்பது தான்  விரைப் பையாகும். விரைப் பையினுள் இருபுறமும் இரு விரைகள் அமைந்திருக்கும். இந்த பை போன்ற  அமைப்புகளில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவை வீங்கி வலியை ஏற்படுத்தும்.  தேவையற்ற நீர் சேருவதாலும், சைக்கிள் ஒட்டுவதாலும், ஏதாவது அடிபடுவதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனால் வலியும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலையும் சில ஆண்களால் பேண்ட் போன்ற ஆடைகளை கூட அணிய முடியாத சூழ்நிலையும் ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே. இதற்கு இரண்யா கோளாறு என்று பெயர். இது ஏன் ஏற்படுகின்றது என ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது அவரவர் ஜெனன ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் திருவிளையாடலே காரணமாக அமைகின்றது.

ஒருவர் ஜாதகத்தில் உணர்ச்சிகளுக்கு காரகனான சுக்கிரன் கடகத்தில் இருந்து சுக்கிரனை செவ்வாய் பார்ப்பதும்.
சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் அதாவது 7 டிகிரிக்குள் அமைந்து அஸ்தங்கம் பெற்று 8ல் இருப்பதும் விரையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
குருவின் பார்வை 8ம் வீட்டிற்கு இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அறுவை சிகிச்சை மூலம் குணம் பெற்று ஜாதகர் நல்ல நிலையில் செயல் பட முடியும்.
ஜென்ம லக்னத்திற்கு 6,8ல் சனி செவ்வாய் ராகு இணைந்து காணப்பட்டாலும் ஜென்ம லக்னத்தில் குரு ராகு இருந்தாலும் குரு சூரியன், ராகு இணைந்து 3,6,8ல் அமையப் பெற்றாலும், லக்கினாதிபதி ராகு செவ்வாய் இணைந்து 6,8ல் அமைந்து பாவிகள் பார்வை பெற்றாலும், செவ்வாய், ராகு இணைந்து 7ல் அமையப் பெற்றாலும், ஆண்களுக்கு விரையில் கோளாறுகள், இரண்யா கோளாறுகளும் உண்டாகும்.
சுக்கிரன், ராகுவிற்க்கு பரிகாரம் செய்வது நல்லது.

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA