Rasi palangal

Sunday, January 4, 2015

தாமத திருமணம்



காணத்தவறாதீர், 

 விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை 
 காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


தாமத திருமணம்

வசதி வாய்ப்புகள் குறைவால் திருமணம் தாமதமானால் அவர்கள் ஏழை அதனால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்றொரு சமாதானம் ஏற்படும். ஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களுக்கே திருமணம் தள்ளிக் கொண்டே சென்றால், அவள் ராசியில்லாதவளாகி விடுவாள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். சில பெற்றோர்கள் வரன் பார்த்தே சொத்துக்களை இழந்திருப்பார்கள். சிலர் வரன் தேடினோம் தேடினோம் தேடிக்கிட்டே இருக்கோம் என்பார்கள். முதலிலேயே நல்ல வரன் ஒன்று வந்தது அதையே முடித்திருக்கலாம் இன்னும் கொஞ்சம் நல்ல வரனாக அமையட்டுமே என நினைத்தோம் அதுவே பெரிய தவறாகிப் போய்விட்டது என ஆதங்கப் படுபவர்களும் உண்டு. இவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக கண்ணை மூடுவோம் என எமனிடத்தில் பெண்ணுக்கு வரன் கேட்பார்கள். பருவத்தே பயிர் செய், என்பது போல எந்த வயதில் திருமணம் நடக்க வேண்டுமோ அந்த வயதில் திருமணம் நடைபெறுவதுதான் சிறப்பாகும். சிலருக்கு திருமணம் நடைபெற ஏன் இந்த தாமதநிலை. பற்றி ஆராயும்போது, 

கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரமே காரணமாகிறது. திருமண ஸ்தானத்திற்குரிய 7 ஆம் அதிபதி மறைவு ஸ்தானமாகிய 6,8,12 இல் மறைந்து அமைந்திருந்தாலும், ஆண்களுக்கு களத்திர காரகனான  சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் மறைவு ஸ்தானங்களாகிய 6,8,12 இல் இருந்தாலும் திருமணம் தாமதமடையக்கூடிய நிலை உண்டாகும். 

நவக்கிரகங்களில் மந்த காரகன் என்று கூறக்கூடிய சனி பகவானின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் எந்தவொரு சுபகாரியம் நடைபெறுவதற்கும் தாமத நிலை உண்டாகும். நவகிரகங்களில் சனியின் பார்வையானது சற்று கெடுதலை உண்டாக்கக்கூடியது. சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆம் வீடுகளை பார்வை செய்வார். இப்படி பார்வை செய்யும் சனி பகவானின் பார்வை 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் வீட்டின் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ உண்டாகுமானால் திருமண வாழ்க்கை ஏற்பட தாமத நிலை உண்டாகும். சிறப்பான மணவாழ்க்கைக்கு 7 ஆம் வீடு மட்டுமின்றி தாமதமின்றி திருமண அமைய குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீடும் பலமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். சனியின் கொடிய பார்வை இந்த 2 ஆம் வீட்டிற்கும் 2 ஆம் வீட்டின் அதிபதிக்கும் இருக்குமேயானாலும் மணவாழ்க்கை என்பது தாமதமாகத்தான் அமையும். 

இது மட்டுமின்றி குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டிலோ, களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டிலோ சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும் 7 ஆம் வீட்டதிபதி சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கையானது தாமதமாகவே உண்டாகும். 2,7 இல் சனி,இராகு,கேது அமைய பெற்று அதன் திசை அல்லது புத்தி திருமண வயதில் நடைபெற்றால் திருமணத்திற்கான முயற்சி எவ்வளவு எடுத்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும் அப்படி நடைபெற்றாலும் ஒற்றுமை குறைவு, பிரிவு ஏற்படுகிறது,  சனி எந்தவொரு காரியத்திலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றாலும் லக்னாதிபதியாகவோ, 7 ஆம் அதிபதியாகவே ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்களை உண்டாக்குவதில்லை. 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading
please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Post a Comment