Friday, April 3, 2015

திருமண தோஷங்கள்- செவ்வாய் தோஷம்

 

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 


" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்



திருமண தோஷங்கள்


      இம் மண்ணில் பிறப்பவர்கள் அனைவரும் எப்பொழுதும், எந்த நேரத்திலும் சந்தோஷமாக வாழ்ந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. பிறந்த இடத்தில் சுகபோகமாக வாழ்பவர்கள் புகுந்த இடத்தில் கஷ்டப்படுவார்கள் என்றும், பிறந்த இடத்தில் துன்பங்களை எதிர் கொள்கிறவர்கள் புகுந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்றும் பொதுவான கருத்து ஒன்று உண்டு. ஆனால் சிலர் எப்பொழுதுமே துன்பத்தை மட்டுமே எதிர் கொண்டு வாழ்வில் சோதனைகளை மட்டுமே சந்திப்பார்கள். ஏணிந்த நிலை என்பதனை அவரவர்களின் சாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் அதற்கு தெளிவான விடை கிடைக்கும்.

      திருமண வாழ்வு ரீதியாக ஏற்படும் பல்வேறு விதமான தோஷங்கள் பற்றியும்,பல்வேறு விதமான கிரக பாதிப்பு பற்றியும் இங்கு பார்ப்போம்


செவ்வாய் தோஷம்

செவ்வாய்க்கு குருதியோன் என்ற பெயர் உள்ளது. ரத்தம் எனும் குருதிக்கு அதிபதி சந்திரன் என்றாலும் அதை கட்டுப்படுத்துபவர் செவ்வாயாவார். பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கு செவ்வாய் தான் காரணகர்த்தாவாகிறார். இதன் அடிப்படையில் தான் உடல் உறவு இச்சையும், புத்திர பாக்கியம் அமைவதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு உண்டாகிறது. ஆணின் குணாதிசயங்களை கூட செவ்வாயால் நிர்ணயக்கலம் செய்யப்படுகிறது. ரத்த ஓட்டம் மற்றும் குணாதிசயங்களை செவ்வாய் நிர்ணயம் செய்வதால் உடல் உறவு விஷயத்துக்கும் செவ்வாயின் பங்கு அதிகம் பயன்படுகிறது.
    
செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவருக்கு, தோஷம் உள்ளவரை மணம் முடித்து வைத்தால் தோஷம் உண்டாகி செவ்வாயின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் செவ்வாய் தோஷம் இல்லாதவர் பாதிக்கப்படுவார். பலர் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரமே இல்லை என்று கூறி விடுகின்றனர். இக்கருத்துக்கள் தவறானதாகும். அதிலும் செவ்வாய் தோஷத்துடன் மரணத்தை இணைத்துக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை என்றாலும்,செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் (ஜாதகப்படி) ரத்தத்தை பரிசோதித்ததில்  ஸி.பி ழிமீரீணீtவீஸ்மீ என்ற வகை ரத்தம் அநேகருக்கு இருந்ததாக தெரிகிறது. இந்த ரத்த வகை அனைவருக்கும் இருக்காது. இந்த வகை ரத்தம், மற்ற வகை ரத்தமும் சேரும் போது உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படலாம். எனவே தான் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் -ஏற்பட வேண்டும் என்கின்றனர்.

      திருமண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஸ்தானங்களான 2,4,7,8,12 ல் செவ்வாய் அமைவது செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெறுமேயானால், அவருக்கு      அதே மாதிரியான ஜாதக அமையப் பெற்றவரை திருமணம் செய்து வைப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும்,  கட்டில் சுகவாழ்வு திருப்தியானதாகவும் இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத நபரை திருமணம் செய்து வைத்தால் உடலுறவில் திருப்தியற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். அது மட்டுமின்றி செவ்வாயின் திசை அல்லது புக்தி காலங்களில் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு, எதிர்பாராத விபத்து, பிரிவு, வாழ்க்கைத் துணையையே இழக்கக்கூடிய அவலநிலை உண்டாகும்.
      செவ்வாய் 7,8 ல் அமையப் பெறுவது கடுமையான தோஷமாகும். 2,4,12 ல் இருந்தால் தோஷத்தின் தன்மை சற்று குறையும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சிறிது தோஷம் இருந்து அவருக்கு செவ்வாய் திசையே வராது என்றால் திருமணம் செய்யலாம். 2,4,12 ல் செவ்வாய் அமைந்து பரிவர்த்தனை அல்லது குரு பார்வை இருந்து  செவ்வாய் திசை வராமல் இருந்தாலும் பார்க்கலாம். செவ்வாய், மேஷம், விருச்சிகம், கடகம், மகரத்தில் அமைந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்ற கருத்து உண்டு.
      செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் நமக்கு திருமணமே ஆகாதோ என பயப்பட தேவையே இல்லை. ஏனென்றால் நாட்டில் 40% பேருக்கு செவ்வாய் தோஷம்  இருக்கத்தான் செய்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்துக்குரிய ஜாதகங்களை தேர்வு செய்து திருமணம் செய்வதும், உரிய பரிகாரமாக முருக வழிபாடு  மேற்கொள்வதும் நற்பலனை உண்டாக்கும். 

Contact

For your consultation

Please send  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of 
MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &
  5 questions  to ( e-mail ) me for  horoscope reading  By email or By Phone 


please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: