காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
தினமும்
காலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
திருமண தோஷங்கள்
மாங்கல்ய தோஷம்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதுதான் நம் இந்திய கலாச்சாரத்தின் பண்பாடாகும் மேலை நாடுகளிலும் நம்மைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்கக்கூடிய ஒரே விஷயம் நம்முடைய தாம்பத்திய ஒற்றுமைதான். எப்படித்தான் ஒருவர் ஒருத்தியோடு முப்பது, நாற்பது ஆண்டு காலங்கள் வாழ்கிறார்களோ என ஆச்சரியப்படுகிறார்கள். இதில் முக்கியமாக இந்தியப் பெண்கள் சுமங்கலியாகவே வாழ ஆசைப்படுகிறார்கள். எத்தனையோ பெண்கள் நான் பூவோடும், பொட்டோடும் சுமங்கலியாய் வாழ வேண்டும் என தெய்வ வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்கிறார்கள். அதுவும் நம் நாட்டில் 60 வயது, என்பது வயது வரை என திருப்தியோடு வாழும் தம்பதியினருக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இளம் தம்பதிகள் அவர்களிடம் சென்று வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் பெறுவதை வழக்கமாக கொள்வார்கள். அதையும் மீறி இளம் வயதிலேயே விதவை கோலம் ஏற்படக்கூடிய அவல நிலைகளும் பெண்களுக்கு உண்டாகிறது. அந்த காலத்தில் கணவன் இறந்தால் உடனே உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இப்பொழுதுள்ள விஞ்ஞான யுகத்தில் விதவைப் பெண்களும் வாழ முடியும் என தைரியத்தைக் கொடுத்துள்ளது. விதவை என்ற சொல்லுக்கு பொட்டு வைக்க முடியாது என்பதால் கைம்பெண் என மாற்றி இரண்டு பொட்டுக்கள் வைத்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்திய பெண்கள் சுமங்கலியாக வாழ்வதைத்தான் விரும்புகிறார். பூவும், பொட்டும், மஞ்சள் குங்குமமும் நிலைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்குத்தான் திருமண விழாக்களிலும், மற்ற சுப காரியங்களிலும் முன்னுரிமை வழங்கப் படுகிறது
.
இப்படி சுமங்கலியாக வாழ ஒவ்வொரு பெண்ணின் ஜாதக ரீதியாகவும் 8 ஆம் பாவமானது பலமாக அமைய வேண்டும். பெண்களுக்கு 8 ஆம் பாவம் மாங்கல்ய ஸ்தானமாகும். 7 ஆம் இடம் களத்திர ஸ்தானம் என்றாலும் 8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால், 8 ஆம் வீட்டாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8 ஆம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தாலும், களத்திர ஸ்தானமான 7 ஆம் பாவமும் பலமிழக்காமல் இருந்தாலும் கணவனுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், நிலையான மாங்கல்ய பாக்கியம், தாம்பத்திய வாழ்வில் அன்யோன்யம் உண்டாகும்.
8 ஆம் வீட்டை குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் பார்வை செய்வது உத்தமம். அதுவே சுபர் பார்வை 8 ஆம் வீட்டிற்கு இல்லாமல் இருந்து 8ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்றாலும், 8 ஆம் அதிபதி சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது சேர்க்கை பெற்றாலும், 8 ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் வக்ரம் பெற்றாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகி வரக்கூடிய கணவருக்கு கண்டம் ஏற்படுகிறது. 8 ஆம் அதிபதி பலம் இழந்து அதாவது நீசம் பெற்று மற்ற கிரகங்களால் பங்கம் பெற்றிருந்தாலும் முதலில் அமையும் வாழ்க்கையானது நிலைப்பதில்லை.
7 ஆம் வீட்டதிபதி நீசம் பெற்றாலும் சனி, சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் கணவருக்கு கண்டம் உண்டாகிறது. அது மட்டுமின்றி 7 ஆம் அதிபதி நீசபங்கம் ஏற்பட்டிருந்தாலும் முதலில் அமையக்கூடிய வாழ்வில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகு தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். 7 ஆம் வீட்டிற்கும் 8 ஆம் வீட்டிற்கும் இரு புறமும் பாவிகள் அமைவதும், 8 ஆம் அதிபதி இருக்கும் வீட்டிற்கும் இருபுறமும் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும்.
மாங்கல்ய ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கு சமசப்தம ஸ்தானமான 2 இல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல பெண்களுக்கு களத்திர காரகன் என வர்ணிக்கபடக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியவர்கள் சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். 8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் அதனை சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது.
பொதுவாக 7,8 ஆம் பாவங்கள் களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் என்பதால், பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆம் பாவங்கள் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து தான் திருமணம் செய்வார்கள். அப்பொழுதுதான் பெண்கள் நீண்ட காலம் சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியத்தைப் பெறுவார்கள்.
Contact
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment