Monday, July 27, 2015

ஜனன நேரத்தை ஜோதிடர் நிர்ணயிக்கலாமா?

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

ஜனன நேரத்தை ஜோதிடர் நிர்ணயிக்கலாமா?
                                                    
     ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெண்களுக்கு மறு பிறவியாகும். மழை பெய்வதும் குழந்தை பிறப்பதும் அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். விஞ்ஞானம் வளராத அந்த காலத்தில் கிராமத்து மருத்துவச்சிகள் வீட்டிற்கு வந்து பிரசவம் பார்த்து எந்த வித பிரச்சினையும் இன்றி தாயையும் சேயையும் நல்ல படியாக பிரித்தெடுப்பார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் பிரசவ நேரம் குறிக்கும் ஜோதிடர்கள், பெற்றோர்களே உஷார் என்ற தலைப்பில் செய்தியன்றை படித்தேன். இதற்கு விளக்கமளிக்கவே இக்கட்டுரையை எழுதுகிறேன். விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடம் என்ற கலை வளர்ந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
     நெல் அறுத்து, நாத்து நட்டு, வீட்டிற்கு வந்து நெல்லை உரலில் இட்டு இடித்து தவிடையும் அரிசியையும் தனியாக பிரித்து அரிசி சோறு சாப்பிடுவது என்பது அக்காலங்களில் விஷேச வழக்கமான ஒன்று. தினமும் கேழ்வரகு கூழும்  கம்பங்களியும் சாப்பிட்டாலும் உழைப்பு என்ற ஒன்று கடினமாக இருந்தது. இதனால் பெண்களுக்கு பிரசவமும் எளிதானதாக இருந்தது.
     காலங்கள் மாற மாற எல்லாவற்றிற்கும் விஞ்ஞான ரீதியாக முன்னேற்றத்தை எட்டிவிட்ட நிலையில் எல்லா நவீன பொருட்களும் வந்து விட்டதால் உழைப்பின் ஆற்றலும் குறைந்து விட்டது.
     கர்ப்பிணி பெண்களுக்கு மாதா  மாதம் செக்கப் ஸ்கேன் என்ற எல்லா வசதிகளும் வந்து விட்ட போதும் பெண் முதலில் தனக்கு மாத விடாய் நின்ற காலத்தை கூறினால் தான் மருத்துவர்கள் அதிலிருந்து 9 மாதம் 10 நாட்கள் கூட்டி குழந்தை பிறக்கும் நாளை குறிக்கிறார்கள். அந்தப் பெண் சரியாக தான் கூறியிருக்கிறாளா என்பது மருத்துவருக்கு தெரியாது. இப்பொழுதெல்லாம் 100க்கு 80% ஆபரேஷன் கேஸ் தான் என்றால் அதை நம்பி தான் ஆக வேண்டும்.
     மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு பிரசவவலி ஏற்படாவிட்டால் உடனே பெரிய உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று பயம் வேறு. வலி எடுத்து தானாக பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஜோதிடர்கள் தேவையில்லை.  ஆனால் மருத்துவர்கள் குறித்து கொடுக்கும் தேதிகளுக்கு மட்டுமே பிறக்கும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஜோதிடர்களை நாடி செல்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. குழந்தையே பிறக்காது என்று நினைப்பவர்கள் கூட செலவு செய்தால் டெஸ்ட் டியூப் பேபி முறையில் 2 லட்சம் 3 லட்சம் வரை செலவு செய்து குழந்தை பெற்று கொள்ளவில்லையா? நகர்ப்பு-றங்களில் நல்ல அரசு மருத்துவமனைகள் இருப்பதால் எவ்வளவு சீரியஸ் கேஸாக இருந்தாலும் உரிய முறையில் செலவின்றி தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்கள்.
     ஆனால் கிராமப்புறங்களில் நல்ல அரசு மருத்துவமனைகள் இல்லாததால் வயலில் கூலி வேலை செய்பவர் கூட தன் மனைவியின் பிரசவ செலவிற்காக தனியார் மருத்துவமனையில் நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவழிக்கிறார் தெரியுமா?
     ஜோதிடர்கள் வசூல் செய்கிறார்கள் என்று கூறியது போல் மருத்துவர்கள் வசூல் வேட்டையே நடத்துகிறார்கள் என்று கூறி விட முடியுமா-?
     நகர்ப்புற தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்வோர் பெண்ணின் பிரசவ காலத்திற்காக அட்மிட் செய்யும் போது How much I have pay  என அழகான ஆங்கிலத்தில் கேட்டு பில்லை கவுண்டரில் கட்டி விட்டு பின்னர் பிறக்கும் குழந்தையின் முகத்தை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.
     ஆனால் கிராமப்புறங்களில் காதில் மூக்கில் இருப்பதையெல்லாம் கழற்றி கடையில் வைத்து பணம் திரட்டி, ஐயோ எம் புள்ளைக்கு ஆபரேஷனாமே காளியாத்தா, மாரியாத்தா தாயையும் சேயையும் தனித்தனியா நல்ல படி பிரித்து கொடு என கடவுளிடம் மன்றாடி விட்டு பணத்தையும் கட்டி பின்னர் குழந்தையையும் தாயையும் பார்த்து பூரித்து போகிறார்கள்.
     நான் மறுபடியும் சொல்கிறேன். மழை வருவதும், குழந்தை பிறப்பதும் கடவுளின் கையில் தான், அதை நிர்ணயிக்க யாருக்கும் உரிமையில்லை என்றாலும் குறித்து கொடுத்த நாளில் எந்த நேரத்தில், எந்த ஸ்தானம் வரும். எந்த லக்னத்தில் பிறந்தால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம், பெற்றோர்களுக்கு உண்டாகக் கூடிய நன்மை, தீமை, குழந்தையின் கல்வி, எதிர்காலம், மண வாழ்க்கை போன்ற யாவும் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஜோதிடரை தேடி வந்து குழந்தை எந்த நேரத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என பார்த்து சொல்ல சொல்கிறார்கள்.
     பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்றாலும் ஜோதிடம் என்ற கால கண்ணாடியின் மூலம் வரக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தையின் பிறப்பை ஜோதிடர் நிர்ணயிப்பதும் ஆண்டவனின் திருவிளையாடலாக கூட இருக்கலாம் அல்லவா.
     ஜோதிடமே பொய் என்று கூறிக்கொண்டு நவரத்தினங்களை கலர் கலராக மாட்டிக் கொண்டு இருப்பவர்களையும், ராசியான கலர்களை ஆடையாக உபயோகிப்பவர்களையும் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.
     அறிஞர் ஆம்ஸ்டர்டம் எதிர்காலத்தில் இன்னன்ன நடக்கும் என்று முன்கூட்டியே யூகித்து உரைத்த விஷயங்களை தான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவர் எப்படி அனுமானித்தார் என்ற விஞ்ஞானிகளே வியந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் யார் வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம். எதிர் காலத்தை பற்றி கணிக்கின்ற ஆற்றல் ஜோதிடத்திற்கு மட்டுமே உண்டு. பூலோகத்தை பிரதிபலிக்கும் வானியல் விஞ்ஞானம் தான் இந்த ஜோதிடம்.
     ஜோதிட கலையானது கடல் போன்றது. இதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது எல்லாராலும் இயலாத காரியம். இதில் தொன்று தொட்டு வாழையடி வாழையாக வரும் வம்ச வழியினரால் மட்டுமே முடியும். கற்றது கையளவு என்றால் கல்லாதது கடலளவு. ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் எல்லா ராசிகளும் நல்ல  ராசிகள் தான். 27 நட்சத்திரங்களில் எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் தான். ஒரு பெண்ணிற்கு பிரசவ நாளை டாக்டர்கள் குறித்து கொடுக்கும் போது தான் ஜோதிடர் அந்த நாளில் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என கணித்து கூறுகிறார்கள்.
     குறிப்பாக ஒரு குழந்தையின் லக்னமும் 8ஆம் வீடும் பலமாக இருந்தால் அக்குழந்தைக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்க 4ஆம் வீடு பலமாக இருக்க வேண்டும்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய  7ம் வீடு வலுவுடன் அமைய வேண்டும். இவற்றையெல்லாம் சிந்தித்து எல்லாவற்றையும் சீர்படுத்த முடியா விட்டாலும் அந்த நாளில் எந்த நேரத்தில் இருக்கக்கூடிய லக்னத்தில் குழந்தை பிறந்தால் பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை ஆராய்கிறார்கள்.
     ஒரு சில நேரங்களில் மருத்துவர்கள் குறித்து கொடுக்கும் நாட்களில் ஒரே வீட்டில் 4,5 கிரகங்கள் சேர்க்கைப் பெற்றிருக்கும் பொதுவாக இப்படி கூட்டு கிரக சேர்க்கையுடன் குழந்தை பிறப்பது நல்லதல்ல என்பது மக்களின் கருத்து. ஆனால் அப்படி கூட்டு கிரகம் அமைந்தால் நல்லது எது, கெட்டது எது என பிரித்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் 4ஆம் வீட்டில் பல கிரக சேர்க்கைகள் இருந்தால் வீடு மனை அசையும் அசையா சொத்துக்கள் யாவும் அதிகமாக இருக்கும்.
     ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிலும் பல கிரக சேர்க்கை இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் உத்தியோகம் செய்யக்கூடிய யோகம் அமையும்.
     ஆனால் 7ஆம் வீட்டில் மட்டும் 4,5 கூட்டு கிரக சேர்க்கை அமைவது மண வாழ்க்கையையே கெடுத்து விடும். எனவே தான் ஜோதிடர்கள் பொதுவான லக்னங்கள் குறிப்பது மட்டுமின்றி இப்படி 4,5 கிரக சேர்க்கைகள் வரும் போதும் குழந்தை குறிப்பிட்ட நாளில் காலை பிறப்பது நல்லதா மாலையில் பிறப்பது நல்லதா, இரவில் பிறப்பது நல்லதா என ஆராய்ந்து முடிவெடுத்து மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் எல்லா மக்களுக்கு ஜோதிடம் புரியுமா அறியுமா என்பதை விட எங்களை நாடி வரும் ஜோதிட அபிமானிகளுக்கு மட்டுமே நேரத்தை கணித்து கொடுக்கிறோம் என்பது தான் உண்மை.Intha Naal 07/27/15

Thursday, July 23, 2015

சந்திர மங்கள யோகம்


   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


சந்திர மங்கள யோகம்

ஒரு ஜாதகத்தில் சந்திரனும், செவ்வாயும் கூடியிருந்தாலும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டாலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். உதாரணத்திற்கு ரிஷபத்தில் சந்திரன், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தாலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். சந்திரன் கடகத்தில் இருக்க செவ்வாய் மகரத்தில் இருந்தாலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். முதல் உதாரணத்தில் சந்திரன் உச்சம், செவ்வாய் ஆட்சி இரண்டாவது உதாரணத்தில் செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி மற்றொரு வகையிலும் சந்திர மங்கள யோகம் உண்டாகும். சந்திரனும், செவ்வாயும் கேந்திரத்தில் இருந்தாலும்  இந்த யோகம் உண்டாகும். ஆனால் முதல் இரண்டு அமைப்புக்களை விட சற்றே பலம் குறைந்ததாகும்.

இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நல்ல உடல்பொலிவும், பரந்த மார்பும், விரிந்த நெற்றியும் சராசரி உயரமும் அமையும். மதுபானங்கள் வியாபாரம் செய்தல், பெரிய  பார் வைத்து நடத்துதல் ஆகியவற்றாலும், உற்பத்தி வியாபாரம் மூலமாகவும் இரசாயனத்துறை வாயிலாகவும் வயலுக்குத் தேவையான உரம் சம்பந்தப்பட்ட துறை மூலமாகவும் பொருள் திரட்டுவார்கள்.

இவர்கள் பிறந்த லக்னம் ஸ்திர லக்னமாக இல்லாமல், சர லக்னமாகவோ, உப லக்னமாகவோ இருக்குமானால், கடல் கடந்து நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வார்கள். சந்திரன் திரவ பதார்த்தத்திற்கும், பயண ஏற்பாடுகள் செய்யும் ஸ்தாபனப் பிரதிநிதிகளுக்கும் காரகத்துவம் உடையவர் ஆவார். செவ்வாய் ரசாயன லெபாரட்டரிகளுக்கும் அறுவை சிகிச்சை தளவாடங்களுக்கும் காரகத்துவம் உடையவர் ஆவார். ஆதலால் இந்தத் துறைகளில் இவர்கள் அறிவாற்றல் பெற்று, பொருள் திரட்ட வாய்ப்புண்டு.

மேலும் சில அனுபவப் பூர்வமான சாத்தியக் கூறுகளையும் தெரிந்து கொள்வது அவசியமாகும். பலமான சந்திரமங்கள யோகம் உடையவர்கள் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்கு அதிபதிகளாக வாய்ப்பு உண்டு அல்லது நிர்வாகம் செலுத்தக் கூடிய தகுதியைப் பெறுவார்கள் பெரிய தோட்டங்களுக்கு அதிபதியாகி எல்லா விதமான கனி வகைகளையும் உற்பத்தி செய்யக் கூடிய சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள். கப்பலில் மாலுமியாகவோ அல்லது நிர்வாகியாகவோ அமைந்து, அடிக்கடி கடற் பயணம் செய்யும் தகுதியும் உண்டாகும்.

நீச்சல் குளம் அமைத்து, அதில் அழகான காட்சி அம்சங்களையும் சுற்றுப் புறத்தில் பொருத்தி, அதன் மூலமாகப் பலரையும் அங்கே வரவழைத்து, அவ்வகையில் பொருள் திரட்டும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த யோகமுடைய ஆண்களுக்கு, அழகான பெண்களின் மூலம் அனுகூலம் கிடைப்பது மட்டுமில்லாமல், செல்வத்தையும் அடைவதற்குரிய சந்தர்ப்பமும்  ஏற்படும். மேலும் இந்த யோகத்தின் மூலம் கலையும் விஞ்ஞானமும் கலந்த நூதனமான பொருட்களை உற்பத்தி செய்து, அவை பலராலும் பாராட்டப் படக் கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொள்வார்கள், மண் வளம் இவர்களுக்கு அமையும் மண்ணைப் பெண்ணாக்கும் கலையில் வல்லவராக இவர்கள் விளங்குவார்கள்.

ரோஸ் மில்க் போன்ற பால் வியாபாரம் விசேடமாகச் செய்து பொருள் திரட்டவும் இவர்களுக்கு வாய்ப்பு உண்டாகும். சிவப்பு நீராகிய இரத்தம் சேமித்து வைக்கப் படுகிற இரத்த வங்கியில் தொடர்புடையவர்களாகி அதன் மூலம் பொருள் திரட்டும் வாய்ப்பையும் பெறுவார்கள். மேலும் இரத்தப் பரிசோதனை செய்வதில் இவர்களுக்கு நிகராக யாராலும் இருக்க முடியாது. இவர்களுடைய உடலிலும் நல்ல இரத்த ஒட்டம் இருக்கும். இவர்களால் பெரிய கட்டிடங்களைக் கட்ட முடியும். அந்தக் கட்டிடத்தில் கற்பனை அம்சங்கள் நிறைந்திருக்கும்.please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA
Intha Naal 07/23/15

Wednesday, July 22, 2015

சுக்கிரனும் மாளவிகா யோகமும்   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் ஒருவர் வளமான வாழ்க்கை வாழ்வதை பார்த்தால் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் என கூறுவதை கேட்டிருக்கிறோம். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது சுக்கிரன் அமையும் இடத்தை பொருத்தே அமையும். சுக்கிர திசை வந்தால் சூப்பராகி விடுவோம் என எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலருண்டு. சுக்கிரன் அசுர குரு என்றாலும் சுப கிரகம் என்பதால் யோகத்தை அள்ளி தருவார். நாம் வாரிக் கொள்வோம் என எண்ணக் கூடாது. 

சுக்கிரன் வலுப் பெற்று அமைந்தால் மட்டுமே நற்பலனை தருவார். சுக்கிரன் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால் அஸ்தங்கம் அடைந்து விட்டால் வாழ்க்கை நிலையும் அஸ்தங்கம் தான். ரிஷபம் துலாத்தில் ஆட்சியும் மீனத்தில் உச்சமும் கன்னியில் நீசமும் பெறும் சுக்கிரன் இரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர் என்பதால் ஒரு வகையில் நற்பலனை கொடுத்தாலும் மற்றொரு வகையில் கெடுதலையும் செய்து விடுவார்.

     சுக்கிர பகவான் தன் நட்பு வீடுகளாகிய மிதுனம், கன்னி (புதனின் வீடு), மகரம் கும்பம் (சனியின் வீடு) போன்றவற்றில் அமைகின்ற போதும் புதன், சனியுடன் சேர்க்கை பெறும் போதும் அதிகமான நற்பலனை உண்டாக்குவார். மற்ற கிரகங்களின் சேர்க்கை-யுடனிருந்தால் நற்பலனை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தை ஏற்படுத்துகிறார். 

     உதாரணமாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் வீடான (துலாத்தில்) தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்றாலும், ரிஷப லக்னத்திற்கு தன் வீடான ரிஷபத்தில் ஆட்சி பெறும் போதும், மிதுனத்திற்கு 10ஆம் வீடான ஜீவன ஸ்தானத்தில் உச்சம் பெறுகின்ற போதும், கடகத்திற்கு 4ஆம் வீடான துலாத்தில் ஆட்சி பெற்றும், சிம்மத்திற்கு 10ஆம் வீடான மேஷத்தில் ஆட்சி பெற்றும், கன்னிக்கு 7ஆம் வீடான மீனத்தில் உச்சம் பெற்றும், துலாத்திற்கு தன் சொந்த லக்னத்திலேயே ஆட்சி பெற்றும், விருச்சிகத்திற்கு 7லும் தனுசுக்கு 4லும் மகரத்திற்கு 10லும் கும்பத்திற்கு 4லும் மீனத்திற்கு லக்னத்திலும் ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றால் மாளவியாயோகம் உண்டாகி அனுகூலமான நற்பலனை ஏற்படுத்துகிறது. எனினும்

     கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது கேந்திராதிபதி தோஷமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று அனுகூலமற்ற பலன்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. களத்திர காரகனான சுக்கிரன் பாவிகள் சேர்க்கையுடன், சுபர் பார்வை இன்றி இருந்தாலோ நற்பலனை வழங்க இடையூறு உண்டாகும். சுக்கிரன் பலமிழந்து சனி ராகு (அ) கேது சேர்க்கையுடனிருந்தால் பெண்களால் அவப்பெயரை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சூரியனுடனும் இணைந்து மிகவும் நெருக்கத்தில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் அவனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். இல்வாழ்வில் இன்பமே தொலைந்து விடும்.
                                                          
please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Intha Naal 07/22/15

Monday, July 20, 2015

அழகிய குழந்தைகளுக்கான அமைப்பு

           
   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்   அழகிய குழந்தைகளுக்கான அமைப்பு
     
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம் ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும். 5ஆம் வீடானது புத்திரன், புத்திரி, பூர்வீகம் உயர்கல்வி போன்றவற்றை மிகத் தெளிவாக அறிய உதவும் பாவமாகும். போட்டி பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் நமது பூர்வீகம் பலமாக இருந்தால் தான் இந்த எந்திர உலகில் எளிதில் ஜீவிக்க முடியும்.

     அதாவது மானிடனாய் பிறப்பதில் பூர்வ புண்ணிய பலத்துடன் பிறப்பது மிகவும் நல்லது. நம் மூதாதையர், முன்னோர் நமக்கென சொத்து, சுகங்கள் சேர்த்து வைப்பது மட்டுமின்றி சில புண்ணியங்களை சேர்த்து வைத்திருந்தால் தான் எந்தவித கெடுதியும் இன்றி சுக போக வாழ்க்கையினை இவ்வுலகில் வாழ முடியும்.

     சொத்துகள் ஒரு புறம் இருந்தாலும் நம்முன்னோர்கள் ஏதாவது கெடுதலை செய்து விட்டால் அது நம்மையும் நம் சந்ததியினரையும் அதிகமாக பாதிக்கும். ஜாதகம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணியம் பாதிக்கபட்டிருந்தால் அவர்களது வாழ்வு சங்கடங்கள் நிறைந்ததாகிவிடும்.

     ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாகதோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை, திருமணத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அது போல ஒருவரது தந்தை, பாட்டன் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத் தடை, திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

     இது போன்ற கெடுதிகள்  எல்லாம் விளங்கும் பாவமாக விளங்குவது 5ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5ஆம் அதிபதி சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது. அதாவது பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. அது மட்டுமின்றி பூர்வீக வழியில் அதாவது உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகிறது. 5ஆம் வீடு பூர்வீக ஸ்தானம் மட்டுமின்றி புத்திர ஸ்தானமும் என்பதால் தகுந்த காலத்தில் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாத அவல நிலை உண்டாகிறது.

     பொதுவாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை ஈன்றெடுக்கும் அமைப்பு, பூர்வீகத்தால் ஏற்றம், உயர்வு உண்டாகும். குறிப்பாக 5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலை முறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும். அது மட்டுமின்றி  5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


Intha Naal 07/20/15

w

Thursday, July 9, 2015

பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும்


மாபெரும் வெற்றி 12 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 12 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.
2011 ஜீலையில் தொடங்கி தற்போது 850 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 12 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.


                                                                                                                                     அன்புடன்
முருகுபாலமுருகன்

                             வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஜீலை 2015 ஓம்சரவணபவா இதழுடன்

முருகுபாலமுருகன் 

எழுதிய

பொருளாதார உயர்வு தரும் 

கல்வி, தொழில், வேலை எது ?12, இலக்கினகாரர்களுக்கு ஜோதிட வழிகாட்டி96 பக்கம் இலவச இனைப்பு


   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 

" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 
     ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும் நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
     மாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி  பேசுவது பிறரை கேலி கிண்டல் செய்வது பேசுவது புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களை கண்டாலே யாருக்கு பிடிக்காது. இவரிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். 
     சிலர் வாயை திறந்தாலே கூவம் மணக்கும், பல வாசனைகள் விதவிமாக வீசும். பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.
     நரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கின்றதென்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.
     வாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும் 2ஆம் வீட்டின் அதிபதிக்கும் புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்குவது ஆற்றல், கல்வி போதிக்கும் அமைப்பு உண்டாகும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.
     அதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும்,
     குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும்,
     புதன் பகவான் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. தன்னுடைய வள வளப் பேச்சினாலேயே பல அரிய வாய்ப்புகளை இழப்பார். எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தாலே அவனிடம் பேசாதே அவன் நாக்கில் சனி அவன் பேசினாலே கூவம் எனக் கூறி ஒதுங்கி கொள்வார்கள்.


please contact my postal adress
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA