Rasi palangal

Tuesday, August 4, 2015

எதிர்பாராமல் வரும் ஏற்றம்

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "



                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

எதிர்பாராமல் வரும் ஏற்றம்

    பிறவியிலேயே ஒருவன் பணக்காரனாக இருந்தால் அவனுக்கு மூதாதையர் சேர்த்து வைத்த சொத்து இருக்கும். பணம் பணத்தோடு சேரும் என்பது போல அவன் அந்த சொத்தை வைத்து படித்து முன்னேறி மென்மேலும் பணக்காரனாவான். ஆனால் ஏழையாக வாழும் ஒருவன் எதிர்பாராத வகையில் திடீரென (ஸ்பெகுலேஷன் மூலம்) பணக்காரனாகி விடுவான். லாட்டரி, ரேஸ், ஷேர் மூலமும் சிலருக்கு புதையல் போன்றவற்றின் மூலமும் கூட பணக்காராகக் கூடிய யோகம் உண்டாகும். இந்த யோகம் பூர்வ புண்ணியத்தால் ஏற்படுவது.
     பூர்வ புண்ணிய பலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே இப்படி ஸ்பெகுலேஷன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியும். உதாரணத்திற்கு ஒருவன் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானாம். இதை நம் கடவுள்களாகிய பரமசிவனும் பார்வதியும் பார்த்து கொண்டிருந்தனராம். அவனுக்காக இரக்கப்பட்ட பார்வதி, பெண்ணல்லவா இரக்க குணம் இருக்கத் தானே செய்யும். பரம சிவனை பார்த்து உங்களின் திருவிளையாடலுக்கு அளவே இல்லையா? அவனை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள். அவனுக்கு கருணை காட்டக் கூடாதா? என கேட்டாளாம். உடனே இறைவன் அது அவனின் தலைவிதி. முன்னோர் செய்த விதியின் பயன். அவனுக்கு நானே கொடுத்தாலும் அவனுக்கு அது போய் சேராது என்றாராம். அதையும் நான் பார்த்து விடுகிறேன் என கூறிய பார்வதி ஒரு பை நிறைய பொற்காசுகளை அவன் பிச்சை எடுத்துக்கொண்டு வரும் வழியில் போட்டாளாம். இப்பொழுது பாருங்கள் அது அவன் கைக்கு கிடைத்ததும் அவன் பணக்காரனாகி விடுவான் என்றாளாம்.
     நகைத்த சிவன் அங்கே பார் அவன் செய்யும் செயலை என்றாராம். அது வரை பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த பிச்சைக்காரன் வழியில் ஒரு குருடனை பார்த்தானாம். உடனே அவன் நமக்கு ஐயோ பாவம் எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவது கஷ்டமாக இருக்கிறதே இரு கண்ணும் தெரியாத இவன் என்ன செய்வான் என யோசித்து நமக்கு கண் இல்லை என்றால் நம்மால் கொஞ்ச தூரம் நடக்க முடியுமா என சோதித்துப் பார்க்கலாம் என எண்ணி கண்களை இறுக மூடிக்கொண்டு அம்மா தாயே, என்ற குரலோசையுடன் அந்த பொற்காசுகளை தாண்டிச் சென்றானாம். அப்பொழுது தான் அவனின் கர்ம வினை என்ன என்பது பார்வதிக்கும் புரிந்ததாம்.
     ஒருவனின் ஜெனன ஜாதகத்தில் தன ஸ்தானம் எனப்படும் 2ஆம் இடமும், பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9ஆம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடமும் பலம் பெற்று அமைந்திருந்தால் ஸ்பெகுலேஷன் மூலம் பெரும் செல்வ சேர்க்கையானது ஏற்படுகிறது.
     2,5,9க்கு அதிபதிகள் பலம் பெற்று கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 போன்றவற்றில் அமைந்தாலும் 1,5,9 போன்ற திரி கோண ஸ்தானங்களில் அமைந்தாலும் பொருள் வரவானது ஸ்பெகுலேஷன் மூலம் உண்டாகும்.
     2,5 மற்றும் 2,9,2,11க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஸ்பெகுலேஷன்  மூலம் பண வரவானது உண்டாகும்.
     மேற்கூறிய பாவாதிபதிகள் பரிவர்த்தனை அடைந்தால் மட்டும் போதாது. பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் திசா புக்தி வரும் காலங்களில் தான் பலமான யோகம் ஸ்பெகுலேஷன் மூலம் உண்டாகிறது.
     வாழுகிற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி, பெற்றவர்கள் பெற்ற கடன் பிள்ளைகளை, சேருமடி, சேர்ந்து வைத்த புண்ணியம் தான் சந்ததியினை காக்குமடி என்ற பாடல் வரிகளுக்கேற்ற நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து உபத்திரவம் கொடுக்காமல் வாழ்ந்து நம் சந்ததியினருக்கு நற்பலன்களை சேர்த்து வைப்போம்.


Post a Comment