
காணத்தவறாதீர்
தினமும்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஹோரைப் பலன்கள்
ஒரு நாளின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு கிரகம் ஆக்கிரமிப்பு செய்கிறது. இதை நேரத்தை அந்த கிரகத்தின் ஹோரை என்கிறோம். நல்ல நேரம் கெட்ட நேரம் இருப்பது மாதிரி நல்ல ஹோரையும் கெட்ட ஹோரையும் உண்டு. எந்தெந்த ஹோரைகளில் என்ªன்ன காரியங்களை செய்யலாம் என பார்ப்போம்.
சூரிய ஹோரை
அரசாங்க அதிகாரிகளை சந்தித்து உதவி பெற, புதிய வேலைகளுக்கு முயற்சி செய்ய, உயில், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் எழுத, வியாதிகளுக்கு மருந்துண்ண, பிரபலமானவர்களை சந்திக்க, சுபாரிசுகளுக்கு ஏற்பாடு செய்ய, வியாபாரத்திற்கு கூட்டாளிகளின் தயவு பெற, வங்கிகளில் தொடர்பு- வைக்க, போன்ற காரியங்களுக்கு சூரிய ஓரை ஏற்றது. இந்த ஹோரையில் புது வீடு குடி போகக் கூடாது.
சந்திர ஹோரை
பஸ், ரயில், கப்பல், விமானம், மற்றும் அனைத்து வாகனங்களிலும் பயணம் செய்ய, தாய்வர்க்கத்தினரைக் கண்டு பேச, புதிய ஆடை ஆபரணங்கள் அணிய, கலைத்துறை சம்பந்தப்பட்ட பொறுப்புக்களில் ஈடுபட, பெண் பார்க்க, விசா பாஸ்போர்ட் மனுக்கள் வாங்க கொடுக்க, கல்வி புகட்ட, பசு கன்று கால்நடை வளர்க்க சந்திர ஹோரை மிகவும் உகந்தது. இந்த ஹோரையில் புது வீடு கட்டலாகாது.
செவ்வாய் ஹோரை
வாங்கிய கடன்களை தீர்க்க. நெருப்பு சம்பந்தப் பட்ட காரியங்கள் செய்ய, மண், மனை பூமி சம்பந்தமானதை விற்க, பேரம் பேச, வழக்காட, வழக்கு செய்ய, யுத்தங்கள் ஆரம்பிக்க, இரும்பு தளவாடங்கள் தயாரிக்க, புதிய ஆலைகள் தொடங்க, அடுப்பு போட, மருந்துண்ண, கருத்துக்களை மாற்றி பேச, அழிவு வேலைகள் செய்ய உகந்தது
புத ஹோரை
தந்திகள் அனுப்ப, வக்கீல்களை நேர்காண விஞ்ஞானம், ஜோதிடம், ஆராய்ச்சிகளில் ஈடுபட போட்டி, பந்தயங்களில் பங்கு கொள்ள, புதிய வேலைக்கு முயற்சி செய்ய தேர்விற்கு படிக்க ஆரம்பிக்க பத்திரிக்கைகளுக்கு கதை கவிதைகள் அனுப்ப கமிஷன் வியாபாரம் தொடங்க தாய் வர்க்கத்தைப் பற்றி பேச புகழ் பெற்றவர்களை சந்திக்க உத்தமம். இந்த ஹேரையில் நிலம் வாங்கிவோ, பெண்களைப் பற்றி பேசவோ கூடாது.
குரு ஹோரை
உபதேசம் பெற, தியானம் மந்திரம் ஜபிக்க, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க, புதிய ஆடை அணிய, பொருள் கொடுக்க வாங்க, கூட்டு வியாபாரம் செய்ய, கடன் வாங்க, அரசாங்க காரிய நிறைவிற்கு மனு போட, பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க, பெரிய மனிதர்களை சந்திக்க, அற நிலையம் மற்றும் கோவில் பணிகள் தொடங்க, பணம் சம்பந்தமான எந்த விஷயங்களில் ஈடுபட, ஆபரணங்களை சேர்க்க உத்தமம். இதில் முதல் விருந்து உண்ணக் கூடாது.
சுக்ர ஹோரை
பெண்களைப் பார்க்க, பெண்களை நேசிக்க, பெண்களின் நட்பை பெற, விவாகம் பற்றி பேச, மருந்துண்ண, வாகனம், பசு, கன்று வாங்க, புதிய கலை பயில, கிணறு குளம் வெட்டும் பணி தொடங்க, நகைகள் வாங்க, வாசனை திரவியங்கள் சேர்க்க, விருந்து, கேளிக்கை, கச்சேரி செய்ய, கடன் வசூல் செய்ய, கிரகப்ரவேசம் மற்றும் சுப காரியங்கள் ஈடுபட, கணிணித் துறையில் ஈடுபட, பத்திரிகை துறையில் ஈடுபட, புதிய வியாபார திறப்பு விழா மனைவி வர்க்கத்தாருடன் பேச சுபம் செய்ய இந்த ஹோரை சுபம். கடன் கொடுக்கலாகாது.
சனி ஹோரை
நிலம் குத்தகை விட, இரும்பு பொருட்கள் விற்க, விவசாயம் செய்ய, சொத்து நடவடிக்கை எடுக்க, பழுது இயந்திரங்களை பராமரிக்க சுபம். மற்ற அனைத்து காரியங்களுக்கும் விலக்கவும். பிரயாணம் செய்ய கூடாது. அசுப காரியங்களுக்கு உத்தமம்.