Wednesday, November 11, 2015

பேச்சு சாதுர்யமும் வாக்கு திறனும்




 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை 

வரும் 17.11.2015 முதல்

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


பேச்சு சாதுர்யமும் வாக்கு திறனும்

ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் வாக்கு திறனும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனுடன்  நகைச்சுவையாக பேசுபவர்களை தான் அனைவரும் விரும்புவார்கள். பேச்சை மாற்றி மாற்றி பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி  பேசுவது பிறரை கேலி கிண்டல் செய்து பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படும். இப்படி பேசுபவர்களை கண்டால் அனைவரும் இவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பும் இருக்காது.

பேச்சு திறன் இருப்பதற்கும் பேச்சு திறன் இல்லாதற்கும் காரணம் என்ன என ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும். வாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, அறிவுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். 2ஆம் வீட்டில் சுபகிரகங்களான சந்திரன்,சுக்கிரன்,குரு,புதன் ஆகிய கிரகங்களில் ஏதேனும் ஒன்று பலமாக அமைந்திருந்தால் நல்ல பேச்சாற்றல் உண்டாகும்.  

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தால் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் உண்டாகும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.

அதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் பகவான் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும், 2ஆம் அதிபதி சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. தன்னுடைய வள வளப் பேச்சினாலேயே பல அரிய வாய்ப்புகளை இழப்பார். எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 

2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை கண்டால் அவன் நாக்கில் சனி எனக் கூறி ஒதுங்கி கொள்வார்கள்.

Contact

For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani

MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA.


No comments: