Sunday, November 22, 2015

அதிகாரம் நிர்வாகம் சார்ந்த கல்வி அமைப்பு

கற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நடைபெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


அதிகாரம் நிர்வாகம் சார்ந்த கல்வி அமைப்பு

      படித்தவர்களுக்கு மட்டுமே இச்சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. பல்வேறு நிலை கல்வி இருந்தாலும் பலரையும் வழி நடத்தி அதிகாரமுடன் பலரை நிர்வகிக்கும் கல்வி என்பது அனைவராலும் கற்று விட முடியாது. நிர்வாகம் சார்ந்த  B.B.A, M B A   படிக்கும் யோகம் சிலருக்கே உண்டாகிறது.  மற்ற பட்ட படிப்புகள் பலதை படித்தாலும் தனது அனுபவம் மூலம் நிர்வாகம் செய்கின்ற பொறுப்பு, அதிகாரியாகும் யோகம் சிலருக்கே அமைகின்றது. நிர்வாகத்தை தரும் கிரகமாக விளங்குபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் தைரியம் துணிவுடன் எந்தவொரு செயலையும் சுறுசுறுப்பாக செய்ய வழி வகுப்பார்.

      ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று 4, 10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் 4,10ல் அமைந்தாலும் நிர்வாகம் சார்ந்த கல்வி கற்கும் யோகம் உண்டாகும். அது மட்டும் இன்றி நல்ல மன உறுதி தைரியம் துணிவுடன் எதையும் எதிர் கொள்ளும் திறனை செவ்வாய் வலுபெற்றால் தருவார். 

செவ்வாய் 10ல் அமையப் பெறுவது திக் பல அமைப்பாகும். இந்த திக் பல அமைப்பு பெற்றவர்களே மிகச்சிறந்த நிர்வாகியாகும் யோகம் பெறுகிறார்கள் நிர்வாகம் சார்ந்த கல்வியில் ஈடுபடும் ஆர்வமும் உண்டாகிறது. 10ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் அமையப் பெற்று குரு போன்ற சுப கிரக பார்வை ஏற்பட்டால் அரசாங்கம் சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பு உண்டாகும். 

சூரியன் செவ்வாய் 10ல் அமையப் பெற்றாலே நிர்வாகம் செய்யும் திறமை அதனை சார்ந்த  கல்வி கற்கும் யோகம் அமைகின்றது. 10ல் சூரியன் செவ்வாய் அமையப் பெற்று உடன் புதன் சேர்க்கை உண்டானால் ஆடிட்டிங் துறையில் கல்வி கற்று வருமான வரித்துறை போன்றவற்றில் அதிகாரியாகும் அமைப்பு ஏற்படுகிறது.

      சனி பகவான் இன்சூரன்ஸ் துறைக்கு காரகம் வகிப்பவர் அது மட்டுமின்றி 8ஆம் வீடு காப்பீட்டுத் துறை ஸ்தானமாகும். 8ஆம் வீட்டதிபதி சனி புதனுடன் இணைந்து 10ல் வலு பெற்றால்  குறிப்பாக குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றால் கற்கும் கல்வியால் காப்பீட்டுத் துறையில் அதிகாரியாக பணி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும்.
     
லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர கோணத்தில் அமையப் பெறுவது மிகவும் அற்புதமான அதிகாரம் மிகுந்த கல்வியை ஏற்படுத்தும். செவ்வாய் ஜாதகத்தில் பலம் பெற்று 3,6,10,11 போன்ற உபஜய ஸ்தானங்களில் அமையப் பெற்று லக்னாதிபதி அல்லது குருவின் பார்வையை பெற்று அமையப் பெற்றால் ஐ ஏ எஸ் கல்வி பயிலும் வாய்ப்பு அமைய பெற்று ஒரு மாவட்டத்தையே நிர்வாகம் செய்யும் ஆற்றல் உண்டாகிறது. 9க்குரிய கிரகம் எங்கு இருந்தாலும் பலம் இழக்காமல் சுபர் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருத்தல் மிகவும் அவசியம். சந்திரன், சூரியன் இருவரில் ஒருவராவது ஆட்சி உச்சம் அல்லது குரு பார்வை பெற்றிருந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்று அமையப்  பெற்றால் ஐ ஏ எஸ் போன்ற உயர் கல்வி கற்று பட்டம் பதவிகளை பெறும் யோகம் கண்டிப்பாக அமைகின்றது.

No comments: