Rasi palangal

Sunday, December 27, 2015

விருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்



விருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

நியாய அநியாயங்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது இதனால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குரு 02.08.2016 முதல் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணிபுரியுமிடத்தில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்கள் நிம்மதி குறைவு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும் விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் நெருக்கடிகள் உண்டாக கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சுமாராக தான் நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது.
அரசியல்
மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும் என்றாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விலை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலனின்றி போகும் நீர் வரத்து குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும்.
பெண்கள்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஓற்றுமை குறையாது.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புக்களால் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் தன பஞ்சமாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற சிறு சிறு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் ராகு கேது சஞ்சரிப்பது ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகம் என்பதால் எதையும் சமாளிக்க முடியும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப் பெற்றாலும் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 7,12க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் தன பஞ்சமாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எனவே உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்சனைகளை உண்டாக்கி விடும். பொருளாதார நிலை ஒரளவுக்கு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும்.

இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் 7,12க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கை கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும் என்றாலும் வரும் 02.08.2016 முதல் குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். பயணங்களால் ஒரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும்.

இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்திலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு சாதகமாக இருப்பதால் எல்லா வகையிலும் மேன்மையான பலன்கள் உண்டாகும். தடைபட்டு கொண்டிருக்கும் திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியமும் ஒரளவுக்கு சிறப்பாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் பட முடியும். சேமிப்பும் பெருகும்.

இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஜென்ம ராசியில் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது, குரு சாதமாக இருப்பதால்  குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவி போகும்.

விசாகம் 4ஆம் பாதம்
அமைதியான முகமும் வசீகரமான உடலமைப்பும் கொண்டு விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் அனைவரிடமும் அன்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 4ஆம் வீட்டிலும், ராகு 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களே ஏற்படும். இது மட்டுமின்றி ஏழரைச் சனியில் ஜென்மசனி தொடருவதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் 02.08.2016 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 
அனுஷம்
நல்ல உழைப்பாளிகளாகவும், செல்வம், செல்வாக்கினையும் கொண்டு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் உங்களின் நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழ்வீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 4ஆம் வீட்டிலும், ராகு 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்தப் பலன்களை பெறுவீர்கள். 02.08.2016 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. மங்களகரமான சுப காரியங்களும் கை கூடும். ஏழரைச் சனியில் ஜென்மசனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் செயல்படவும்.
கேட்டை
தலைசிறந்த பேச்சாளராகவும் கடவுளின் ஆசியுடனும் விளங்கும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தருக்கும் உங்களின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் எந்தச் செயலை செய்தாலும் அதில் தைரியமும், துணிவும், நிறைந்திருக்கும். உங்களின் நட்சத்திராதிபதி புதனுக்கு நட்பு கிரகங்களான ராகு கேது 4,10ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். 02.08.2016 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பயணங்களைத் தவிர்ப்பது, உற்றார், உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. 

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   1,2,3,9,
நிறம்   ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை  செவ்வாய், வியாழன்
திசை   தெற்கு
கல்    பவளம்
தெய்வம்  முருகன்

பரிகாரம்
விருச்சிக  ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4ல் கேது, 10ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது. 

கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, வெள்ளை புள்ளிகள் உடைய பழுப்பு நிற பசு போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது 

ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது.  திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கருப்புநிற ஆடை அணிவது நல்லது.

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 


Post a Comment