Thursday, December 24, 2015

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
கன்னி  உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்

அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், எப்பொழுதும் சுறுசுறுப்பானவராகவும் விளங்கும் கன்னி ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு 12 ஆம் வீட்டிலும், கேது 6 ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். குருபகவான் 02.08.2016 முடிய 12ஆம் வீட்டிலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பதால் சுப காரியங்கள் யாவும் தடைகளுக்குப் பின்பே கை கூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். சனி 3ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல் பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.  பொன் பொருள் சேரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபிட்சமான நிலையிருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சனைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர் பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும்.
அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் 12ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் 4,7க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் சனியும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 2,9க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் 4,7க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எல்லா வித தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சனி 3ல் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணம் மேற்கொள்வீர்கள். தடைபட்டு கொண்டிருந்த மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016 முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் ராசியாதிபதியான புதனுக்கு நட்புகிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களும் சுபிட்சம் நிறைந்ததாகவே இருக்கும். வரும் 02.08.2016 முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் மங்கள கரமான சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கை கூடும். சனி 3ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் பல விதமான சாதகப் பலனை பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சனி 3ல் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் முழு முயற்சியுடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்திலும், கேது பகவான் 3,8க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது ஒரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குரு 7ஆம் வீட்டை பார்ப்பதால் மணமாதவர்களுக்கு மணமாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். சனி 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்-. பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

உத்திரம் 2,3,4&ஆம் பாதங்கள்
ஒழுக்கமும், கெட்டிக்காரத் தனமும் கொண்ட உத்திர நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால், நன்றி மறவாத நல்ல குணத்தைக் கொண்டிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்-. பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் சனி 3ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
அஸ்தம்
பிறருக்கு எளிதில் உதவும் பண்பும் மரியாதையுடன் பழகும் உயர் குணமும் கொண்ட அஸ்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 3ல் சனி சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும்.
சித்திரை 1,2ஆம் பாதங்கள்
அறிவாற்றலும் கடவுள் பக்தியும் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் என்பதால் நடைமுறைக்கு ஒத்துப்போகக் கூடிய குணம் இயற்கையிலேயே இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். குரு பகவான் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 3ல் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   4,5,6,7,8
நிறம்   பச்சை, நீலம்
கிழமை  புதன், சனி
கல்    மரகத பச்சை
திசை   வடக்கு
தெய்வம்  ஸ்ரீவிஷ்ணு

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.
  குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது. 


For your consultation




Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001

Post a Comment

Intha Naal