Sunday, December 27, 2015

கும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்

கும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
கும்பம் : அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. வரும் 02.08.2016 வரை குருபகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். சனி 10ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்து செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.
அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.
மாணவ மாணவியர்
கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் சம சப்தம ஸ்தானாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் 2,11க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மைத் தீமை கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபத்தை பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகும். 
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 4,9க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் கேது பகவான் 2,11க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு 7ல் சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்து விடமுடியும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சனி 10ல் இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடைய முடியும். போட்டிகள் சற்றே குறையும். எந்த வித வம்பு வழக்குகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் 4,9க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். 02.08.2016 முதல் குரு அட்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வர வேண்டிய பண வரவுகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் விரயங்களும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது தங்கள் பணிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பது, மூலம் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் 3,8க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.

அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள்
சிறந்த பேச்சாற்றலைக் கொண்டு விளங்கும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த உங்களது நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் மானத்திற்கு அஞ்சி வாழ்வீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. 02.08.2016 வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சனி 10ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.
சதயம்
தன்னம்பிக்கையும் ஆத்ம பலமும் கொண்ட சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாகக் கெண்டிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும்  02.08.2016 வரை குரு பகவான் 7ஆம் விட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சனி 10 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 
பூரட்டாதி 1,2,3&ஆம் பாதங்கள்
நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களது நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் ஆன்மீக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடு உடையவராக இருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வரும்  02.08.2016 வரை குரு பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் கடன்கள் யாவும் குறையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சனி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  5,6,8,
கிழமை  வெள்ளி, சனி
திசை   மேற்கு
நிறம்   வெள்ளை, நீலம்
கல்    நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும் ராகு 7லும் சஞ்சாரம் செய்வதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 


Post a Comment

Intha Naal