Sunday, December 27, 2015

மகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்

மகரம்  ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
மகரம் ; உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்

அதிகமான தன்னம்பிக்கையும் எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது என்றாலும் ராசியாதிபதி சனி லாப ஸ்தானமான 11ல் மிக சாதகமாக சஞ்சரிப்பதாலும் வரும் 02.08.2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இது வரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். 

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு வங்கி மூலம் கடன்கள் கிடைக்கும்.
உத்தியோகம்
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்க பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்
பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் கிட்டும். 
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

ராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் அட்டமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது பகவான் 3,12க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குருவும் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. சனி 11ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும் என்றாலும் கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்று பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 5,10க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் 3,12க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கிடைக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு குருவும் 8ல் சஞசரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் 5,10க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். வரும் 02.08.2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞசரிக்கவிருப்பதாலும் சனி லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாக கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுகள்,பதவி உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும்.  கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். 
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குரு 9ஆம் வீட்டிலும் சனி 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன்னும் பொருளும் சேரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் திருப்தியான நிலையிருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேதுபகவான் 4,11க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கணவன் மனைவியிடையே சிறு சிறுபிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு 9ஆம் வீட்டிலும் சனி 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள்  தடை விலகி கை கூடும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும்.

உத்திராடம் 2,3,4ஆம் பாதங்கள்
காரியவாதியாகவும் லட்சியவாதியாகவும் விளங்கும் ஆற்றல் கொண்ட உத்திராட நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்வீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 2ஆம் வீட்டிலும் ராகு 8ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் அதிகதிக்கும். உங்கள் ராசியாதிபதி சனி 11ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். 02.08.2016 முதல் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் சேமிப்பு பெருகும். 
திருவோணம்
ஆத்ம பலமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட திருவோண நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் செல்வம், செல்வாக்கு யாவும் உங்களைத் தேடி வரும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 2ஆம் வீட்டிலும் ராகு 8ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. 02.08.2016 முதல் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசியாதிபதி சனி 11ல் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகள் கிட்டும். 
அவிட்டம் 1,2ஆம் பாதங்கள்
எதிர்கால லட்சியமும் அதற்கேற்ற உழைப்பாற்றலும் கொண்டுள்ள அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால், எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 2ஆம் வீட்டிலும் ராகு 8ஆம் வீட்டிலும்  சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிட்ம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. 02.08.2016 முதல் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். உங்கள் ராசியாதிபதி சனி பகவான் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் நிம்மதியான நிலையே இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   4, 5,6,7
கிழமை  சனி, புதன்
திசை   மேற்கு
நிறம்   நீலம், பச்சை
கல்    நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 2லும் ராகு 8லும் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்கு பரிகாரமாக  ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. 
கேதுவிற்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 

Post a Comment

Intha Naal