Rasi palangal

Sunday, December 27, 2015

மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்
மீனம்  ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
மீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எல்லோருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீனராசி அன்பர்களே!  வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.  02.08.2016 முதல் குரு பகவானும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலமாக நிறைவேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.
உத்தியோகம்
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா போன்றவற்றை வாங்வீர்கள். சேமிப்பும் பெருகும்.
மாணவ மாணவியர்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் 6ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சூரியனின் வீடான 6ஆம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 3,8க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் 3,8க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது ராகுவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மேன்மையானப் பலன்களே உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.வரும் 02.08.2016 முதல்  குரு 7ல் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும், வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு 7இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு உற்சாகத்தை தரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
சர்ப கிரகங்களான ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் தன பாக்கியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகளை கொடுக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி 4&ஆம் பாதம்
எண்ணற்ற தொல்லைகள் வாழ்வில் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் எல்லாரையும் அன்பாலேயே வசியப்படுத்தி விடுவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில்  சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும்.
உத்திரட்டாதி
எந்த காரியத்திலும் தனக்கு சாதகமான பலன் வரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் கடுமையான உழைப்பாளியாக இருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில்  சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றத்தை பெறுவீர்கள். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கடன்கள் குறையும். சனி 9ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். 
ரேவதி
பிடிவாத குணம் கொண்டவராகவும் தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 6ஆம் வீட்டில்  சஞ்சரிப்பதால் மறைமுக  எதிர்ப்புகள் மறையும். 02.08.2016 முதல் உங்கள் ராசியாதிபதி குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   1,2,3,9,
கிழமை  வியாழன், ஞாயிறு
திசை   வடகிழக்கு
நிறம்   மஞ்சள், சிவப்பு
கல்    புஷ்ப ராகம்
தெய்வம்  தட்சிணாமூர்த்தி

பரிகாரம் மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

For your consultation


Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 


No comments: