Rasi palangal

Monday, December 21, 2015

துலாம் ஆண்டு பலன் - 2016

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா மோகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்


துலாம்   ஆண்டு பலன்  -  2016, 

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்புகொண்ட துலா ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-8-2016 வரை பொன்னவனான குரு  லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்யவிருப்பது மூலம் எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணதிபதியாகி யோககாரகன் என்பதால் பெரிய அளவில் கெடுதிகளைச் செய்யமாட்டார். குரு பகவான் ஆண்டின் பிற்பாதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், கடன்கள் உண்டாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, அதிக மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 08-01-2016 முதல் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். புத்திர வழியில் எதிர்பாராத செலவும் வீண் விரயமும் அதனால் மன அமைதிக் குறைவும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் சாதகப் பலனைப் பெறுவீர்கள்  

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைப் பளுவும் குறையும் என்றாலும் ஏழரைச் சனி தொடருவதால் உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அவப்பெயர்களும் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களும் ஏற்படும்.  

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் முற்பாதியில் தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களாலும் ஓரளவுக்கு நற்பலனைப் பெறமுடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடிவந்து லாபம் தரும். ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடனிருக்கும் தொழிலாளர்களையும் அனு சரித்து நடந்துகொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். 

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். பெரிய அளவில் லாபத்தைப் பெறமுடியாவிட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆகஸ்டு மாதம் முதல் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாது. மற்றவர்களிடம் அவப்பெயர் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.  

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பிறரின் ஏச்சுப்பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல், தங்கள் காரியங்களில் கருத்துடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்டு மாதம் முதல் நீங்கள் அவசியம் மேடைப் பேச்சுகளிலும் மற்றவர்களிடம் பேசும்போதும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகளால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும். 

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால், சற்று அலைச்சல், உடல்சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. நெருங்கியவர்களாலும் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். ஞாபக மறதி, கவனக்குறைவு போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மனநிம்மதி அளிப்பதாக அமையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையானது உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். நல்ல  நண்பர்களாக தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது.


மாதப்பலன்
ஜனவரி 

மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்களிலும் எளிதில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-01-2015 காலை 04.31 மணி முதல் 21-01-2016 காலை 08.33 மணி வரை. 

பிப்ரவரி 

ஜென்ம ராசியில் செவ்வாயும், 2-ல் சனியும் 4-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-02-2016 காலை 09.53 மணி முதல் 17-02-2016 மதியம் 02.19 மணி வரை. 

மார்ச் 

லாப ஸ்தானமான 11-ல்  குரு, ராகு சஞ்சாரம்செய்வதும் மாத பிற் பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். நெருங்கி யவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவரும். கூட்டுத் தொழில் செய்பவர்களும் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ராகு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-03-2016 மாலை 04.39 மணி முதல் 15-03-2016 இரவு 07.58 மணி வரை.

ஏப்ரல் 

ருண ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் லாப ஸ்தானமான 7-ல் புதன், 11-ல் குரு ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எதிர்பாராத பணவரவுகளால் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர் களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். பண விஷயங்களில் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியளிக்கும். சனிக்குப் பரிகாரங்கள் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 10-04-2016 அதிகாலை 01.55மணி முதல் 12-04-2016 காலை 03.28 மணி வரை.

மே 

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 7-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்கமுடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் தேவை. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தி யாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளி களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 07-05-2016 மதியம் 12.41 மணி முதல் 09-05-2016 மதியம் 01.04 மணி வரை.

ஜூன் 

லாப ஸ்தானமான 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.  தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 03-06-2016 இரவு 11.02 மணி முதல் 05-06-2016 இரவு 11.28 மணி வரை.

ஜூலை  

மாதக்கோளான சூரியன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-07-2016 காலை 07.29 மணி முதல் 03-07-2016 காலை 08.59 மணி வரை மற்றும் 28-07-2016 மதியம் 01.47 மணி முதல் 30-07-2016 மாலை 6.33 மணி வரை.

ஆகஸ்ட் 

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களையும் பொருளாதாரரீதியாக உயர்வுகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். அரசுவழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். பணவரவுகள் தாராளமாக இருக்குமென்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-08-2016 இரவு 07.10 மணி முதல் 26-08-2016 இரவு 10.21 மணி வரை.

செப்டம்பர் 

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-09-2016 அதிகாலை 01.38 மணி முதல் 23-09-2016 அதிகாலை 03.53 மணி வரை.

அக்டோபர் 

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், குரு சஞ்சாரம்செய்வது வீண் செலவுகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும். சிவவழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-10-2016 காலை 10.35 மணி முதல் 20-10-2016 காலை 11.07 மணி வரை.

நவம்பர் 

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் கஷ்டப்படவேண்டியிருக்கும். வரவுக்குமீறிய செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடனிருப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 14-11-2016 இரவு 09.39 மணி முதல் 16-11-2016 இரவு 08.56 மணி வரை.

டிசம்பர் 

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் உண்டாகும். ஒற்றுமைக் குறைவு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகளிலும் தடைகள் ஏற்படுவதால் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோ கத்திலிருப்பவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நற்பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-12-2016 காலை 08.50 மணி முதல் 14-12-.2016 காலை 08.14 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         4, 5, 6, 7, 8.    

நிறம்:     வெள்ளை, பச்சை.    

கிழமை:     வெள்ளி, புதன்.

திசை:     தென்கிழக்கு.    

கல்:         வைரம்.    

தெய்வம்:     லட்சுமி.

No comments: