Saturday, February 27, 2016

வார ராசிப்பலன் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016

 மாபெரும் வெற்றி  - 15 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

       2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன். 
தற்போது 950 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 15  லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.  எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள். 


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்                                               வாங்கி படிக்க தவறாதீர்கள் 

மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்

2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)             

வார ராசிப்பலன்  பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை 2016


மேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சூரியன் கேது சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனி அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்  28,5

சந்திராஷ்டமம் 29.02.2016 மாலை 05.37 மணி முதல் 03.03.2016 காலை 04.19 மணி வரை. 

ரிஷபம்  ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சுக்கிரன், புதன் 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்புன் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு புரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும்.  அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள்  28,29,1,2

சந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை. 

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சனி, செவ்வாய் 3ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள்  1,2,3,4

சந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை. 

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த வாரம் ஏற்ற இறக்கமான பலன்களையே அடைய முடியும். 2 குரு  வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் 10&ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம். 

வெற்றிதரும் நாட்கள்  3,4,5


சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சனி, செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் உற்றார் உறவினர்களும் சாதகமற்ற செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசுரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பிறர் தட்டி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வடைய முடியும். முன் கோபத்தை குறைப்பது, பேசவ்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம். 

வெற்றிதரும் நாட்கள்  28,29,5

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி, செவ்வாய் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல மேன்மை உண்டாகும். துர்கை அ¬ம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  1,2

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் புதன் சுக்கிரன் 11ல் ராகு சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக அமைவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும், பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்ற கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களும் கல்வியில் உயர்வடைய முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்யவும். 

வெற்றிதரும் நாட்கள் 28,29,3,4,5

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சரிப்பதும், ஏழரைசனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம். 

வெற்றிதரும் நாட்கள்  1,2,5

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் கேது சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால்  கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசுரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்  28,29,3,4,5

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.சிவபொருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்  28,29,5

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே,ஜென்ம ராசியில் சூரிய சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். தினமும் விநாககரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்  1,2,3,4,5

மீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே,ஜென்ம ராசிக்கு 11ல் புதன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.

வெற்றிதரும் நாட்கள்  3,4,5

சந்திராஷ்டமம் 27.02.2016 அதிகாலை 04.54 மணி முதல் 29.02.2016 மாலை 05.37 மணி வரை. 

Contact

FOR YOUR CONSULTATIONPLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   


மார்ச் மாத ராசிப்பலன் - சுப முகூர்த்த நாட்கள் 2016
  வாங்கி படிக்க தவறாதீர்கள் 

மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்


2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்


(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)

                                              
 மார்ச் மாத ராசிப்பலன் - 
சுப முகூர்த்த நாட்கள்  2016

மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு  10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சாதகமான அமைப்பாகும். இதனால் நினைத்தது நிறைவேறும். உங்களது வெற்றிகள் தொடர்ந்தபடியே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். எதிர்பாராத தீடீர் தன வரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். ணூணவன் மனைவியிடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் பொருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலில் மேன்மையை உண்டாக்கும். 
பரிகாரம். சிவபொருமானை வழிபடுவது பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.03.2016 இரவு 12.22 மணி முதல் 30.03.2016 பகல் 11.48 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் சாதமாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகளே உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். குடும்பவாழ்வில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். என்றாலும் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையே இருக்கும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்விகள் கிட்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை. 
மற்றும் 30.03.2016 பகல் 11.48 மணி முதல் 01.04.2016 இரவு 08.22 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு 6ல் சனி செவ்வாய் 10ல் புதன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். தீடீர் தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்ப பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்கள் பெருகும்-. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தி யோக உயர்வையும், தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோச கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்தவொரு செயலிலும் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப  நண்டுபிடி போட்டு செய்து  முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம்  செய்வதும் மாத கோளான சூரியன் 8ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ்நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மறந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும்.  
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு  குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.03.2016 மதியம் 02.15 மணி முதல் 09.03.2016 மதியம் 03.40 மணி வரை. 

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை  வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவார்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படும். 
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.03.2016 மதியம் 03.40 மணி முதல்11.03.2016 மதியம்  03.41  மணி வரை. 

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எல்லா வகையிலும் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி என பல்வேறு அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர் பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்களும் குறையும். 
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட உங்களுக்கு 11&ல் குருவும், ராகுவும் சஞ்சரிப்பதும்,  மாத பிற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்பும் அமையும். பொன் பொருள் சேரும்.

பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 13.03.2016 மாலை 04.39 மணி முதல் 15.03.2016 இரவு 07.58 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 4&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளையே சந்திப்பீர்கள். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். குடும்பத்தில் உண்டாக கூடிய பொருளாதார தட்டுபாட்டினால் கடன்கள்  உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்கள். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.03.2016 இரவு 07.58 மணி முதல் 18.03.2016 அதிகாலை 02.20 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு 2ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 3ல் கேது சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைவீர்கள். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். 
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.03.2016 அதிகாலை 02.20 முதல் 20.03.2016 பகல் 11.35 மணி மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால்  மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகும் நிதானம் கொண்ட உங்களுக்கு 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்களும் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு எல்லா வகையிலும் உயர்வுகள் உண்டாகும். 
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 20.03.2016 பகல் 11.35 மணி முதல் 22.03.2016 இரவு 10.59 மணி மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். 
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 22.03.2016 இரவு 10.59 மணி மணி முதல் 25.03.2016 பகல் 11.37 மணி வரை

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 12ல் சூரியன் 6ல் குர சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்றாலும் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக செயல்படுவது பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. குடம்க ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவை பெற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். 
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

06.03.2016 மாசி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.

10.03.2016 மாசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

11.03.2016 மாசி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியைசிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

18.03.2016 பங்குனி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள்  மீன  இலக்கினம். வளர்பிறை

25.03.2016 பங்குனி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள்  மீன   இலக்கினம். தேய்பிறை.

Contact

FOR YOUR CONSULTATIONPLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   

Friday, February 26, 2016

எந்த தசா யாருக்கு யோகம்?

எந்த தசா யாருக்கு யோகம்?
           வாங்கி படிக்க தவறாதீர்கள் 


மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்


2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்


(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)

                                              


      இன்றைய வாழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் நவகிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஜெனன கால கிரக அமைப்பு கொண்டு ஜாதகம் துல்லியமாக கணிக்கப்பட்டால் ஒருவரது அன்றாட வாழ்க்கையினை தெள்ளத் தெளிவாக கணித்து விடலாம்.

      குறிப்பாக ஒரு ஜாதகத்தில் பலா பலன்களை நிர்ணயம் செய்கின்ற போது ஜனன கால தசா புக்தி இருப்பைக் கொண்டு அடுத்தடுத்து வரக்கூடிய திசை மற்றும் புத்திகளைக் கொண்டு பலா பலன்களை நிர்ணயம் செய்கின்றோம். குறிப்பாக கோட்சார பலன்கள் ஐம்பது சதவிகிதமும் தசா புக்தி பலன்கள் 50 சதவீதமும் பலன்களை வழங்கும். குறிப்பாக தசா புக்தி பலன்களை பொறுத்த வரையில் நடப்பில் உள்ள திசையானது ஜென்ம லக்னத்திற்கு யோகத்தைக் கொடுக்கக் கூடிய கிரகத்தின் திசையாக இருந்தால் தான் அனுகூலமான பலன்களை தரும்.

      குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகமாக தசா நாதன் இருந்தாலும் அவருக்கு உரிய சாதகமான இடத்தில் இருந்தாலும் நட்பு வீட்டில் அமைந்தாலும் மட்டுமே நற்பலனை வழங்குவார். அதுவே பகை வீடாக இருந்தால் அனுகூலப்பலன்கள் அடைய இடையூறுகள் உண்டாகும். உதாரணமாக சனி பகவான் 3,6,10,11ல் அமையப் பெற்றால் சனி திசையில் பலா பலன்களை வாரி வழங்கும் என்றாலும் அதுவே சனியானவர் தனக்கு பகை கிரகமான செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் வீட்டில் அமையப் பெற்று தசா புக்தி நடைபெற்றால் கெடு பலன்களை வழங்குவார்.

      உதாரணமாக மிதுன லக்னத்திற்கு சனி பகவான் நட்பு கிரகம் என்றாலும் 6 ஆம் வீட்டில் அமையப் பெற்றால் யோகம் வழங்க வேண்டுமென்றாலும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் அமைவதால் அனுகூலப்பலன்களை வழங்காமல் நிறைய எதிர்ப்பு பகைமை எல்லாம் உண்டாக்குவார்.

      அது போல கேந்திர திரிகோணங்களில் அமைகின்ற கிரகங்களின் தசா புக்தி அனுகூலமான பலன்களை உண்டாகும் என்றாலும் தசா நாதன் பாதகாதிபதி சாரமோ 6,8,12க்கு அதிபதிகளின் சாரமோ பெற்றிருந்தால் அனுகூலமற்ற பலன்களை வழங்குவார். பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு நட்பு கிரகங்களின் தசா புக்தியில் தான் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

      உதாரணமான நவ கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். அது போல சனி, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக விளங்குகிறார்கள். பொதுவாக ஜென்ம லக்னாதிபதியும் தசா நாதனும், ஒருவருக்கொருவர் நட்பு கிரகமாக இருந்தால் அனுகூலமான பலனை எளிதில் அடைய முடியும்.
     
பொதுவாக ஒருவருக்கு ஜென்ம கால முதல் திசை முதல் நடப்பில் இருக்கக் கூடிய தசையானது. 3வது திசையாக இருந்தால் 3வது திசையில் பெரிய அளவிற்கு முன்னேற்றங்களை அடைய முடியாது. ஒருவருக்கு 3வது திசையானது எவ்வளவு தான் யோகக்காரனாக இருந்தாலும் அனுகூலமான பலன்களை அடைய முடியாது. உதாரணமாக அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும் 2வது திசையாக சுக்ர திசையும் 3வது திசையாக சூரிய திசையும் வரும்.
     
கேது திசையில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக சூரிய திசை வருவதால் சூரிய திசை பிரகாசமான பலன்களைத் தராது. அது போல உதாரணமாக புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசையும் 2வது திசையாக சனி திசையும் 3வது திசையாக புதன் திசையும் வரும் புதன் திசை 3வது திசை என்பதால் எவ்வளவு திறமை இருந்தாலும் குரு திசையில் பிறந்தவர்களுக்கு புதன் மகா திசை நட்பில் இருக்கும் போது பெரிய அனுகூலத்தைத் தராது.
     
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலும் தன லாப ஸ்தானத்திலும் அமைகின்ற கிரகங்கள் பகை  கிரக சேர்க்கை பெறாமல் வலுப் பெற்று அமையப் பெற்றால் அனுகூலமான பலன்களை வழங்குவார்கள்.

      அதுவே பலம் பெற்ற கிரகமானது தசா நாதனுக்கு நட்பு கிரகமாக அமையப் பெற்று புத்தி நடைபெற்றால் அந்த யோகத்தின் பலனை வர்ணிக்க முடியாது. பொதுவாக திசையானது சுக்கிரன், புதன் சனி போன்றவை பலம் பெற்று இருந்தால் அந்த திசை காலங்களில் யோகத்தின் பலனை எவராலும் வர்ணிக்க முடியாது.

Contact

FOR YOUR CONSULTATIONPLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   Monday, February 22, 2016

விளையாட்டுத்துறையில் ஈடுபாடு

வாங்கி படிக்க தவறாதீர்கள் 


மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்


2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்


(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது-. பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே பல கலைகளில் ஈடுபடுத்தினால் உடல் பலம் பெறுவது மட்டுமின்றி மனபலமும் உண்டாகிறது. ஏதாவதுவது ஒரு துறையை முழுமையாக கற்று தேறும் போது வாழ்க்கையில் பயமின்றி முன்னேற முடிகிறது, தன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளருகிறது. அதனால் பணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே பெற்றோர் முழுமூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை எதிலும் அவர்கள் விருப்பமின்றி திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதையும் ஆராய்ந்து அதில் ஈடுபடுத்துவது ஊக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது.  

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டைக் கொண்டு விளையாட்டு கேளிக்கை சூதாட்டம் பொழுது போக்கு செயல்கள் பற்றி அறியலாம். குறிப்பாக விளையாட்டுத் துறைக்கு தைரியம், துணிவு வேண்டும். செவ்வாய் ஒரு ஜாதகத்தில் வலிமையாக அமையப் பெற்றால் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

அது போல நல்ல உடல் நலமும் நல்ல ஆரோக்கியமும் மிகவும் அவசியம். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் தான் நல்ல உடல் பலம் இருக்கும். அது மட்டுமின்றி மன பலம் மிகவும் அவசியம். அதற்கு சந்திரன் பலம் பெற வேண்டும். அது போல விளையாட்டில் ஈடுபட நல்ல புத்தி கூர்மை வேண்டும். அதற்கு புத்திக்காரகன் புதன் பலம் பெற வேண்டும்.

 ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டு விளையாட்டைப் பற்றியும் அதனுடன் வலிமை பெறும் கிரகங்களை வைத்து எந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும் என்பதனைப் பற்றியும் தெளிவாகக் கூறலாம். விளையாட்டில் பலவிதம் உண்டு. அதில் ஒட்டப் பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாக ஜென்ம லக்னத்திற்கு 3,12 இடங்களையும் சனி செவ்வாயையும் பார்க்க வேண்டும் 12ம் வீடு கால்களை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.

சனி செவ்வாய் பலம் பெற்று 3,12ல் பலமாக அமைய பெற்றால் கைப் பந்து. கால் பந்து ஒடி விளையாடும் விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். பொதுவாக கால் பந்து விளையாட்டிற்கு 3,5,12ஆம் பாவத்தையும் சனி பகவானையும் பார்க்க வேண்டும். கைப்பந்து விளையாட்டிற்கு 3,5ஆம் பாவத்தையும் செவ்வாயையும் பார்க்க வேண்டும். 

நவ கிரகங்களில் சந்திரன் சுக்கிரன் நீர்கிரகங்கள் ஆகும்.  5ம் வீட்டில் சுக்கிரன் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும். 

 புத்திக்கு வேலை தரக் கூடிய விளையாட்டாகக் கருதக் கூடியவை கேரம் மற்றும் செஸ் இவைகளில்  ஈடுபட புதன் பகவான் பலம் பெற வேண்டும். 5ல் புதன் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி புதன் சேர்க்கை பெற்றாலும் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு உண்டாகும்.  

ஆக 5ஆம் இடமும் செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டு துறையில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.

Contact

FOR YOUR CONSULTATIONPLEASE CONTACT MY POSTAL ADDRESS  

JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.

WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda